பக்கம் எண் :

346பாரதம்ஆதி பருவம்

யுடைய சங்குகள் முத்துக்களைச் சொரியப்பெற்ற நீர்நிறைந்த அகழியையுடைய மதில்
சூழ்ந்த அந்த இந்திரப்பிரத்தநகரத்திற்குடிபுகுந்தார்கள்; (எ- று.)

     பாண்டவரைவரும் ஒருவர்பின் ஒருவராய்த் துருபதன்மகளை மணந்ததுமன்றி
மண்மகளையும் மணப்பார்போல அந்நகரினுள் முறையே பிரவேசித்தன ரென்பதாம்;
தற்குறிப்பேற்றவணி. மதுபம்-தேனைக்குடிப்பதுஎன வண்டுக்குக் காரணக்குறி.
கடவுளெரி-அக்கினிதேவன். மயில்-உவமையாகுபெயர். அகழப்படுவது அகழியெனக்
காரணக்குறி.                                                    (611)

வேறு.

28.- பாண்டவர்க்கு விசுவகருமன் அந்நகரத்தைக்
காட்டுதல்.

உரங்குடி புகுந்த திண்டோ ளுதிட்டிரன் முதலி யோரப்
புரங்குடி புகுந்து தங்கள் பொன்னெயிற் கோயி லெய்தத்
திரங்குடி புகுந்த கல்விச் சிற்பவித் தகன்ற னெஞ்சால்
கரங்குடி புகாமற் செய்த கடிநகர் காட்ட லுற்றான்.

     (இ-ள்.) உரம் குடி புகுந்த - வலிமை (தனக்கு) இடமாகக் கொண்டு
தங்கப்பெற்ற, திண் தோள் - வலிய தோள்களையுடைய, உதிட்டிரன்
முதலியோர் -தருமபுத்திரன் முதலானவர்கள், அ புரம் குடிபுகுந்து - அந்நகரத்தில்
புதிதாகச்சேர்ந்து, தங்கள் பொன் எயில் கோயில் எய்த - பொன்மயமான
மதில்சூழ்ந்த தங்கட்கு உரிய அரண்மனையை அடைய,- திரம் குடி புகுந்த சிற்பம்
கல்விவித்தகன் - உறுதிக்கு இடமான சிற்பத்தைப்பற்றிய சாஸ்திரத்தில்
தேர்ச்சியுடையவனான விசுவகருமன், கரம் குடி புகாமல் தன் நெஞ்சால் செய்த கடி
நகர் காட்டல்  உற்றான்-கையினால் தொடுதலுமில்லாமல் தனது மனத்தில்
நினைத்தமாத்திரத்தினாற் செய்த புதிய அந்நகரத்தை (அவர்கட்குக்)
காட்டுபவனானான்;

     பட்டணத்தின்வளத்தைக் காண விரும்பி அரண்மனையின் மேலேறியிருந்த
தருமனாதியர்க்கு விசுவகருமன் அந்நகரத்தினழகைக் காட்டலுற்றன னென்க.
திரங்குடிபுகுந்த கல்வி-நிலைபெற்ற கல்வியுமாம்.

     இதுமுதல் இச்சருக்கம்முடியுமளவும்இருபதுகவிகள்-கீழ்ச்சருக்கத்தின்
முதற்கவிபோன்ற அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தங்கள்.

29.- பாண்டவர்கள் கோபுரத்தின்மேலிருந்து அந்நகர்ச்
சிறப்பைக்காணுதல்.

நாபுரப்பதற்கேயேற்ற நவிரறுவாய்மைவேந்தர்
கோபுரத்தும்பர்மஞ்ச கோடியினின்றுதங்கள்
மாபுரத்துள்ளவெல்லை வளமனையாவுமாதர்
நூபுரத்தரவவீதி யகலமுநோக்கினாரே.

     (இ-ள்.) நா புரப்பதற்குஏ ஏற்ற-நாவைப் பாதுகாப்பதற்கே இயைந்ததான,
நவிர்அறு வாய்மை - குற்றமில்லாத சத்தியத்தையுடைய, வேந்தர் -
அந்தப்பாண்டவராசர்கள்,- கோபுரத்து உம்பர் மஞ்சம் கோடியில் நின்று-
கோபுரத்தின்மீதுள்ள மேனிலையின்முகப்பில் நின்றுகொண்டு,- தங்கள் மா புரத்து
உள்ள எல்லை வளம்