பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்347

மனை யாஉம் - தங்களுடைய பெரிய அந்நகரத்தின் எல்லையிலுள்ள
வளம்பொருந்திய மாளிகைகளெல்லாவற்றையும், மாதர் நூபுரத்து அரவம் வீதி
அகலம்உம் - (சஞ்சரிக்கிற) மகளிர்களுடைய சிலம் பென்னுங் காலணியின்
ஆரவாரத்தையுடைய வீதியின்பரப்பையும், நோக்கினார்-பார்த்தார்கள்; (எ - று.)

     விசுவகர்மன் காட்டப் பாண்டவர் நகரச்சிறப்பைக் கண்டனரென்க.
பொய்ம்மைநாவை அபரிசுத்தப்படுத்த, மெய்ம்மையே நாவைப் பழுது படாமல்
தூய்தாகவைத்தலால், 'நாபுரப்பதற்கேயேற்ற வாய்மை' என்றார். நிகழ்ந்ததுகூறலாகிய
அவ்வாய்மை தானும் பிறஉயிர்க்குத் தீங்குவிளையாமலிருந்தால்மாத்திரமே மெய்ம்மை
யென்று கொண்டாடப்படுதலால், 'நவிரறு வாய்மை' என்றார். எப்பொழுதும் மகளிர்
உல்லாசமாக உலாவும் வீதி யென்பது, 'மாதர் நூபுரத்தரவவீதி என்றதன் கருத்து.
                                                             (613)

30.-இதுமுதல் எட்டுக்கவிகளில், அந்நகரச்சிறப்பைப் பாண்டவர் பலவாறு
வியந்துகூறுதலைத் தெரிவிக்கின்றார்.

அரசின்வெஞ்சுடிகைகொண்டவவிர்மணிச்சோதிமேன்மேல்
விரவிவந்தெறிப்பப்பச்சை மெய்சிவப்பேறிற்றாக
இரவிதன்னிரதம்பூண்ட வெழுபெயர்ப்பவனவேகப்
புரவியையையுற்றேகொல் புரிவலம்புரிவதென்பார்.

     (இ-ள்,) (இந்நகரத்து மாளிகைகளிற் பதித்துள்ள), அரவின் வெம்சுடிகை
கொண்ட அவிர் மணி-நாகங்களின் வெவ்விய உச்சிக் கொண்டையிற் பொருந்திய
விளங்குகின்ற மாணிக்கங்களின், சோதி-சிவந்த ஒளி, மேல் மேல் விரவி வந்து
எறிப்ப- மேலும் மேலும் மிகுதியாக அடர்ந்துவந்து வீசுதலால், பச்சை மெய்
சிவப்பு ஏறிற்றுஆக-(சூரியனுடைய தேர்க்குதிரையினது) இயற்கையிற் பசுநிறமான
உடம்புசெந்நிறம்மிக்கதாய்விட, இரவி - (அச்செந்நிறத்தைக்கண்ட) சூரியன், தன்
இரதம்பூண்ட எழு பெயர் பவனம் வேகம் புரவியை ஐயுற்றுஏகொல்-தனது தேரிற்
பூட்டப்பட்டுள்ள ஏழென்னும் பெயரையுடைய வாயுவேகம்பொருந்திய குதிரையைச்
சந்தேகித்ததனாலேதானோ, புரிவலம்புரிவது-(அவன்) இந்நகரத்தைப் பிரதட்சிணஞ்
செய்வது, என்பார்-என்று சொல்வார்கள்; (எ-று.)-இதற்கு எழுவாய்-கீழ்க்கவியில்
வந்த 'வேந்தர்' என்பதே; அடுத்த ஏழுகவிகளுக்கும் இங்ஙனமே காண்க.

     மேருமலையை வலம்வருகிற சூரியனை இந்நகரத்தின் பரப்பையுணர்த்தும்
பொருட்டு இந்நகரை வலம்வருகிறவனாகக் கற்பித்து, அங்ஙனம் வலம்வருதற்குக்
காரணம் யாதெனின்,-அவன் இந்நகரத்தின் அருகில் வரும்பொழுது
அவனதுகுதிரையினுடம்பு இயற்கையான பசுமைநிறம்மாறிச்
செந்நிறம்பொருந்தியதனால் அதனை வேறொருகுதிரை யென்றுகருதித்
தன்குதிரையைத் தேடுதற்கு இந்நகரை வலம்வருகின்றனன்போலும் என்று
உத்பிரேக்ஷித்தவாறாம்; தற்குறிப்பேற்றவணி. எழு-ஏழு என்பதன்விகாரம்; இது
'ஸப்த' என்னும் வடசொல்லின் பரியாயநாமமாய் நின்றது. சூரியனது தேர்க்குதிரை
ஒன்றே அதற்கு 'ஏழு' என்றுபெயர்