52.- மங்கை ஈன்றாளென்று கேட்டலும், மன்னவன், அக்குழந்தையைத் தாயின்கைக்கு அகப்படாமைகொண்டு, அவளிடம் பணிந்துபேசுதல். மதலையைப்பயந்தனண் மடந்தையென்றலும் கதுமெனச்சென்றுதாய் கைப்படாவகை இதமுறப்பரிவுட னெடுத்துமற்றவள் பதயுகத்தாமரை பணிந்துபேசுவான். |
(இ-ள்.) 'மடந்தை - கங்காதேவியென்னும்பெண், மதலையை பயந்தனன் - ஓராண்மகவை யீன்றாள்,' என்றலும் - என்று (பணியாளர் தன்னிடம்வந்து) கூறியவுடனே, (சந்தனுமன்னவன்),- கதுமென சென்று- விரைந்துபோய் (பிறந்த அக்குழந்தை), தாய் கை படாவகை-(பெற்ற) தாயின் கையில் அகப்படாதபடி, இதம் உற- (அந்தக்குழந்தைக்கு) நன்மையுண்டாகுமாறு, பரிவுடன் - அன்போடு, எடுத்து-, மற்றுஅவள் - மாறுபட்ட [பெற்ற குழந்தையைக் கங்கையில் வீசிமாய்க்குங் குணமுடைய]அந்தத்தேவியின், பத யுகம் தாமரை - தாமரை மலர்போன்ற உபயபாதங்களில்,பணிந்து - வணங்கி, பேசுவான் - சொல்வானானான்; (எ - று.) - பேசுவதை மேலேகாண்க. தன்தேவியைத் தன்கருத்துக்கு இசைவிக்கவேணுமென்று எண்ணிப் பேசுவதனால், மன்னவன் பேசும்போது, தன்தேவியின் பதயுகத்தாமரையிற் பணிவானாயினான். குழந்தையைப் பெற்றவுடன் விரைவுடன்சென்று எடுத்தது, முன்னைய குழந்தைகளைப் போலவே இந்தக் குழந்தையையும் கங்கையில் எறியாமலிருக்கும் பொருட்டு. (60) 53.-அந்தப்புதல்வனைக் கொன்றிடாதிருக்குமாறு மன்னவன் தேவியை வேண்டுதல். நிறத்துகமரபினை நிலைபெறும்படி வெறுத்தெனைமுனியினும் வேண்டுமாலிது மறுத்தனன்யானென மனஞ்செயாதினிப் பொறுத்தருள்புரிகவிப் புதல்வன்றன்னையே. |
மூன்று கவிகள்- ஒருதொடர் (இ - ள்.) மரபினை - வமிசத்தை, நிலைபெறும்படி - (அழியாது) நிலைபெற்றிருக்கும்படி, நிறுத்துக - நிற்கச்செய்வாய்: வெறுத்து எனை முனியின்உம் -வெறுப்புக்கொண்டு என்மீதுகோபித்தாலும், இது வேண்டும் - இச்செய்கை செய்தேதீரவேண்டும்: யான் மறுத்தனன் என - (உன்மனப்போக்கின்படி செய்யமுடியாதவாறு)நான் தடுத்தேனென்று, மனம் செயாது - மனத்திற் (கொடுமை) கொள்ளாது, இனி -இப்போது, பொறுத்து - பொறுமைகொண்டு, இ புதல்வன்தன்னை - இந்தஆண்மகவை, அருள்புரிக - கருணைசெய்க; கருணைபுரிகஎன்றது - ஆற்றுவெள்ளத்தில் வீசியெறிந்து மரித்திடச் செய்யாமல்புதல்வனுக்கு உயிர்ப்பிச்சை தரவேணுமென்றுவேண்டியபடி. இப்புதல்வனை அருள்புரிகஎன்று மன்னவன் வேண்டினானாயினும், நீ உடன்படாவிடினும் நான் இம்முறைநதிப்புனலிலே ஈன்ற மகவை யெறிதற்கு ஒருப்படேனென்ற தன் |