3.- இதுமுதல் நான்குகவிகள்-தருமபுத்திரனது பட்டாபிஷேகம் கூறும். செழுமுரசுயர்த்தவேந்தனுக்கின்று திருவபிடேகநாளென்று முழுமுரசறைந்துநகரிகோடித்து முடிபுனைகடிகொண்மண்டபத்தின் எழுமுரசதிரப்பகீரதிமுதலா மெத்துறைப்புனல்களுமியற்றித் தொழுமுரசுடன்வெள்வலம்புரிமுழங்கச் சுருதிமாமுனிவருந்தொக்[கார். |
(இ-ள்.) (திருதராட்டிரன்), 'செழு முரசு உயர்த்த வேந்தனுக்கு- மாட்சிமையுடையமுரசவாத்தியத்தின் வடிவத்தையெழுதிய கொடியை உயரநாட்டிய தருமாராசனுக்கு, இன்று - இத்தினம், திரு அபிடேகம் நாள்-சிறந்த பட்டாபிஷேகம்செய்வதற்குஉரியநாள்,' என்று-என்றுசொல்லி, முழுமுரசு அறைந்து- பெரிய முரச வாத்தியங்களைஅடிப்பித்து எங்குந்தெரிவித்து, நகரி கோடித்து- அந்நகரத்தை அலங்கரிப்பித்து, முடிபுனை கடி கொள் மண்டபத்தின்- முடிசூட்டுதற்கு உரியவிளக்கத்தைக்கொண்ட(பட்டாபிஷேக) மண்டபத்திலே, எழு முரசு அதிர பகீரதி முதல் ஆம் எ துறைபுனல்கள் உம் இயற்றி-ஒலியெழுகிற முரசவாத்தியங்கள் முழங்கக் கங்கை முதலியஎல்லாப்புண்ணிய தீர்த்தங்களினின்று நீர் கொணர்வித்து, தொழு முரசுடன் வெள்வலம்புரி முழுங்க-(யாவராலுங்) கொண்டாடப்படுகிற முரசவாத்தியங்களுடனேவெண்மையான வலம்புரிச் சங்குகளையும் முழங்குவிக்க, சுருதி மா முனிவர்உம்தொக்கார் - வேதங்களையறிந்தபெரிய இருடிகளும்வந்து கூடினார்கள்; முதலடியில், முரசு - ஆகுபெயர். முழு முரசு - முரசுக்குஉரிய இலக்கணத்திற்குறையாத முரசு. அறைந்து, கோடித்து, முழுங்க- பிறவினைப் பொருளில் வந்ததன்வினை. மங்கலவாத்தியம் வாசிப்போர் அதனைத்தொழுது தொடங்கும் மரபுபற்றி, 'தொழுமுரசு' என்றதாகவும் கொள்ளலாம்; அன்றியும், வாத்தியம் வாசித்தல் என்றபொருளில் 'வாத்தியம் சேவித்தல்' எனப் பரிபாஷையாக வழங்குதற்கு ஏற்ப, 'தொழுமுரசு' என்றதாகவுங் கொள்ளலாம். 4. | அத்தியின்பலகைநவமணியழுத்தி யாடகத்தமைத்தரிமுகத்தால், பத்திகொள்பீடத்தழகுறவிருத்திப் பசும்பொனின்றசும்புகணிறைந்த, சுத்தநீர்வியாதன்றௌமியன்முதலோர் சொரிந்தனர்சோமன் வந்துதித்துச், சித்திரகிரியினெடுநிலாவெள்ளஞ் சீருடன்வழியவார்த்தெனவே. |
(இ-ள்,) வியாதன் தௌமியன் முதலோர் - வியாசனும் தௌமியனும் முதலானமுனிவர்கள்,-அத்தியின் பலகை- அத்திமரத்தின் பலகையின்மேல், ஆடகத்துஅமைத்து-பொன்னினால் தொழில்செய்து, நவ மணி அழுத்தி- நவரத்தினங்களைப்பதித்து, அரி முகத்தால் பத்தி கொள் பீடத்து-சிங்கத்தின் முகம்தோன்ற ஒழுங்காகச்சித்திரிக்கப்பட்ட சிங்காதனத்திலே. அழகு உற இருத்தி- (தருமபுத்திரனை)அழகாகவீற்றிருக்கச்செய்து, (அவனது முடியின்மேல்), பசும் பொனின் தசும்புகள்நிறைந்த சுத்தம் நீர் - பசும்பொன்னாலாகிய குடங்களில் நிறைந்துள்ள பரிசுத்தமானபுண்ணியதீர்த்தங்களை,-சோமன் வந்து உதித்து சித்திரகிரியில் நெடு நிலாவெள்ளம்சீருடன் வழியவார்த்து என - சந்திரன்வந்து |