பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்349

     துவசங்களின் சீலைகள் அசைதலை, அந்நகரம் தேவநகரத்தைத் தன்னுடன்
போர்செய்ய வரும்பொருட்டுக் குறிப்புக் காட்டித்தனது கைகள் பலவற்றாலும்
அழைப்பதுபோலு மெனக்குறித்தார்; இதுவும் தற்குறிப்பேற்றவணியே. எளியாரை
வலியார் போருக்கு வலிய அழைத்தலாகிய இயல்பின்படி, இந்நகரம் தேவநகரத்தைத்
தன்னுடன் வலியப் போருக்கு அழைக்கும்கொழுமை வாய்ந்த தென்பது போதரும்.
போருக்குஉரிய பலவகையந்திரங்களை மதிலில் அமைத்துவைத்தல் இயல்பு. குமர்-
அழியாமை, நகரதேவதை பெண்பாலாயிருத்தல்பற்றி 'புரக்கிழத்தி' என்றார்.

33.தசும்புறுமகிலின்றூபஞ் சாறடுகரும்பின்றூபம்
அசும்பறாமடையின்றூப மவிபெறுமழலின்றூபம்
விசும்புறநான்குதிக்கு மிசைமிசையெழுதனோக்கிப்
பசும்புயலேழன்றின்னும் பலவுளவாகுமென்பார்.

     (இ-ள்,) தசும்பு உறும் - குடங்களிலிட்டுப் புகைக்கின்ற, அகிலின்-
அகிற்கட்டைகளினின்று எழுந்த, தூபம்-புகையும், கரும்பின் சாறு அடு -
கருப்பஞ்சாற்றைக் காய்ச்சுதலினா லுண்டாகிற,தூபம்-புகையும், அசும்பு அறா-
கால்வழுக்குதல்நீங்காத, மடையின் 'மடைப்பள்ளியினின்று எழுகிற, தூபம் -
சமையற்புகையும், அவிபெறும்-அவி சொரியப்படுகிற, அழலின்-
ஓமாக்கினியின்றுஎழுகிற, தூபம் - புகையும், (ஆகிய இவை), விசும்புஉற,-
ஆகாயத்தைஅளாவ, நான்கு திக்குஉம் - எல்லாப்பக்கங்களிலும், மிசை மிசை
எழுதல்-மேன்மேல்எழுதலை, நோக்கி - பார்த்து,- 'பசும்புயல் ஏழ்அன்று-
கருநிறங்கொண்ட மேகங்கள்ஏழுமாத்திரமே யல்ல: இன்னும்பல உள ஆகும்-,'
 என்பார்-என்று சொல்வார்கள்; (எ- று.)

     அந்நகரத்திற்பலவிடங்களிலும் மிகுதியாயெழுகிறபலவகைப்புகைகளைப்
பார்த்துப் பற்பலமேகங்களென மாறுபடக்கருதிக் கூறியது-மயக்கவணி. புயல்ஏழ்-
சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம், சங்கிருதம், துரோணம், காளமுகி,
நீலவர்ணம் எனப்படும், எப்பொழுதும் சமைத்தல்தொழில் நீங்காத தென்றற்கு,
'அசும்பறாமடை' என்றார். அசும்பு-வழுக்குநிலம். மடை - சமைத்தல். இது -
ஆகுபெயரலாய், சமையலிடத்தைக் குறித்தது. விரைவில் புகை
தணியாதிருத்தற்பொருட்டு, அகிலைக் குடத்திலிட்டுப் புகைப்பரென்க.     (617)

34.அடுக்குறநிலஞ்செய்மாடத் தணியுறுபெரும்பதாகை
மிடுக்கினாலனிலனெற்றி விசையுடனெடுத்துமோத
உடுக்களுநாளுங்கோளு முள்ளமுமுடலுஞ்சேர
நடுக்குறுகின்றவிந்த நகர்வழிபோகவென்பார்.

     (இ-ள்.) 'அடுக்கு உற-(ஒன்றன்மே லொன்று) அடுக்காகப் பொருந்த, நிலம்
செய் - நிலைகளை யமைத்துச் செய்யப்பட்ட, மாடத்து-மளிகைகளின்மேல்,
அணிஉறு-வரிசையாகப் பொருந்திய, பெரும் பதாகை-பெரியகொடிச்சீலைகளை,
அனிலன்-வாயுதேவன், மிடுக்கினால் எற்றி-(தன்) வலிமையால் வீசி, விசையுடன்