கையில் கங்கையிலே ஒரு பொற்றாமரைமலரைக் கண்டு அதிசயிக்க, அவர்களுள் இந்திரன் அம்மலரினருகில்நின்ற மங்கையைநோக்கி 'இதுஎன்?, என்று வினாவினா னென முதனூலால் விவரம்உணர்க. 83. | அவனைத்தொடர்பால்வருகென்ன வவனுமாங்கண் சிவனைச்சிறிதுமதியாதெதிர் சென்றகாலை இவனுக்கென்மேன்மையெனச்சீறலு மெஞ்சினான்போற் புவனத்தெவருநகையாடப் புலம்பிவீழ்ந்தான் |
(இ-ள்,) அவனை - அங்ஙனம் தன்முன்வந்த இந்திரனை, தொடர்பால் வருக என்ன - என்பின்னே வருவாயாக என்று (இந்திரசேனை) அழைக்க, அவன்உம் - அவ்விந்திரனும், ஆங்கண்-அவ்வாறே அவளைத்தொடர்ந்து சென்றஇடத்தில், சிவனைசிறிதுஉம் மதியாது - (எதிர்பட்ட) சிவபிரானைச் சிறிதும்இலட்சியஞ் செய்யாமல்,எதிர் சென்ற காலை - அவனெதிரிலே சென்ற பொழுது, (அப்பெருமான்), இவனுக்குமேன்மை என் என சீறலும்- 'இவனுக்கு இவ்வளவு செருக்கு என்ன?' என்று கருதிக்கோபங்கொண்ட வளவிலே, (அவ்விந்திரன்), எஞ்சினான் போல் - இறந்தவன்போல,புவனத்துஎவர்உம் நகையாட புலம்பிவீழ்ந்தான் - உலகத்திலுள்ளோரெல்லோரும்(தனதுநிலையைக் கண்டு) பரிகசிக்கும்படி வருந்திக் கீழ்விழுந்தான்; ( எ- று.) அங்ஙனம்வினாவியவனை அவள் தன்னுடன்வந்து செய்தியறிந்துகொள்ளும்படி சொல்லி அழைக்க, அவ்வாறே அந்த இந்திரன் அவளைத் தொடர்ந்து செல்லுகையில், அங்கு மனைவியுடன் சூதாடிக்கொண்டிருந்த சிவபிரானை மதியாது அலட்சியஞ்செய்து செருக்கிப்பேச, உருத்திரமூர்த்தி கோபித்துச் சிரித்துக்கொண்டே அவனைநோக்கிய மாத்திரத்தில் அவன் தபிக்கப்பட்டவனாய் மரம்போல நின்றிட, பின்பு சிவபிரான் சூதாட்டம்முடிந்தவுடன், அழுது கொண்டுநின்ற இந்திரசேனையை நோக்கி 'இவனை அருகிற்கொண்டு வா; இனி, இவன் செருக்குறான்' என்றுகூற அங்ஙனமே அவள் போய் அவ்விந்திரனைத் தொட்டவளவில், அவன் உடல்நடுங்கித்தரையில் விழுந்திட்டன னென்பதாம். (558) 84. | வெவ்வாயுதங்களுதவாமல் விபுதநாதன் இவ்வாறுவீழமழுவாளி யிமைப்பின்மீண்டும் அவ்வாசவற்குப்பிலமொன்றி் லடைத்தவச்ரக் கைவாசவர்களொருநால்வரைக் காட்டினானே. |
(இ-ள்.) வெம் ஆயுதங்கள் உதவாமல் - கொடிய (வச்சிரம் முதலிய தனது) ஆயுதங்கள் ஒன்றும் பயன்படாமலே, விபுதநாதன்-தேவராசனான இந்திரன், இமைப்பின் - ஒருமாத்திரைப் பொழுதிலே, இ ஆறு வீழ-இப்படிக் கீழ்விழுந்திட,- மழுஆளி-மழுவையுடையவனாகிய சிவபிரான்,-மீண்டுஉம்-பின்பு, அ வாசவற்கு- அவ்விந்திரனுக்கு, பிலம் ஒன்றில் அடைந்த வச்ரம் கை வாசவர்கள் ஒரு நால்வரை- ஒருபிலத்தினுள் (முன்புதான்) அடைத்து வைத்திருந்த வச்சிரமேந்திய கையையுடைய இந்திரர் நால்வரை, காட்டினான்-காண்பித்தான்; (எ - று.) |