மற்றை அவனுடன்பிறந்தவர்களும், - ஆன வெம் போர்வென்று-நிழந்தத கொடிய போரிற்பகைவென்றபின், நோற்றவையோடுஒக்கும் மின் இடை பொன்உம் தாம்உம் - வீரலஷ்மியோடு ஒத்தமின்னல்போன்ற இடையையுடைய செல்வப் பெண்ணான திரௌபதியும் தாங்களும், சென்று - போய், மண் கலம் செய் கம்மி செழுமனை முன்றில் எய்தி - மட்பாத்திரங்களைச்செய்யுந்தொழிலையுடையகுயவனது செழுமையான வீட்டின் முற்றத்தை யடைந்து, (அவ்வீட்டினுள்ளே யிருந்த தங்கள் தாயைக் குறித்து), 'இன்று ஓர் ஐயம் பெற்றனம் - இன்றையத்தினத்தில் நுகரப்படும்பொருளொன்றைப் பெற்றுவந்தோம்; இதனை என் செய்வது - இதனைஎன்ன செய்வது?' என்றார்;(எ-று.) சிலகாலமாய் அந்தணவடிவங்கொண்டுள்ள இவர்களில் அருச்சுனனும் வீமனும்நாள்தோறும் வெளிச்சென்று தமது சாதிக்கு உரிய இரத்தல் தொழிலால் உணவைஈட்டிக்கொணர்ந்து மீண்டுவந்தடனே தம்தாயை நோக்கி 'இன்றுபிக்ஷைகொணர்ந்தோம்' என்றுசொல்லி அவளனுமதிபெற்று அதனைத் தமையன் தம்பியருடன் உண்ணும் வழக்கத்தின்படி, திரௌபதியைக் கொணர்ந்த தினத்தலும் கூறுகின்றார்களாதலால், 'இன்று பெற்றனமோரையம் ' என்றார். பகைவென்று கைக்கொள்ளப்பட்டமையின் திரௌபதிக்குக் கொற்றவை உவமை கூறப்பட்டனள்,- 'கன்மிசெழுமனை' என்றும்பாடம். (539) 65.- அதனை அனைவரும் உண்ணும் ' என்று கூறியபின், குந்தி திரௌபதியைப் பார்த்தல். உள்ளிருந்தன்னைமைந்த ருரைத்தசொற்கேட்டுத்தேவர் தெள்ளமுதென்னமக்காள் சேரநீரருந்துமென்னாப் புள்ளினமொடுங்குமாலைப் பொழுதவள்புறம்பரெய்திக் கள்ளவிழ்கூந்தலாளைக் கரும்பெனவிரும்பிக்கண்டாள். |
(இ-ள்.) மைந்தன் உரைத்த சொல் - (தன்) பிள்ளைகளான பாண்டவர்கள் சொன்ன வார்த்தையை, அன்னை - தாயாகியகுந்தி, உள் இருந்து கேட்டு - (தான்) உள்ளே யிருந்துகொண்டே கேட்டு, (அப்பிள்ளைகளை நோக்கி), 'மக்காள் - புத்திரர்களே! நீர் - நீங்கள், தெள்தேவர் அமுது என்ன - தெளிவானதேவாமிருதத்தைப்போல (மிகவும் இனிமையாக), சேர அருந்தும் - ஒருங்குஉண்ணுங்கள்,' என்னா -என்றுசொல்லி, (பின்பு), அவள்-அந்தக்குந்தி தேவியானவள், புள் இனம் ஒடுங்கும் மாலைபொழுது - பறவைக்கூட்டங்கள் (தம் தம் கூடுகளில்) ஒடுங்கும்படியான (அந்த) மாலைக்காலத்திலே, புறம்பர் எய்தி - (உள்ளிருந்து) வெளியே வந்து, கள் அவிழ்கூந்தலாளை - (சூடியமலர்களின்று) தேள்சொரியுங் கூந்தலையுடைய திரௌபதியை, கரும்பு என - கரும்பைப்போல, விரும்பிகண்டாள் - மகிழ்ந்துகாண்பவளானாள்; (எ-று.) 'பொழுதிவன்' என்றும்பாடம். 66.-கழிவிரக்கமுற்ற குந்திக்குத் தருமன்தேறுதல்கூறல். என்னினைந் தென்சொன்னேன்மற்றென்செய்தேனென்றுசோரும் அன்னை யைவணங்கிநின்சொ லாரணப்படியதாகும் நின்னினை வன்றாலெங்க ணெஞ்சிலுநினைவுண்டென்றான் தன்னிகரிலாதகேள்வி சான்றசீர்த்தருமனென்பான். |
|