பக்கம் எண் :

இந்திரப்பிரத்தச் சருக்கம்355

அழகுடைமங்கையரது உடம்பிற் சிறந்த அழகை எள்ளளவு எள்ளளவாக எடுத்துத்
திரட்டி அதுகொண்டு அமைக்கப்பட்ட பெண்: திலம்-எள், உத்தமா- மேலானவள்.
                                                             (627)

44.காண்டலுமவண்மேல்வைத்த காதலாலுழந்துநெஞ்சில்
ஈண்டியதுயரத்தோடுமிருவருநயந்தபோழ்தப்
பூண்டகுபொலிவினாடன் பொருட்டமர்தம்மிற்பூண்டு
மாண்டனரென்னும்வார்த்தை மாநிலமறியுமன்றே.

     (இ-ள்.) இருவர்உம் - அந்த இரண்டு அசுரர்களும், காண்டலும் -(அவளைக்)
கண்டவுடனே, அவள்மேல் வைத்த காதலால் - அவளிடத்திற் கொண்ட
ஆசையினால், உழந்து - வருந்தி, நெஞ்சில் ஈண்டிய துயரத்தோடுஉம் -மனத்தில்
மிகுந்த காமவேதனையுடனே, நயந்த போழ்து-(ஒருங்கு அவளை)
விரும்பிவரித்தபொழுது, அபூண்தகு பொலிவினாள்தன் பொருட்டு-ஆபரணங்கள்
(தன்னால் அணியப்படுதலால்) பெருமையடைதற்குக் காரணமான
மேனியழகையுடையஅவள்பொருட்டு, தம்மில் அமர் பூண்டு - தமக்குள் போர்
புரிந்து, மாண்டனர் -இறந்தார்கள், என்னும் - என்கிற, வார்த்தை - வரலாற்றை,
மா நிலம் அறியும்அன்றே - பெரிய உலகத்திலுள்ளார் அறிவார்களன்றோ?
(எ-று.) 'காதலாலழிந்து' என்றும்பாடம்.

     இவ்விரண்டுகவிகளிற் குறித்த கதையின் விவரம்:-இரணியகசிபு என்ற
அசுரராசனது குலத்தில் நிகும்பனென்றவனது புத்திரகளாய்த் தோன்றிய சுந்தன்
உபசுந்தன் என்ற இருவரும் தம்மில் மிக்கமனவொற்றுமையுடையராய் 
எப்பொழுதும்ஒருவரையொருவர் விட்டுப்பிரியாராய்த் தமது சுகதுக்கங்களைச்
சமமாகப்பாவித்துவந்தனர். அவர்கள் இளமையில் மூவுலகத்தையும் வெல்லக்கருதி
விந்திய மலையைச்சேர்ந்து திரிமூர்த்திகளைக்குறித்து நெடுங்காலம் அரிய
பெரியதவத்தைச் செய்கையில்,அத்தவத்தின் கடுமையைக் கண்டு அஞ்சிய
தேவர்கள் மாயையினால் பல மகளிரையேவி அவர்களுடைய தவத்துக்குப்
பலவாறு பங்கஞ்செய்ய முயன்றும்முடியவில்லை. பின்பு பிரதியக்ஷமான
திருமூர்த்திகள் அச்சுந்தோபசுந்தர்வேண்டியபடியெல்லாம் அவர்கட்கு
வரங்களைக் கொடுத்து வருகையில்,அவ்வசுரர்கள் 'நாங்கள்
எவராலும்கொல்லப்படாதவராகவேண்டும்' என்று வரம்வேண்டினர். அதற்கு
ஆதிதேவர்கள், 'உங்களிருவர்க்கும் பிறவுயிர்களெவற்றாலும்மரணமில்லை'
என்று வரமளித்தார்கள். பின்பு அவ்விருவரும் மிகச் செருக்கி
மூவுலகையும் வெல்லத்தொடங்கி இந்திராதி தேவர்களுக்கும், பற்பல
முனிவர்களுக்கும், மனிதர்களுக்கும், மற்றும் பலர்க்கும் மிக்கதுன்பத்தை
விளைத்துஅநேகம் பிராணிகளை அழித்து வந்தனர். பிறகு தேவர்களும்
முனிவர்களும்பிரமனைச் சரணமடைந்து செய்திகூற, அக்கடவுள் விசுவகர்மாவைக்
கொண்டுதிலோத்தமையை யுண்டாக்கி அவளைச் சுந்தோபசுந்தர் இருக்கிற
இடத்திற்குஅனுப்பினான். விந்தியமலையின் தாழ்வரையில் அவ்விருவரும்
உல்லாசமாகவீற்றிருக்கையில் அம்மங்கையைக் கண்டு அவளழகை வியந்து
ஒருங்கு காமுற்றுஅருகிற்