பொருள். இந்த்ரப்ரஸ்தம் என்ற வடமொழி, தமிழின் இந்திரப்பிரத்தமென விகாரப்பட்டது. *1.-தெய்வவணக்கம். வேதமும் வேதம் விளம்புமெய்ப் பொருளு மப்பொருள் விதங்களும்பஞ்ச, பூதமும் புலனும் புலன்களின் பயனு மப்பயன் பொலிவுறநுகரும், ஞாதமு முலகம் படைத்தளித் தழித்து ஞானமா யகிலமு நிறைவுற், றாதியு நடுவு முடிவுமாய் நின்ற வாதியா னடியிணை பணிவாம். |
(இ-ள்.) வேதம்உம்-வேதங்களும், வேதம் விளம்புமெய்பொருள்உம் - அவ்வேதங்கள் சொல்லுகின்ற உண்மைப்பொருளும். அ பொருள் விதங்கள்உம் - அந்த உண்மைப்பொருளின் பகுப்புக்களும், பஞ்ச பூதம்உம் - ஐந்து பூதங்களும், புலன்உம்- ஐந்து புலன்களும், புலன்களின் பயன்உம் - அவ்வைம்புலன்களின் பயனும், அ பயன் பொலிவு உற நுகரும் ஞாதம்உம் - அப்பயன்களைத் தகுதியாக அனுபவித்து உணர்கிற ஆத்துமாவும், (ஆகி), உலகம் படைத்து அளித்து அழித்து- உலகங்களைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய செயல்களைச் செய்து, ஞானம் ஆய்-ஜ்ஞாநமயமாய், அகில்உம் நிறைவு உற்று-எங்கும்வியாபித்து, ஆதிஉம்நடுஉம் முடிவுஉம் ஆய்நின்ற - (எல்லாப்பொருள்களுக்கும்) முதலும் இடையும்கடையுமாய் நின்ற, ஆதியான்-முழுமுதற்கடவுளாகிய திருமாலினது, அடி இணை -இரண்டு திருவடிகளையும், பணிவாம் - (யாம்) வணங்குவோம்; (எ - று.) சர்வாத்மகனான ஆதிதேவனை வணங்குவோமென்றவாறு. வேதம் விளம்பு மெய்ப்பொருள் - பரப்பிரஹ்மசொரூபம். மெய்ப் பொருள் - தத்துவார்த்தம். அப்பொருள் விதங்கள் - பரப்பிரஹ்ம சொரூபியான திருமாலின் வியூகமூர்த்திகளாகியவாசுதேவன் சங்கர்ஷணன் பிரத்யும்நன் அநிருத்தன் என்ற நால்வரும், படைத்தல்காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்கிற பிரமவிஷ்ணுருத்திர ரென்னும்அதிகாரபுருஷரான திரிமூர்த்திகளும். புலன்களின் பயன் - ஐம்பொறி யுணர்வுக்குவிஷயமாகிற பொருள்கள்: அவையாவன- கேட்கப்படும் பொருள்களும், பரிசிக்கப்படும்பொருள்களும், காணப்படும் பொருள்களும், சுவைக்கப்படும்பொருள்களும், மோக்கப்படும்பொருள்களுமாம். அப்பயன் பொலிவுறநுகரும் ஞாதம் - புலன்களால் பொருள்களை அறிகிற உயிர்கள்; அவை- ஓரறிவுயிர்,ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் எனப்
* அஃதேல், ஒருநூற்கு எடுத்துக்கோடற்கண்ணே வணக்கஞ்சொல்லுதலன்றி அதிகாரந்தோறுஞ் சொல்லியதுஎன்னையோவெனின்?-நூல் ஒன்றேயெனினும் அதிகாரங்கள் பொருளான் வேறுபடுதலாலும் முன்னையொருசாரார் ஒரோவதிகாரத்தை ஒரு நூலாக்கிப் பாயிரம் முழுதும்பகர்தலானும், "ஆதியு மந்தமு நடுவுமங்கலம், ஓதிய முறைமையி னுரைப்ப ராயிடின், ஏதமி லிருநிலக்கிழத்தி யின்புற,நீதியம் பனுவல்கள் நிலவு மென்பவே" என்பவாதாலானும், 'கற்பதனாற்பயன், குற்றமற்று முற்றுமுணர்ந்த ஒற்றை நற்றவன் பொற்றாளிணைமலர் போற்றல்' என்பதனானும் 'சொன்னாரெனக் கொள்க' என்ற நன்னூலின் பழையவுரைகாண்க. |