பக்கம் எண் :

330பாரதம்ஆதி பருவம்

உதித்து அழகிய மலையின்மேல் மிக்க நிலாப்பெருக்கை அழகோடு வழியும்படி
வார்த்தாற்போல, சொரிந்தனர் - சொரிந்தார்கள்;

     தௌமியன் முதலியோர் பொற்குடங்களினின்று புண்ணிய தீர்த்தங்களை
அபிஷேகஞ்செய்யுமாறு ஊற்றுவது, மலையிலிருந்து எழுகின்ற உதயசந்திரன்
நிலாவைப்பொழிதலையொக்குமென்க: சந்திரமண்டலம் வெண்ணிறமுடையதாயினும்
உதிக்கும்போது செந்நிறமுடையதுபோலத் தோன்றுதல்இயல்பு. இனி, சுத்தனான
சந்திரன்-பரிசுத்தரான முனிவர்களுக்கும், நிலாப்பெருக்கு - புண்ணிய
தீர்த்தப்பெருக்குக்கும், மலை-தருமனுக்கும் உவமை யென்பாரும் உளர்;
தற்குறிப்பேற்றவணி. பீடமமைத்தற்கு அத்திப்பலகை சிறத்தலால், அதனை
யெடுத்துக்கூறினார். "ஒளதும்பரம்தத்ர நரேந்த்ரஸூநௌ-ப்ரஸ்த மாதஸ்துஷி
பத்ரபீடம்" என்றது, பாலபாரதம்.                                (588)

5.உதயமால்வரையினுதயராகத்தோ டுதித்ததேருதயனென்
                                   றுரைப்பத்,
துதையளிததைந்தமாலையான்சென்னிச் சோதிமாமகுட
                                 முஞ்சூட்டிப்,
பதயுகமரசர்முடிகளாற்சிவப்பப் பகர்விதிமுடித்தபின்
                                     பலரும்,
இதயமொத்தமிர்தமொழியவரடைவே  யிருகைநீரா
                               சனமெடுத்தார்.

     (இ-ள்.) 'மால் உதயம் வரையின்-பெரிய உதயகிரியின்மீது, ' உதயம்
ராகத்தோடும்உதித்த - உதிக்குங்காலத்து (மிக்கவிளங்குகிற) செந்நிறத்தோடு
தோன்றிய,  தேர் உதயன்-(ஒற்றைத் தனியாழித்) தேரையுடைய சூரியன், ' என்று
உரைப்ப-என்று உவமை சொல்லும்படி, துதை அளி ததைந்த மாலையான் சென்னி-
நெருங்கிய வண்டுகள் மொய்க்கிற மாலையையுடையனான தருமபுத்திரனதுசிரசில்,
சோதி மா மகுடம்உம் சூட்டி-ஒளியையுடைய சிறந்த கிரீடத்தையும் கவித்து, பதம்
யுகம் அரசர் முடிகளால் சிவப்ப - (அவனுடைய) இரண்டுபாதங்களும் (அவற்றை
வணங்குகிற) அரசர்களுடைய முடிகள் படுதலாற் சிவக்க, பலர் விதி முடித்த பின் -
(நூல்களில்) விதிக்கப்பட்ட பட்டாபிஷேகச்சடங்கை நிறைவேற்றிய பின்பு, அமிர்தம்
மொழியவர் பலர்உம் - அமிருதம்போல் இனிய சொற்களையுடைய பல மகளிர்,
இதயம் ஒத்து - (தம்மில்) மனங்கலந்து [அன்புடனும் மகிழ்ச்சியுடனும்), அடைவே-
முறையே, இருகை - இரண்டுகைகளாலும், நீராசனம் - மங்களவாலத்தியை,
எடுத்தார்-; (எ-று.)

     உதயகிரி-தருமபுத்திரனுக்கும், அதன் சிகரம்-அவனது சிரசுக்கும்.
உதயசூரியமண்டலம் - கிரீடத்துக்கும் ஒப்பு எனக்காண்க. மகுடஞ்சூட்டுதல்,
விதிமுடித்தல் இவற்றுக்கு எழுவாய் - கீழ்க்கவியில் வந்த 'வியாதன், தௌமியன்
முதலோர்' என்பது. மகுடமுஞ்சூட்டி, உம் - இறந்தது தழுவியது.     (589)

6.ஒற்றையோடிரட்டைவலம்புரிமிழற்ற வொருகுடைமதியெ
                                      னநிழற்றக்,
கொற்றவர்முன்பின்போதரமடவார் குழுப்பொரிசிந்தி
                                   வாழ்த்தெடுப்ப,
இற்றைநாளெவரும்வாய்த்தவாவென்னவேழுயரிராச
                                     குஞ்சரமேல்,
மற்றைநால்வருந்தற்சூழ்வரத்தருமன் மைந்தன்மாநகர்
                                    வலம்வந்தான்.