பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்335

தகம் பவழம் முத்து வச்சிரம் வைடூரியம் நீலம் விளங்குகிற மாணிக்கம் புட்பராகம்
என்ற இந்தநவரத்தினங்களுக்கும், இந்த மா நகர் ஆகாம் - இந்தப்பெரியநகரம்
உறைவிடமாம், ' என்று-என்று சொல்லி, அரி முதல் இமையோர் அனைவர்உம்
புகழ்ந்தார்: - திருமால்முதலிய தேவர்க ளெல்லோரும் கொண்டாடினார்கள்; -
ஆடகம்பொருப்பினை அழித்து - பொன்மயமான மலையாகியமகா
மேருவைவடிவழித்து,தரணியில் நகர் ஒன்று அமைத்த ஆ - பூமியில் ஒரு
நகரமாகச் செய்தவிதம்என்னே! ' என்று-, தபதியர் யாவர்உம் வியந்தார் -
சிற்பிகளெல்லோரும்ஆச்சரியப்பட்டார்கள்; (எ-று.)

     இந்நகரம் பொன்மயமாகப் பெரிதாய் அமைந்துள்ளதனால் பொன்மலையை
யழித்துச் செய்ததென்று வியக்கவும், எல்லாவகை யிரத்தினங்களும் இந்நகரில்
எங்கும்நிறைந்திருத்தலால் நவரத்தினங்களுக்கும் ஆகரமென்று புகழவும் ஆயிற்று.
தெய்வத்தச்சன் இந்திரனேவலால் தான் வந்திருப்பதையும், இந்திரன் பாண்டவர்க்குத்
தன்பெயரால் ஒருநகரை நிருமிக்குமாறு தனக்குக் கட்டளையிட்டிருப்பதையும்
ஸ்ரீக்ருஷ்ணனிடம் தெரிவித்து, அவ்வாறே சிறப்புற நகரியற்றினானென்ற இவ்வளவே
பாரதங்களிலுள்ளது. இங்குநின்று 26-ஆம் பாடல் வரையிலுள்ள வருணனைகள்
பாலபாரதத்திலில்லை. பெரும்பாலும் வருணனைப்பகுதிகளை இந்நூலாசிரியர்
தம்கற்பனையாற் கூறுகின்றார். தபதி=ஸ்தபதி: வடசொல். 'புருடராகம்' , 'நகரென்று'
என்றும் பாடம்.                                                (536)

13.- அந்நகரத்தின் சிறப்பு.

என்பதியழகுகுலைந்ததென்றெண்ணி யிந்திரன்வெறுக்கவுமியக்கர்
மன்பதிபொலிவுசிதைந்ததென்றிடவு மற்றுளவானவர்பதிகள்
புன்பதியாகிப்போயினவெனவும் புரையறுபுந்தியாற்புவிமேல்
நன்பதியிதுவொன்றியற்றினானென்று நாரணாதிகடுதித்திடவும்.

இதுவும் அடுத்த கவியும் - குளகம்.

     (இ-ள்.) இந்திரன்-தேவேந்திரன், என் பதி அழகு குலைந்தது என்று
எண்ணி - 'எனது நகரமாகிய அமராவதி (இந்நகரத்துக்கு முன்) அழகுகெட்டதாம்'
என்றுநினைத்து, வெறுக்கஉம் - (அதனை) வெறுக்கும்படியாகவும், இயக்கர் மன் -
யஷர்களுக்கு அரசனான குபேரன், பதி பொலிவு சிதைந்தது என்றிடஉம் - '(எனது)
நகரமாகிய அளகை (இந்நகரத்திற்குமுன்) அழகுகெட்டதாகும்' என்று
சொல்லும்படியாகவும், மற்று உள் வானவர்-மற்றுமுள்ள (வருணன் முதலிய)
தேவர்கள், பதிகள் புல் பதி ஆகி போயின எனவும் - 'எங்கள்) நகரங்கள்
(இந்நகரத்திற்குமுன்) இழிந்தநகரங்களாய்விட்டன' என்று சொல்லும்படியாகவும்,-
'புரைஅறு புந்தியால் - குற்றமற்ற (தனது) மனத்தின் செயலால், புவிமேல் -
பூமியில், நல்பதி இது ஒன்று இயற்றினான் -சிறந்த இந்நகரமொன்றை (விசுவகர்மன்)
செய்தான், 'என்று-, நாரண ஆதிகள் துதித்திடஉம் - திருமால் முதலானவர்கள்
புகழவும்,-(எ -று.)- 'சமைத்த' என அடுத்த கவியோடு தொடரும்.

     இச்செய்யுளில் அழகுகுலைந்தது, பொலிவுசிதைந்தது, புன்பதியாகிப்போனஎன
ஒருபொருளைத்தருஞ்சொற்கள் வெவ்வேறு