னுடன் மஞ்சு ஆர்பொழில் விளையாடிடு மயில் சிறுஅடிகண்டான்- தருமபுத்திரனுடனே மேகம்படிந்த [உயர்ந்த] சோலையில்விளையாடுகிற மயில்போன்றதிரௌபதியினுடைய சிறிய பாதங்களை அங்குப் பார்த்தான்; (எ-று.) "நுதலடிநுசுப்பென மூவழிச் சிறுகி" என்றபடி மகளிர்க்குக் கால்சிறுத்திருத்தல் உத்தமவிலக்கணம். மஞ்சார் பொழில் விளையாடிடு மயில் - அடையடுத்த உவமையாகுபெயர். (635) 5.- அருச்சுனன் வேடர்களைவென்று நிரைமீட்டல். காணாமெய்ந்நடுங்கா வொளிகருகாமனமிகவும் நாணவிரைவொடுசாயக நாண்வெஞ்சிலைகொள்ளாச் சேணாநெறிசெல்லா நனிசீறாவமர்வெல்லா மாணாநிரைமீளாவொரிமைப்போதினில்வந்தான். |
(இ-ள்.) காணா - (தருமனுடன் திரௌபதியைக்)கண்டு, மெய் நடுங்கா- (அந்தத்தோஷத்தால்) உடம்புநடுங்கி, ஒளிகருகா- முகத்தில் ஒளிகுன்றி, மனம் மிகவும்நாணா- மனத்தில் மிகவும்வெட்கங் கொண்டு, சாயகம் நாண் வெம்சிலை விரைவொடுகொள்ளா - அம்புகளையும் நாணியையுடைய கொடியவில்லையும் விரைவாகஎடுத்துக் கொண்டு, சேண் ஆம் நெறி செல்லா - நெடுந்தூரமாகியவழியிற் போய்,நனி சீறாஅமர்வெல்லா-மிக்ககோபங்கொண்டு போர்செய்து(வேடர்களை) வென்று,மாண் ஆ நிரை மீளா - மாட்சிமைப்பட்ட பசுக்கூட்டங்களை மீட்டு, ஒர் இமைபோதினில் வந்தான் - ஒருமாத்திரைப்பொழுதிலே மீண்டு வந்து சேர்ந்தான்; (எ-று.) பசுக்களுக்கு மாட்சி- ஓமத்துக்கு வேண்டிய பால் தயிர் நெய் முதலியவற்றை அளித்தல் முதலியன. மிகவும், உம்மை - சிறப்பு. ஸாயகம் - வடசொல். 'விரைவொடுசாலையினாண்' என்றும் பாடம். 6.-அருச்சுனன் தீர்த்தயாத்திரைக்குத் தருமனிடம் விடைபெறுதல். தொறுக்கொண்டவருயிருந்தொறுநிரையுங்கவர்சூரன் மறுக்கம்படுமறையோன்மன மகிழும்படிநல்கிப் பொறுக்குந்தவமுனிசொற்படி புனிதப்புனல்படிவான் நிறுக்குந்துலைநிகர்தம்முனை நிகழ்வோடுபணிந்தான். |
(இ-ள்.) தொறு கொண்டவர் உயிர்உம் - பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொண்டுசென்ற வேடர்களுடைய உயிரையும், தொறு நிரைஉம்-பசுக்கூட்டத்தையும், கவர்-கவர்ந்துகொண்டுவந்த,சூரன்- வீரனாகிய அருச்சுனன்,-மறுக்கம் படு மறையோன் மனம் மகிழும் படி நல்கி - கலக்கமடைந்த அந்த முனிவனது மனம் மகிழும்படி (பசுக்கூட்டத்தை அவனுக்குக்) கொடுத்து, (உடனே), பொறுக்கும் தவம் முனி சொல் படி புனிதம் புனல்படிவான் - தாங்கியதவத்தை யுடைய நாரதமுனிவனது சொல்லின்படி புண்ணியதீர்த்தங்களில் ஸ்நாநஞ் செய்தற்பொருட்டு [தான் தீர்த்தயாத்திரை செல்லும் |