(இ - ள்.) கண்டு - (தன் மனைவியின் கொடுஞ்செயலைப்) பார்த்து (முதலில்),உளம் வெருவி - மனத்தில் வெறுப்புக்கொண்டு நின்று (பிறகு), முன் கதித்தவாசகங்கொண்டு - மணந்தபோது (நிபந்தனையாகக்) கூறிய வாசகத்தினால், உரைஎடுத்திலன் - (அவள் பெற்ற குழந்தையைக் கங்கையாற்றில் எறிந்தது குறித்து) ஒருபேச்சும் தெரிவியாதவனாய்,- கொண்ட காதலான் - (அந்தக் கங்கையாளிடத்துப்)பெருங்காதல்கொண்ட சந்தனு,- பண்டையின்- முன்பு இருந்ததைவிட, எழு மடி பரிவுகூர - ஏழுமடங்கு அன்பு மிக, ஒள் தொடியுடன்- ஒள்ளிய தொடியென்னும்அணிபூண்டவளான அந்தக் கங்காதேவியுடன், மணந்து- கூடி, உருகி - மனம்கரைந்து, வைகினன் - தங்கியிருந்தான்; (எ -று.) கொண்ட காதலான் - கருத்துடையடைகொளியணி. கதித்த என்ற பெயரெச்சத்தில் 'கத்' என்பது - வடமொழியான வினையடி. (56) 49.- பின்னும் கங்கையாள் ஆறு குழந்தைகளையும் முன் போலவே பெற்றவுடன்கங்கையிலெறிந்து மாய்க்கவும், மன்னவன் வாளா இருத்தல். பின்னருமறுவரைப் பெற்றதாய்மனம் முன்னரின்மும்மடி முரண்டுமாய்க்கவே மன்னவனவற்றினும் வாய்திறந்திலன் நன்னகர்ச்சனமெலா நடுநடுங்கவே. |
(இ - ள்.) பின்னர்உம் - பின்னும், அறுவரை - ஆறு மக்களை, பெற்ற - ஈன்ற,தாய் - (கங்காதேவியாகிய) தாயானவள், முன்னரின்- முன்பிருந்ததைக்காட்டிலும்,மனம்-, மும்மடி முரண்டு - மூன்று மடங்கு மாறுபட்டு, மாய்க்க - (குழந்தைகளைப்பெற்றபோதே கங்கை நீரிலெறிந்து) உயிர்போக்கவும், (அச்செயலைக்கண்டு), நல் நகர்சனம் எலாம் - சிறந்த நகரத்துச் சனங்களெல்லாம், நடுநங்க- நடுங்காநிற்கவும்,மன்னவன் - சந்தனுராசன், அவற்றின்உம் - அவ்வக்காலங்களிலெல்லாம், வாய்திறந்திலன் - (அந்தக் கங்கையாளிடத்து அவள் செய்யுங் கடுஞ்செயலைக் குறித்து)வாய் திறந்து பேசினானில்லை; (எ-று.) முன்னரின் - ஐந்தாம் வேற்றுமைப்பொருள் தந்ததோரிடைச்சொல்: இவ்வாறுவருவதனை வடநூலார் விபக்திப்ரதிரூபகம் அவ்யயம் என்பர். (57) 50.- மங்கைமார் கங்கையாளின் செயலுக்குக் கண்ணீர் வடித்தல். வழுவறுகுருகுல மன்னன்மைந்தரோர் எழுவரைமுருக்கின னீன்றதாயெனப் பழுதறுமகப்பல பயந்தமங்கையர் அழுதனர்கட்புன லாறுபாயவே. |
(இ - ள்.) 'வழு அறு - குற்றமற்ற, குருகுலம் மன்னன் - குருகுலத்தில் தோன்றிய அரசனான சந்தனுவின், மைந்தர் ஓர் எழுவரை ஏழுமைந்தரை, ஈன்ற தாய்- பெற்ற தாய், முருக்கினள்- |