பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்31

புணர்வல் - உனது தோளைச் சேர்வேன் [உன்னை மணந்துகொள்வேன்] பரிந்து-
இரக்கங்கொண்டு, எனை - என்செயலை, மறுத்தி ஏல் - மறுப்பாயானால், அன்று-
(என்றைக்கு மறுக்கின்றாயோ) அன்றைக்கு, பரிவொடு - மனவருத்தத்தோடு, இ
பிறப்புமாற்றி- இந்தப் பிறவியை மாற்றிக்கொண்டு, உனை - உன்னை, பிரிந்து-,
அகன்றிடுவன்- நீங்கிவிடுவேன்; (எ-று.) - புரிந்ததுஎன்பது - இயல்பினால் வந்த
காலவழுவமைதி.(51)

44.மெய்தருவிதியினேன் விரதமற்றிவை
எய்தரிதொருவரா லெய்தவல்லையேல்
கைதருகெனப்பெருங் காதலாளனும்
உய்வரிதெனவிசைந் துடன்படுத்தினான்.

     (இ - ள்.) 'மெய் தரு விதியினேன் - உண்மையாகப் பொருந்திய
நியமத்தையுடைய எனது, விரதம் - கொள்கைகளாகிய, இவை - இவைகள்,
ஒருவரால்- ஒருத்தரால், எய்த - செய்தல், அரிது - அருமையானது: எய்த
வல்லைஏல் -(இதனைச்) செய்ய வல்லமை யுடையையே யானால், கை தருக -
பாணிக்கிரகணஞ்செய்துகொள்க,' என - என்று (அந்தக்கங்காநதியன்
பெண்தெய்வம்)கூற,- பெருங்காதலாளன் உம் - (அம்மங்கையினிடத்து)
மிக்ககாதல் கொண்டவனானசந்தனுவும், 'உய்வுஅரிது- (இவள் கூறும்
நிபந்தனைக்கு இசைந்தாவது இவளைமணம்புரியவேண்டும்: இல்லாவிட்டால்)
உயிர் பிழைத்தல் முடியாது, ' என - என்றுகருதியதனால், இசைந்து -
(அவளுடைய நிபந்தனைகட்கு) உடன்பட்டு, உடன்படுத்தினான் - (தனக்கு
மனைவியாகுமாறு அவளை) இசைவித்தான்; (எ -று.)

     விவாகமென்பது - வடமொழியில் பாணிக்கிரகணமென்று பெயர் பெறுதலால்,
மணக்கஎன்ற பொருளில், 'கை தருக' எனப்பட்டது; ஒன்றை நிச்சயிப்பவர்
கையறைந்து தருதல் இயற்கை யாதலால், கங்கையாள் என்நிபந்தனைக்கு நீ
உடன்பட்டமைவிளங்குமாறு கையெறிந்து தருக என்றபொருளில், 'கை தருக'
என்றாளென்றலும்ஒன்று. இங்குச் சந்தனுவைப் பெருங்காதலாளன் என்ற பெயராற்
குறித்தது-பெருங்காதலையுடையவனா யிருந்ததனால்தான் அந்தக் கங்கைகூறிய
கடியநிபந்தனைக்கு உட்பட்டு அவளை மணந்தானென்ற கருத்தைப் புலப்படுத்தும்.
                                                           (52)

45.- தன்னை மணத்தற்குக் கங்கையாளை உடன்படுமாறு
சந்தனு கூறுதல்.

எனதுயிரரசு வாழ் வென்பயாவையும்
நினதுநின்னேவலி னிற்பன்யானென
வனிதையைமருட்டினான் மன்றலெண்ணியே
தனதனுநிகரிலாத் தனமகீபனே.

     (இ - ள்.) தன தன்உம் நிகர் இலா தனம் மகீபன் - குபேரனும்
ஒப்பாதலில்லாதபெருஞ்செல்வத்தையுடைய சந்தனுராசன்,- வனிதையை -
அந்தக்கங்கையின்பெண்தெய்வத்தை, மன்றல் எண்ணி- விவாகஞ்செய்து
கொள்ளவேணுமென்பதைநினைந்து,- 'எனது உயிர் - என்னுடைய உயிரும், அரசு -
இராச்சியமும், வாழ்வு- வாழ்வும், என்ப - என்றுசொல்லப்படுபவையான,
யாவைஉம் -எல்லாமும், நினது - உன்னுடையது: யான்-, நின் ஏவலில் நிற்பன்-
உன்