(இ-ள்.) வாய்மொழி அறத்தின்மைந்தன் - உண்மைச்சொற்களையுடைய தருமபுத்திரன் யாய்மொழி தலைமேல்கொண்டுஉம் - தாயாகிய குந்தியினதுவார்த்தையைச்சிரமேற்கொண்டுநன்குமதித்தும், இளையவர் மொழிகள் கேட்டுஉம் - [வீமன்முதலிய] தம்பியர்களுடைய வார்த்தையைக் கேட்டு அவற்றின்படிநடந்தும், வேய் மொழி-அழகிய சொல்லையும், வேய்தோள்- மூங்கில்போன்றதோள்களையுமுடைய வல்லி-பூங்கொடிபோன்ற திரௌபதியினது, மெல்மொழி-மென்மையான சொற்களை, விரும்பல் உற்றுஉம்-விருப்பத்தோடு கேட்டும், மா நகர்வாழும் நாளில்-பெரிய அந்நகரத்தில்வாழ்கின்ற நாட்களில், (ஒருநாள்),-ஆய்மொழிபாடல் - ஆராய்ந்த (சிறந்த) சொற்களையுடைய இசைப்பாட்டைக்கொண்ட, யாழ்-மகதீயென்ற வீணையையுடைய, ஓர் அந்தணன் - ஒருமுனிவன் [நாரதன்], ஆங்கண்வந்தான் - அவ்விடத்தில் வந்தனன்; (எ-று.) இம்முனிவன் நாரதனாவன். வேய்மொழி-வினைத்தொகை: வேய்தல் - அழகுசெய்தல்; இனி, கரும்புபோல் இனியமொழியெனின், வேய்என்றசொல்- கழையென்றதன்பரியாயமாய்க்கரும்பைக் குறித்த தென்க. 'பாடலோடோரந்தணன்' எனவும் பாடம். (624) 41. - பாண்டவர் நாரதனை உபசரித்தல். இந்தநாரதனைப்போற்றி யிருபதம்விளக்கிவாசச் சந்தனாகருவின்றூபந் தவழ்மணித்தவிசினேற்றி வந்தனாவிதியிற்சற்றும் வழுவறவழிபாடெய்தி அந்தநால்வருமவ்வேந்து மாதிவாசவர்களானார். |
(இ-ள்.) இந்த நாரதனை போற்றி-இங்ஙனம்வந்த நாரத முனிவனை நமஸ்கரித்து,இருபதம்விளக்கி-(அவனுடைய) இரண்டு திருவடிகளையும் தீர்த்தங்கொண்டு) கழவி,வாசம் சந்தனம் அகரு இன்தூபம் தவழ் மணி தவிசின் ஏற்றி-பரிமளத்தையுடையசந்தனக்கட்டையும் அகிற்கட்டையும் ஆகியஇவற்றின் இனியபுகை யூட்டப்பெற்ற இரத்தினம்பதித்த சிங்காசனத்தில் (அவனை) எழுந்தருள்வித்து,வந்தனாவிதியில் சற்றுஉம் வழு அற வழிபாடுஎய்தி - வழி பாட்டுக்கு உரியவிதிமுறைமையிற் சிறிதும் தவறுதலில்லாதபடி உபசரித்தலைச் செய்து, அந்தநால்வர்உம் அவேந்துஉம்-(வீமன் முதலிய)அந்தத்தம்பிமார் நால்வரும்அந்தத்தருமராசனும், ஆதி வாசவர்கள் ஆனார் - (தங்கள்) பூர்வசன்மமாகிய பழையஇந்திரர்களையே போன்றார்கள்;(எ-று.) தேவவிருடியாகிய நாரதன் தன்பக்கல் எழுந்தருள அவனுக்கு மகிழ்ச்சியோடு விசேஷஉபசாரங்களைச் செய்து மேன்மைபெறுதல் இந்திரனுக்கு இய்லபாதலால், இங்ஙனம் கூறினார். சந்தநாகரு, வந்தநாவிதி, ஆதிவாவர் - வடமொழித்தொடர்கள். (625) 42. நாரதன் அவர்கட்கு ஒருகதை கூறத்தொடங்கல். வரமிகுகற்பினாளு மாமியும்வணங்கிநிற்பச் சரிகமபதநிப்பாடற் றண்டுதைவருசெங்கையோன் |
|