பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்333

9. அங்கு நகர்செய்தற்குக் கண்ணன் இந்திரனோடு
விசுவகர்மனைவருவித்தல்.

போயவட்புகுந்தபொழுதுபைங்கடலும் பூவையும்புயலுநேர்வடிவின்
மாயவற்கெவ்வாறிவ்வுழியிவர்கள் வாழ்வதென்றொருநினைவெய்தி
நாயகக்கடவுடன்னைமுன்னுதலு நாகர்நாயகனொடுநடுங்கி
மேயகட்புலன்கள்களித்திடத்திருமுன் னின்றனன்விச்சுவகன்மா.

     (இ-ள்.) போய் அவண் புகுந்தபொழுது போய் அவ்விடத்திற் சேர்ந்த
பொழுது,-பைங் கடல்உம் பூவைஉம் புயல்உம் நேர் வடிவின் மாயவற்கு-
பசியகடலையும்காயாம்பூவையும் மேகத்தையும் ஒத்த திருமேனியையுடைய
கண்ணபிரானுக்கு,இவர்கள் இ உழி வாழ்வது எ ஆறு என்று ஒரு நினைவு எய்தி-இவர்கள்இவ்விடத்தில் வாழ்வது எப்படி யென்று ஓர் எண்ணம் உண்டாக,
(அதனால் அப்பெருமான்), நாயகம், கடவுள் தன்னை முன்னுதலும் - தலைமைத்
தேவனான[தேவராசனான] இந்திரனை நினைத்தவுடனே, (அங்கு வந்துசேர்ந்த),
நாகர்நாயகனொடு-தேவர் தலைவனான இந்திரனுடனே, விச்சுவகன்மா-
விசுவகர்மாவும்,நடுங்கி-அச்சங்கொண்டு, மேய கண்புலன்கள் களித்திட திருமுன்
நின்றனன்-பொருந்திய (தனது) கண்களாகிய பொறிகள் களிப்படைய
(அப்பெருமானது) திருமுன்பே வந்துநின்றான்; ( எ- று.)

     காண்டவப்பிரத்தத்தில் முன்னோர் இருந்த தொன்னகரம் முன்னமே
அழிந்துவிட்டதாதலின் அங்குப் பாண்டவர் எங்ஙனம் வசித்தற்கு இயலும் என்று
திருவுளம்பற்றிய கண்ணபிரான் அங்குத் தேவத்தச்சனான விசுவகர்மனைக்கொண்டு
காடுகெடுத்து நாடாக்கி ஒருதிருநகரஞ்செய்விக்கக்கருதி அதன் பொருட்டுத் தேவர்
தலைவனான இந்திரனைச் சிந்தித்தவளவிலே, அவன் வந்து சேர,
அவனதுபரிவாரங்களில் ஒருவனான விசுவகர்மனும் அவனுடனே வந்துநின்றன
னென்பதாம். இந்திரனுக்கும் விசுவகர்மாவுக்கும் கண்ணபிரானிடத்துஉள்ள
பயபக்திவிசுவாசங்களைக் குறிக்க 'நாயகனொடுநடுங்கி' என்றார். விசுவகர்மா-
அஷ்டவசுக்களில் எட்டாமவனான பிரபாசனுக்குப் பிரகஸ்பதியினுடன் பிறந்தாளிடம்
பிறந்தபிள்ளை. இவன்விசித்திரங்களான அநேகசிற்பகருமங்களை அறிந்தவனாய்த்
தேவர்களுக்குத் தச்சனாகி அநேகதிவ்வியாபரணங்களையும், விமாநாதிகளையும்
அவர்கட்கு நிருமித்துக்கொடுப்பவன்.                               (593)

10.- இந்திரன் விசுவகர்மனைநோக்கி 'இங்கு ஓர்நகர் செய்'
என்னல்.

நுண்ணிதினுணர்ந்தோருணர்தருஞ்சிற்ப நூலறிபுலவனைநோக்கித்
திண்ணிதினமரர்சேகரன்மொழிந்தான் றேவருமனிதரும்வியப்ப
மண்ணினும்புயங்கர்பாதலமுதலா மற்றுளவுலகினுநமதாம்
விண்ணினுமுவமையிலதெனக்கடி தோர்வியனகர்விதித்திநீயெனவே.

     (இ-ள்.) அமரர் சேகரன்-தேவர் தலைவனாகிய இந்திரன்,
நுண்ணிதின்உணர்தோர் உணர்தரும் சிற்பம் நூல் அறி புலவனை நோக்கி-
நுட்பமாக(க்கருவி நூற்பொருள்களை) அறிந்தவர் அறியத்தக்க சிற்பசாஸ்திரத்தை
யறிந்த தேர்ந்த அறிவுடையானாகிய விசுவகர்மாவைப்பார்த்து,- 'தேவர்உம்
மனிதர்உம் வியப்ப-