பக்கம் எண் :

322பாரதம்ஆதி பருவம்

100. - துரியோதனாதியர்தொகுதிக்குப் பாம்பின்வடிவோடு
ஒப்பு.

சாலும்வஞ்சச் சகுனியொடெண்ணிய
நாலுமைந்தரு நச்செயிறாகவும்
வாலுமெய்யும் வருக்கங்களாகவும்
ஆலும்வெம்பகை யாடரவானதே.

     (இ-ள்.) சாலும் வஞ்சம்-மிக்க வஞ்சனையையுடைய, சகுனியொடு-சகுனியுடன்,
எண்ணிய-(சேர்த்து) எண்ணப்படுகிற, நாலுமைந்தர்உம்-நான்கு வீரர்களும் (சகுனி
கர்ணன் துரியோதனன் துச்சாதனன் என்ற நால்வரும்), நஞ்சு எயிறு ஆகஉம்-
விஷப்பற்களாகவும், வருக்கங்கள்-(துரியோதனனது) மற்றைத்தம்பியர்வரிசை,
மெய்உம்வால்உம் ஆகஉம்-உடம்பும் வாலுமாகவும், ஆலும்வெம்பகை-
ஆரவாரிக்கின்றகொடிய பகைவர்தொகுதி, ஆடு அரவு ஏ ஆனது-படமெடுத்து
ஆடுகின்றநாகப்பாம்பையே போன்றது;

     உருவகவணி, நாகம் பிறரைவருத்துதற்குக் காளி காளாத்திரி யமன்
யமதூதிஎன்ற நான்கு விஷப்பற்களே கருவியாதல் போல, சகுனி முதலிய
துஷ்டசதுஷ்டர்களே இத்தொகுதிக்குத்தலைவராய் நிற்றலால், 'நாலு மைந்தரு
நச்செயிறு' எனப்பட்டது. வருக்கம்- அணிவகுப்பு என்றாருமுளர். ஆனதே, ஏ-
தேற்றம். 'வரூதினியாகவும்,' வெம்படை என்றும் பாடம்.               (575)

101.- அப்பகைத்தொகுதியை அருச்சுனன் சிதறடித்தல்.

அந்தநாக மழலுமிழ்கண்விடம்
சிந்தமேல்விடு சீற்றமுந்தோற்றமும்
முந்தவார்சிலைக்கைம் முகில்வாகனன்
மைந்தன்வாளி மழைகளின்மாய்ந்தவே.

     (இ-ள்.) அந்த நாகம் -(கீழ்க்கூறியபகைத்தொகுதியாகிய) அப்பாம்பு, அழல்
உமிழ் கண் விடம் சிந்த-நெருப்பைக்கக்குகிற கண்கள் விஷத்தைச்சொரிய, மேல்
விடு- எதிரிகளின்மேல்வெளியிட்ட, சீற்றம்உம்-கோபமும், தோற்றம்உம்-
(அதன்பயங்கரமான) தோற்றப்பொலிவும், (ஆகிய இரண்டும்), வார் சிலை கை
முகில்வாகனன் மைந்தன் வாளி மழைகளின் முந்த மாய்ந்த - நீண்ட வில்லைக்
கையிலேந்திய மேகவாகனனான இந்திரனது குமாரனாகிய அருச்சுனன் (முன்நின்று
விரைவாகச் சொரிந்த) அம்புமழைகளினால் உடனே அழிந்தன; ( எ- று.)

     இடியோடு மேகம் சொரியும் மழையினால் நாகம் உக்கிரம் அழிந்து
ஒடுங்குதல்போல, அருச்சுனன் சொரிந்த அம்புத்தொகுதியால் அப்பகைத்திரள்
ஆற்றலொடுங்கி உறுதிநிலை கெட்ட தென்க; உருவகவணி. திருஷ்டி
விஷமென்னும்நாகசாதி கண்விழித்து விஷத்தை வெளிப்படுத்தி
அவ்விஷப்பார்வையாற்பிறரையழிக்கும் தன்மையை தாதலால், 'நாக மழலுமிழ்
கண்விடஞ் சிந்த மேல்விடுசீற்றம்' என்றார். தோற்றம் வலிமையுமாம். நாகம்
என்றவடசொல்-நகத்தில்வாழ்வதென்று பொருள்படும்; நகம் - மரமும், மலையும்,
'மேலிடு' என்றும் பாடம்.                                          (576)