பொருட்டு விடைபெறுதற்காக], நிறுக்கும் துலை நிகர் தம்முனை நிகழ்வோடு பணிந்தான்-(பொருள்களை) நிறுத்து வடையறுக்கின்ற துலாக்கோலை யொத்த [நடுவுநிலைமைதவறாத] தமையனான தருமனைப் பி யாணசந்நாகத்தோடு வணங்கினான்;(எ-று.) அருச்சுனன் தீர்த்தயாத்திரை செய்யும்படி தருமனைவணங்கி விடைபெற்றுக்கொண்டா னென்றபடி. நிரை கவர்தல்-பொருளிலக்கணத்தில் வெட்சியென்னுந் திணையும், நிரைமீட்டல்- கரந்தை யென்னுந் திணையுமாம். புனிதம்=பூதம்:வடசொல். நிறுக்குந்துலை நிகர் தம்முன்-தனதுநாட்டுக்குடிகளை முறைதவறாது நடத்தல்போலவே தாங்களும் நடக்கும்படி நிஷ்பக்ஷபாதமாக நீதி செய்பவ னென்க. 'நினைவோடு பணிந்தான்' என்றும் பாடம். (637) இதுமுதல் அருச்சுனனது தீர்த்தயாத்திரை. 7.- அருச்சுனன் கங்கையில் நீராடுகையில், நாககன்னியரும் நீராடவருதல். ஆடம்பரமன்வேட மகற்றித்தொழுதகுதொல் வேடம்பெறுமறையோருடன் விசயன்புரவிசயன் சூடந்தருபாகீரதி தோய்காலையிலவணே சேடன்றலமடவார்புன லயர்வானெதிர்சென்றார். |
(இ-ள்.) விசயன்- அருச்சுனன்,- ஆடம்பரம் மன் வேடம் அகற்றி - ஆடம்பரத்தையுடைய (தனது) இராசவேடத்தை நீக்கி [தீர்த்தயாத்திரைக்கு உரிய வைதிகவேடங்கொண்டு], தொழுதகு தொல் வேடம் பெறு மறையோருடன்- (யாவரும்)வணங்கத் தக்க தொன்று தொட்டுவருகிற தவத்துக்கு உரிய வேடத்தையுடையஅந்தணர்களுடனே, புர விசயன் சூடம் தருபாகீரதிதோய் காலையில்- திரிபுரத்தைவென்றவனான சிவபிரானதுசடைமுடியினால் தரப்பட்டதாகிய கங்காநதியில்நீராடும்பொழுது, அவண்ஏ- அவ்விடத்திலே, சேடன் தலம் மடவார் -ஆதிசேஷனுக்கு உரியதான நாகலோகத்திலுள்ள மகளிர், புனல் அயர்வான்-நீராடும்பொருட்டு, எதிர்சென்றார்-அவனெதிரில் வந்தார்கள்; (எ-று.) ஆடம்பரம் - கண்டவளவில் நன்குமதிக்கத்தக்க கம்பீரமானதோற்றம்; ஆடையணிகளால் ஆவது. ஆடம்பரம், வேஷம், புரவிஜயன், ஐூடம், ஸேஷன்- வடசொற்கள். 'தொழுதகு தொல்வேடம்' - மரவுரியுடுத்தல், சடைமுடிதரித்தல், மான்றோல்போர்த்தல், புலித்தோலிலிருத்தல் முதலியன. (638) 8.- அருச்சுனன் உலூபியை மணஞ்செய்து கொள்ளல். ஓடுங்கயல்விழியாரி லுலூபிப்பெயரவளோடு ஆடும்புனலிடைநின்றவ னநுராகமிகுந்தே நாடும்பிலவழியேயவள் பின்சென்றுநலத்தால் நீடுங்கொடிமணமெய்தினன் முகில்போலுநிறத்தான். |
(இ-ள்.) முகில் போலும் நிறத்தான்-மேகம் போலுங் கருநிற முடையவனாகிய, ஆடும் புனலிடை நின்றவன் - ஸ்நானஞ்செய்கிற அக்கங்கைநீரில் நின்றவனான. அருச்சுனன், ஓடும்கயல்விழியாரில் - (அங்குநீராட வந்த காதளவும்) ஓடுகிற கயல்மீன்போன்றகண்களை |