பக்கம் எண் :

328பாரதம்ஆதி பருவம்

பகுக்கப்படும். ஜ்ஞாதா என்னும் வடசொல்லின் திரிபாகிய ஞாதமென்பது- இயல்பில்
உணர்வுடையதென்று பொருள்படுதலால், அது, அத்தன்மையதாகிய ஆத்துமாவுக்கு
ஒருகாரணக்குறியாயிற்று; சித், சேதனம் என்ற ஆன்மாக்களின் பெயர்களும்
இப்பொருள்படுவனவே.உலகம்.... அழித்து-பிரமரூபியாய்ப்படைத்தலையும்
தனானநிலையில் நின்று காத்தலையும்  ருத்திரரூபியாய் அழித்தலையுஞ்செய்து
என்க.அகிலமும் நிறைவுற்று-எள்ளினுள் எண்ணெய்போல அந்தர்யாமியாய்
எங்கும்வியாபித்துப் பரவிநின்று: 'விஷ்ணு' என்ற திருநாமத்தின் பொருள்,
சருவவியாபியென்பதாதல் காண்க. எல்லாப்பொருள்களும்உதித்தற்குமூலமாய்
அவை தோன்றுதற்குமுன்நின்றவனும், அவை யனைத்தும் லயித்தற்கு இடமாய்
அவையழிந்தபின் நிற்பவனும்,இடையில் ஒரு நிகராக நிற்கின்றவனும்
தானேயாதலால், 'ஆதியு நடுவு முடிவுமாய்நின்ற ஆதியான்' எனப்பட்டான்.
'ஆழியான் என்றும் பாடம்.

     இனி-புலன் என்பதற்கு - மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்
ஐம்பொறிகளென்றும், 'புலன்களின்பயன்' என்பதற்கு - அந்தப்
பஞ்சேந்திரியங்களுக்குஉரியபஞ்சவிஷயங்க ளென்றும்உரைத்தலும்ஒன்று.
புலன்களைப் படைத்தற்குப் பயன்அவற்றை எம்பெருமான்பக்கல் உபயோகித்தலே
யாதலால், 'புலன்களின்பயனுமாய்' என்றதாகவும் கொள்ளலாம்.

     இதுமுதல் 27-கவிகள்-பெரும்பாலும் இரண்டு நான்கு ஏழாஞ்சீர்கள்
மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களு மாகிவந்த ஏழுசீராசிரியவிருத்தங்கள்.  (585)

2.- திருதராட்டிரன் தருமனுக்கு முடிசூட்ட நிச்சயித்தல்.

அத்தினபுரியிலையிருபதின்மரைவரென்றிரண்டறத்தம்மில்
ஒத்தனர்மருவத்தெவ்வர்மெய்வெருவ வுளமகிழ்நாளின்மற்றொருநாள்
மைத்துனன்முதலாந்தமரையுந்தக்க மந்திரத்தவரையுங்கூட்டி
இத்தினமுயர்ந்ததினமெனமகுடஞ் சூட்டுதற்கெண்ணினானிகலோன்.

     (இ-ள்.)  அத்தினபுரியில் - அஸ்தினபுரத்திலே, ஐ இரு பதின்மர் ஐவர்
என்றஇரண்டு அற - நூற்றுவரும் ஐவரும் என்ற இரண்டு பகுப்பு இல்லாமல்
[அந்தநூற்றைவரும்], தம்மில் ஒத்தனர் மருவ - தங்களுள் ஒற்றுமையுடையராய்க்
கூடிவாழ,தெவ்வர் மெய் வெருவ - (அதனால்) பகைவர்கள் உடம்புநடுங்க,
உளம்மகிழ் நாளில்- (அனைவரும்) மனம்மகிழ்ந்திருந்த நாள்களில், ஒரு நாள்-
ஒருதினத்தில்,-இகலோன்- வலிமையையுடையனான திருதராட்டிரன், -
மைந்துனன் முதல் ஆம்தமரைஉம் - (தன்) மைத்துனனாகிய சகுனி முதலான
பந்துக்களையும், தக்கமந்திரத்தவரைஉம்-தகுதியையுடைய மந்திரிகளையும், கூட்டி-
ஒருங்கு வரவழைத்துச்சபை சேர்த்து (ஆலோசித்து), இ தினம்உயர்ந்த
தினம்எனமகுடம்சூட்டுதற்குஎண்ணினான் - இந்தத்தினமே உத்தமமான தினமென்று
குறிப்பிட்டு (அன்றைக்கே)தருமனுக்கு) முடிசூட்ட நிச்சயித்தான்;

     மந்திரிகளுக்குத் தகுதி -அறிவு, முயற்சி, இராசகாரியங்களில் தேர்ச்சி,
அரசனுக்கு இடித்திடித்துக் கட்டுரை கூறும் வன்மை, பழுதெண்ணாமை, தவறாது
ஆலோசிக்குந்திறம் முதலியன.                                    (586)