புன்னைகானம்உம் - புன்னைமரங்களின் தொகுதியும், கண்டல் அடவிஉம்- வெண்டாழைக்காடும், அம் கைதை காடுஉம் - அழகிய செந்தாழைக்காடும், தரைஎலாம் -(இந்நகரத்தைச் சார்ந்த) இடங்களிலெல்லாம், பொன்னும் வெள்ளியும்-, பழனம்வேலி - (இந்நகரத்தைச்) சூழ்ந்த மருதநிலங்களிலெல்லாம், சூழ் சாலிஉம் கரும்புஊம்- நிறைந்த நெற்பயிர்களும் கரும்புகளும் (உள்ளன): (எ-று.) முதலடியிற் குறித்தவை-குறிஞ்சிநிலப்பொருள்கள். இரண்டு முன்றாமடிகளிற் குறித்தவை-நெய்தல் நிலப்பொருள்கள். நான்காமடியின் இறுதியிற் குறித்தவை- மருதநிலப்பொருள்கள். பொன்னும் வெள்ளியும் மலையில் தோன்றுதலால் குறிஞ்சிநிலப்பொருள்களேயாயினும், அங்குநின்று யாற்றுநீர்ப்பெருக்கால் கொணர்ந்துகொழிக்கப்பட்டனவென மருதநிலத்தைச் சார்த்திக் கூறுதலும் உண்டு. இந்திரப்பிரஸ்தத்துக்குக் கடல் நெடுந்தூரத்திலுள்ளதாயினும், இவ்வாறு சார்த்திக்கூறியஇதற்குக் கருத்து-இந்நகரின் எல்லை கடலினளவு மெனக் கொள்ளவேண்டும்.கண்டல், கைதை என்பன-தாழையின் சாதிபேதம். (603) 20.- | ஆலையிற்கரும்பின்கண்களிற்றெறித்தவாரமவ்வயற்புறத்தடுத்த, சோலையிற்பயிலுங்குயிலையுஞ்சுருதிச்சுரும்பையுநிரைநிரைதுரப்ப, வேலையிற்குதித்தவாளையேறும்பர்வியனதிகலக்கிவெண்டிங்கள், மாலையிற்பரவும்வானமீன்கொடிபோல்வாவியிற்குளிக்குமாமருதம். |
(இ-ள்.) மா மருதம் - (அந்நகரத்தைச் சார்ந்த) பெரிய மருத நிலங்களில்,- ஆலையில்-ஆலையென்னும் யந்திரத்தில், (இட்டு ஆட்டிச் சாறுகொள்ளப்படுகிற), கரும்பின்-கரும்புகளின், கண்களின் -கணுக்களினின்று, தெறித்த-(நெடுந்தூரமளவும்) வெளிச்சிதறிய, ஆரம் - முத்துக்கள், அ வயல்புறத்து அடுத்த சோலையில் பயிலும்- அந்தக்கழனிகளின் அருகிற்பொருந்தியுள்ளள சோலைகளிலிருக்கிற, குயிலைஉம்- குயில்களையும், சுருதி சுரும்பைஉம் - சுருதிகூட்டுவது போல ரீங்காரஞ்செய்கிற வண்டுகளையும், நிரைநிரை துரப்ப-வரிசை வரிசையாக ஓட்டுவன; வேலையில் குதித்த-(அந்நகரத்தைச் சார்ந்த) கடலினின்று துள்ளியெழுந்த, வாளை ஏறு-சிறந்த வாளைமீன்கள், உம்பர் வியன் நதி கலக்கி-மேலுலகத்திலுள்ள பெரிய தேவகங்காநதியைக்கலக்கி, வெள் திங்கள் மாலையில் பரவும் வானம் மீன்கொடி போல்-வெண்மையாகிய இளம்பிறைதோன்றுவரிசைபோல, வாவியில் குளிக்கும் - (அந்நகரைச்சார்ந்த) தடாகங்களிலே மூழ்கும்; (எ-று.) முதிர்ந்தஉயர்ந்தசாதிக்கரும்புகளின் கணுக்களினின்று முத்துப்பிறக்குமென்றல், கவிமரபு, சுருதியாவது-முதல் நாதமாகிய ஷட்ஜத்தோடு பஞ்சமமென்னுஞ் சுவரத்தை மநோரஞ்சநமாம்படி சுத்தமாகப் பொருத்தல். கடல் நெய்தலும், வாவி-மருதமுமாம்; கடலினின்று குதித்த வாளை வாவியிற்குளிக்கும் எனக் கூறவே, திணைமயக்கமாயிற்று. ஏறு ஆண்மைப்பெயர்; மீனுக்கு ஏறு என்னும் |