பக்கம் எண் :

348பாரதம்ஆதி பருவம்

என்பர் ஒருசாரர்; மற்றொருசாரார் 'அவ்வொருகுதிரைக்கு ஏழுபெயர்க ளுள்ளன'
என்பர்; அவ்விருவகையும் 'எழுபெயர்ப்புரவி' என்ற தொடரில் அமையும்.
இந்திரப்பிரத்தத்தின் சிறப்பை விசுவகர்மா தருமனுக்குக் காட்டுவதாகவே 10 -
ஸ்லோகங்கள் இங்குப்பாலபாரதத்து உள்ளன: ஆங்குள்ள வருணனைகளும்
இதிலுள்ள வருணனைகளும் ஒப்புமைப்பட்டவை சிலவேயாகும். விரவிவந்தெறித்து
எனவும் பாடம்.                                             (614)

31.அருளுடையறத்தின்வாழ்வா மந்நகரில்லமெங்கும்
இருளுடையிந்த்ரநீலத் தியன்றசாளரங்கணோக்கி
உருளுடையொற்றைநேமி யுறுபரித்தேரோன்சீறத்
தெருளுடைத்திமிரம்போன சின்னெறிபோலுமென்பார்.

     (இ-ள்.) அருள் உடை அறத்தின் வாழ்வு ஆம் - கருணையையுடையதான
தருமத்தின் வாழ்க்கை யமைந்த, அ நகர் - அந்த நகரத்திலுள்ள, இல்லம்
எங்குஉம்-மாளிகைகளிற் பலவிடத்துமுள்ள, இருள் உடை இந்த்ர நீலத்து இயன்ற
சாளரங்கள்-மிக்ககருநிறமுடைய இந்திரநீலரத்தினங்களாலமைந்த பலகணிகளை,
நோக்கி-பார்த்து,- 'உருள் உடைஒற்றை நேமி உறுபரி தேரோன் சீற-
உருளுதலையுடைய ஒற்றைச்சக்கரமமைந்த குதிரை பூண்ட தேரையுடையவனான
சூரியன் உக்கிரங்கொண்டுஅழித்தலால், தெருள் உடை திமிரம் போன -
தடுமாற்றத்தையுடைய இருள் நுழைந்துஓடிச்சென்ற, சில் நெறி போலும் சிறுவழிகள்
போலும்,' என்பார்-; (எ- று.)

     இந்திரநீலரத்தினத்தினாலாகியதனால் நீலநிறமுடையனவாயிருக்கிற
சாளரங்களை,இரவிக்கு அஞ்சி இருள் இரிந்து சென்ற சிறுவழிக ளென்று குறித்தார்;
தற்குறிப்பேற்றவணி. 'சின்னெறி' என்பதில், சின்மை-சிறுமை.            (615)

32.சமர்முகப்பொறிகண்மிக்க தடமதிற்குடுமிதோறும்
குமருறப்பிணித்தபைம்பொற் கொடித்துகிலசைவுநோக்கி
நமர்புரக்கிழத்தியும்பர் நாயகன்புரத்தினோடும்
அமர்பொரப்பற்பல்கையா லழைப்பதுபோலுமென்பார்.

     (இ-ள்.) சமர் முகம் பொறிகள்-போர்செய்தற்குஉரிய தோற்றத்தையுடைய
யந்திரங்கள், மிக்க-நிறைந்துள்ள, தட மதில் - பெரிய அந்நகரத்து மதிலின்,
குடுமிதோறும்உம்-சிகரங்களி லெங்கும், குமர் உற பிணித்த - அழிவின்மைபொருந்த
(உறுதியாக)க் கட்டப்பட்டுள்ள, பைம் பொன் கொடி துகில்-பசும்பொற்காம்பையுடைய
கொடிச்சீலைகளின், அசைவு-காற்றிலசையுந் தன்மையை, நோக்கி-பார்த்து,-நமர் புரம்
கிழத்தி- 'நம்முடைய இந்நகரத்துக்கு உரிய தேவதை, உம்பர் நாயகன்
புரத்தினோடுஉம்அமர் பொர-தேவராசனான இந்திரனது அமராவதிநகரத்தோடு
போர்செய்ய(க்கருதி);பற் பல் கையால் அழைப்பது போலும்-(தனது) மிகப்பலவாகிய
கைகளினால்(அந்நகரத்தை) அழைப்பதையொக்கும்,' என்பார்-என்றுசொல்லுவார்கள்;
(எ-று.)