பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்359

   'இறையோடுயரிருகையுமெடுத்து' என்பதற்கு-தலைமேற் கை தூக்கிக்கொண்டு
என்றும் உரைக்கலாம்; இறை-தலை. இறையோடுயர் என்பதற்கு-
கைரேகையாற்சிறந்த என்றாருமுளர். முறையோ முறையோ, அடுக்கு-
அவலம்பற்றியது. வேதவிதிப்படிஒழுகுபவன்- வைதிகன்.             (633)

3.-அருச்சுனன் வந்து வினாவ, அந்தணன் செய்திகூறுல்.

கடைகாவலர்குறைகூறலும் விசயன்கடிதிற்றன்
புடைகாவலர்தொழவந்து புவித்தேவனைமறையின்
தொடைகாவலவிதுவென்னென வவனுந்தொடுகழலோய்
விடைகாவலர்நிரைகொண்டனர் வில்வேடுவரென்றான்.

     (இ-ள்.) கடைகாவலர் - அரண்மனை வாயில்காவலாளர்கள், குறை கூறலும்-
(அந்த அந்தணனது) முறைப்பாட்டை (அரண்மனையினுட்சென்று) சொன்னவுடனே,
விசயன்-அருச்சுனன், கடிதின்- விரைவாக, தன் புடை காவலர் தொழ வந்து -
தனதுபக்கங்களில் அரசர்கள் வணங்க வந்து, புவிதேவனை-
பூதேவனாகியபிராமணனை, (நோக்கி), மறையின் தொடை காவல இதுஎன் என-
'வேதங்களின் தொடர்ச்சியைப் பாதுகாத்தலில்வல்லவனே! நீ இங்ஙனம்முறையிடுவது
என்னகாரணத்தால்?' என்றுவினாவ, அவன்உம்-அந்த அந்தணனும், விடை -
(அவ்வினாவிற்கு) விடையாக, 'தொடு கழலோய்- அணிந்தவீரக்கழலையுடையவனே!
வில் வேடுவர் நிரை காவலர் கொண்டனர்-வில்லின் திறத்தையுடைய வேடர்கள்
(எனது) பசுக் கூட்டங்களை (அவற்றை)க் காக்கின்ற இடையர்களிடத்தினின்று
கொள்ளைகொண்டார்கள்.' என்றான்-என்றுசொன்னான்; (எ-று.)

     விடைஎன்றான்-என்றுவிடைகூறினா னென்க. என்றான் என்பது-என்று
சொன்னானென்றுபொருள்படுதலால், சொல்லெச்சம். எதிர்த்த இடையர்களைப்
பொருது வென்றகருவியை யுடைமை தோன்ற, 'வில்வேடுவர்' என்றான்.
விடைகாவலர்- இடையர்என்றாரு முண்டு. தொடை - ஒழுக்கமெனினுமாம். (634)

4.-அருச்சுனன் அந்தணனுக்கு அபயமளித்துவில்லெடுக்கச்
சென்றவிடத்துத் தருமனுடனே திரௌபதியைக் காணுதல்.

அஞ்சாதொழிமுனிநீயுன தானின்கணமின்றே
எஞ்சாவகைதருவேனென வேவுக்கொருதிலகன்
வெஞ்சாபமெடுப்பான்வரு விசயன்றருமனுடன்
மஞ்சார்பொழில்விளையாடிடு மயில்சீறடிகண்டான்.

     (இ-ள்.) 'முனி -முனிவனே! நீ-, அஞ்சாதுஒழி - அஞ்ச வேண்டா; உனது
ஆனின் கணம் - உன்னுடைய பசுக்கூட்டத்தை, இன்றுஏ- இப்பொழுதே, எஞ்சா
வகைதருவேன்-(ஒன்றுங்) குறையாதபடி(யான்மீட்டுக் கொணர்ந்து) கொடுப்பேன்,'
என- என்று (அந்தணனுக்கு அபயமளித்து) உறுதிமொழிகூறி, வெம் சாபம்
எடுப்பான்வரு - கொடிய (தனது) வில்லையெடுத்தற்கு (ஆயுதசாலையில்) வந்த,
ஏவுக்கு ஒருதிலகன் விசயன் - பாணப் பிரயோகவித்தைக்கு ஒரு திலகம்போல
அழகுசெய்பவனான அருச்சுனன், தரும