(ஆற்றுவெள்ளத்தில் வீசியெறிந்து) கொன்றாள்,' என - என்று சொல்லி,- பழுது அறு -குற்றமற்ற, பல மக - பல பிள்ளைகளை, பயந்த - பெற்ற, மங்கையர்- கண் -(தம்முடைய) கண்களிலிருந்து, புனல் - சோகக்கண்ணீர், ஆறு பாய - நதிவெள்ளம்போற் பெருக, அழுதனர் - புலம்பினார்கள்; ( எ -று.) 'வழுவறு' என்று குருகுலமன்னவனுக்கு அடைமொழி கொடுத்ததனால், 'பெற்றபிள்ளையைக் கொல்லும் பெரும்பாதகியை மனைவியாகக்கொண்டிருக்கின்றா னென்ற பெரும்பழி இவனுக்கு நேருமே!' என்று அன்னார் இரக்கங்கொண்டு கருதலாயின ரென்பது, தோன்றும். வழுவறுஎன்பதை மைந்தர் என்பதனோடு இயைத்து - உறுப்புக்குறைமுதலிய குற்றமில்லாத [பேரழகையுடைய] மைந்தரென்று உரைப்பினுமாம்: "நிறை மகவுடையவர் நெறிசெலைம்பொறிக், குறைமகக்குறையினும் கொடுப்பராமுயிர்" என்றவாறு பலபுதல்வரை யுடையோரும் தமது மகவுள் பொறிக்குறையையுடைய ஒருமகவு உயிர்நீங்கினும் தம்முயிரை மாய்ப்பது இயல்பாயிருக்க, பெற்ற தாயான இவள் தான்பெற்ற புதல்வர் குற்றமற்ற பேரழகரெனக்கண்டும் ஒருவரிருவரல்ல எழுவரைச் சிறிதும் அருளின்றி வதைத்தனளே! என்று புலம்பினரென்பார், 'வழுவறு மைந்தர் ஓரெழுவரை முருக்கினளீன்றதாயென 'மங்கையர் அழுதனர்' என்றார். (58) 51.- எட்டாம்முறை கங்கையாள் கருக்கொள்கையில், மன்னவன் மனம் முன்போன்று அன்னாளிடத்துப் பதிந்திராமை. கங்கையென்றுலகெலாங் கைதொழத்தகும் மங்கையங்கனந்தரம் வயிறுவாய்த்துழி வெங்கயகடகரி வேந்தன்மாமனப் பங்கயத்துந்தது பழையவின்பமே. |
(இ - ள்.) கங்கை என்று - கங்கைகங்கைஎன்று சொல்லிக் கொண்டு, உலகுஎலாம் - உலகத்தவரெல்லாராலும், கைதொழதகும் - கைகூப்பித் தொழுதற்குத்தக்க, மங்கை - (கங்கைநதியின் தெய்வமான) பெண்,- அனந்தரம்- பிறகு, வயிறுவாய்த்த உழி-கருக்கொண்டபோது, வெம் கய கடகரி - உக்கிரத்தைக்கொண்டு பெருமைபெற்ற மதயானையைக்கொண்ட, வேந்தன் - சந்தனுமன்னவனுடைய, மாமனம் பங்கயம் - பெருமைபெற்ற மனத்தாமரை, பழைய இன்பம் துறந்தது -முன்னையனுபவித்துவந்த இன்பத்தை வெறுத்திட்டது; (எ -று.) - அங்கு - அசை. மன்னவன்மனம், முன்போலச் சிற்றின்பத்திற் பெருவிருப்புக் கொள்ளாது சிறிதுவெறுப்புக் கொண்ட தென்க. பங்கயம்= பங்கஜம்: சேற்றில் முளைப்பது எனப் பொருள்படும் வடசொல்திரிபு. கய - பெருமை: உரிச்சொல். கடம் - யானையின்கன்னம்: அங்கு நின்றுபெருகும் மதநீருக்கு ஆகுபெயர். கரி = கரீ: கையையுடைய விலங்கு என யானைக்குக் காரணக்குறி. (59) |