காண்பவரானார்க் ளென்றுஉள்ளது. கன்றால் விளவெறிந்த கதை - கம்சனால் ஏவப்பட்ட கபித்தாசுரன், விளாமரத்தின்வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்போது தான் மேல்விழுந்து கொல்வதாக எண்ணிவந்துநிற்க, அதனையறிந்து கிருஷ்ணபகவான் அவ்வாறே தன்னை முட்டிக்கொல்வதாகக் கருதி ஒருகன்றின் வடிவங்கொண்டு தான் மேய்க்குங் கன்றுகளோடு கலந்திருந்த வல்ஸாசுரனைப் பின்னங்கால்களைப்பிடித்து எடுத்துச்சுழற்றி விளாமரத்தின்மேலேறிய, இருவரும் இறந்து தமது அசுரவடிவத்துடன் விழுந்திட்டனரென்பதாம். (537) வேறு. 63.-கண்ணன்விலக்கவே, மற்றையரசர்கள் தம்தம்ஊர் சேர்தல். வண்ணநூன் முனிவ ரல்லர் மருத்து வான்மருத்து நல்கும் அண்ணலங் குமர ராமென் றயிர்ப்புறு மரசர் யாரும் கண்ணனால் விலக்கப் பட்டுக் கடிநகர் தோறுந் தங்கள் எண்ணமும் பயனும் வேறா வெய்தின ரென்ப மன்னோ. |
(இ-ள்.) '(இவ்விருவரும்), வண்ணம் நூல் முனிவர் அல்லர் - அழகிய பூணூலையுடைய அந்தண ரல்லர்; மருத்துவான் மருத்து நல்கும் அண்ணல் அம் குமரர் - இந்திரனும் வாயுவும் பெற்ற பெருமையையுடைய அழகிய புத்திரர்களாகிய அருச்சுனனும் வீமனுமாவர்,' என்று-, அயிர்ப்பு உறும் - சற்தேகங்கொண்ட, அரசர் யார்உம் - மற்றையரசர்களெல்லோரும், (பின்பு), கண்ணனால் விலக்கப்பட்டு - கிருஷ்ணனால் (இனிப் போர்வேண்டாவென்று) விலக்கப்பட்டு, தங்கள் எண்ணம்உம் பயன்உம் வேறு ஆ - தங்கள் நினைப்பும் அதன் பயனும்வேறாக, கடிநகர் தோறுஉம் எய்தினர் - பாதுகாவலையுடைய தம்தம் நகரத்திற் சென்று சேர்ந்தார்கள்;(எ-று.)-என்ப, மன் ஓ - அசைகள், திரௌபதியைச் சுயம்வரத்தில் மணஞ்செய்துகொள்ள விரும்பிவந்த தங்கள் எண்ணமும், இங்குத் தங்களுக்குநேர்ந்த அவமானமும் மாறுபாடுடைமையால், 'எண்ணமும் பயனும்வேறா' என்றார். மன்னவர்கள் துருபதனோடு பொருமாறு மாறுபட, போரக்குச் சித்தராகி அருச்சுனனும் வீமனும் கர்ணசல்லியரைவெல்ல, தருமன் முதலியோர் துரியோதனாதியரை வென்றனராக, மீண்டும் அரசர்கள் குழுமிப்போர்வளைக்க முனைகையில் ஸ்ரீக்ருஷ்ணபகவான் அப்போரை விலக்கினனென்றுவியாசபாரதம் கூறும். இதுமுதல் பத்துக் கவிகள் - இச்சருக்கத்தின் முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள். (538) 64.- பாண்டவர் குந்தியிடஞ்சென்று 'இன்று ஒருபிச்சை பெற்றோம்' எனல். அன்றிலக்கெய்தகோவுந் துணைவருமானவெம்போர் வென்றுகொற்றவையோடொக்கு மின்னிடைப்பொன்னுந்தாமும் சென்றுமட்கலஞ்செய்கம்மி செழுமனைமுன்றிலெய்தி இன்றுபெற்றனமோரைய மென்செய்வதிதனையென்றார். |
(இ-ள்.) அன்று இலக்கு எய்த கோஉம் - அன்றைத்தினத்தில் இலக்கையெய்த சிறப்புள்ள அருச்சுனனும், துணைவர்உம் - |