உடம்புநீங்குங்காலத்து அடுத்த வினையும், அதுகாட்டுகங் கதி நிமித்தங்களும், அக்கதியினிடத்து அவாவும், உயிரினிடத்துமுறையேவந்து உதிக்க, அறிவை மோகம் மறைக்க, அவ்வுயிரை அவ்வவா அக்கதியிற் கொண்டுசெலுத்து மாதலால், 'சிந்தித்த வண்ணம் அந்தப்பதியையடைந்தாள்' என்றார். மௌத்கல்யன் இல்லறவாழ்க்கைக்கு அஞ்சித் துறவறஞ்சேர்ந்தன னென்க. (554) 80. | அன்னோனகலவவன்மேலவ ளாசைவிஞ்சி என்னோபுரிவதினியென்றலு மேந்தல்கூற்றால் தன்னோர்வடிவினொருகூறொரு தையலாளும் முன்னோனைநோக்கித்தவஞ்செய்தனண் மூரல்வாயாள். |
(இ-ள்,) அன்னோன் அகல-(தன்கருத்துக்கு இணங்காமல்) அந்த மௌத்கல்யன் விலகிச்செல்லுமளவில்,- அவள் - அந்த இந்திரசேனை, அவன்மேல் ஆசைவிஞ்சி-அவனிடம் விருப்பம் மிக்கு, இனிபுரிவது என்னோ என்றலும்,- (உன்னைப்பிரிந்து) இனி (நான்) செய்வது யாதோ?' என்று வினாவிய வளவிலே,- ஏந்தல் கூற்றால், அக்கணவன்சொன்ன வார்த்தையின்படி, மூரல் வாயாள்- புன்சிரிப்புக்கொண்டவாயையுடைய அவள், தன் ஓர் வடிவின் ஒரு கூறு ஒரு தையல் ஆளும் முன்னோனை நோக்கி-தனது ஒருவடிவத்திலே ஒருபாதியில் ஒருபெண்ணை (அம்பிகையை)க்கொண்டுள்ள கடவுளான சிவபிரானைக் குறித்து, தவஞ்செய்தனன்-; (எ- று.) தவத்திற்கு இடையூறாக இந்திரசேனை தன்னைமணந்து கொள்ளுமாறு வேண்டவே, அன்னோன் 'நீ என்தவத்திற்கு இடையூறுபுரிவதனால் துருபதபுத்திரியாய்ப் பிறக்க, உன்னை ஐவர் மணப்பர்' என்று சபித்தானாக, பிறகு சிவனை நோக்கித்தவம்புரிந்தாளென்று வியாசபாரதமும், தவம்புரியுமாறு மௌத்கல்யன் கூறியதாகப் பாலபாரதமும் கூறும். மிஞ்சி என்றும் பாடம். (555) 81. | ஐந்தானனத்தோனருள்செய்ய வழகின்மிக்காள் ஐந்தானசொல்லால்கணவற்றரு கையவென்றாள் ஐந்தானசொல்லானளித்தான்மற்றவனுமுன்னாள் ஐந்தானபோகமிவளெய்திய வாறறிந்தே. |
(இ-ள்.) ஐந்து ஆனனத்தோன்-ஐந்துமுகங்களையுடையவனான சிவபிரான், அருள் செய்ய-கருணைசெய்ய (பிரசன்னனாய்ப் பிரதியக்ஷமாக), அழகில் மிக்காள் - அழகிற் சிறந்தவளான இந்திரசேனை, ஐந்து ஆன சொல்லால் கணவன் தருக ஐய என்றாள் - 'சுவாமி! (எனக்குக்) கணவனைத் தருவாயாக' என்று ஐந்துமுறை சொல்லி வேண்டினாள்; அவன்உம்-பஞ்சாநந மூர்த்தியான அச்சிவபிரானும், இவள் முன் நாள் ஐந்து ஆன போகம் எய்திய ஆறு அறிந்து- இவள் முற்பிறப்பில் (தன் புருஷனது) ஐந்துவடிவங்களோடுகூடி இன்பம் அனுபவித்த தன்மையைத் திருவுள்ளத்திற் கொண்டு, ஐந்து ஆன சொல்லான் அளித்தான் - 'அங்ஙனமே ஆகுக' என்று ஐந்துமுறைகூறி அருள்செய்தான்; (எ-று.)-மற்று - அசை. இவள் தவத்துக்குஉகந்த அப்பிரான் கட்புலனாக, இவள் 'எனக்குஏற்ற கணவனைத் தருக' என்று ஆதரத்தால் ஐந்துதரம் |