பக்கம் எண் :

362பாரதம்ஆதி பருவம்

யுடையவர்களான நாககன்னிகைகளுள், உலூபி பெயரவளோடு- உலூபியென்னும்
பெயரையுடையவளுடனே, அநுராகம் மிகுந்து- காதல்மிகுந்து, நாடும் பிலம் வழியே
அவள் பின்சென்று - ஆராய்ந்து செல்லத்தக்க பிலத்துவாரவழியாக
அவள்பின்னேசென்று, (பாதாளஞ்சேர்ந்து அங்கு), நலத்தால் நீடும் கொடி மணம்
எய்தினன்- அழகினால் மிக்க பூங்கொடி போன்ற அவளை மணந்தான்; (எ-று.)

     நீராடும்போது அந்நீரினிடையே உலூபியை அருச்சுனன் கண்டானாக,
காதல்கொண்ட அன்னாள், பிலவழியே நாகலோகத்துத் தன்மாளிகைக்கு அவனை
அழைத்துக்கொண்டு போயினாளென்று பாரதங்கள் கூறும். அநுராகம்- வடசொல்.
புதிதாகச்செல்லும் மனிதருக்குப் பிலவழி இயங்குதற்கு அரிய நெறியென்பது
தோன்ற, 'நாடும்பிலவழி' எனப்பட்டது. 'முகில்போலு நிறத்தான்' என்று
அருச்சுனனது கறுப்பிலழகை விளக்கியவாறு.                        (639)

9.-அருச்சுனன் நாகலோகத்திற் சிலநாள் இருந்து,
இராவானைப் பெறுதல்.

இம்மென்றளிமுரல்பாயலி லின்பத்தைவளர்த்தும்
பொம்மென்பரிபுரநாண்மலர் பொற்சென்னியில்வைத்துஞ்
செம்மென்கனியிதழாளொடு சின்னாணலமுற்றான்
அம்மென்கொடியனையாளுமிராவானையளித்தாள்.

     (இ-ள்.) (அவ்வருச்சுனன்),- இம் என்ற அளி முரல் பாயலில் -
இம்மென்னும்ஒலிபடவண்டுகள் ஒலிக்கின்ற மலர்ப்படுக்கையில், இன்பத்தை
வளர்த்துஉம் - (அவளோடு) சுகத்தை  மிகுதியாகப்பெற்றும்,-பொம்மென் பரிபுரம்
நாள் மலர் - பொம்மென்று ஒலிக்கிற சிலம்பென்னும் அணியை யணிந்த
அன்றுபூத்ததாமரை மலர்போன்ற அவளுடைய பாதங்களை,
பொன்சென்னியில்வைத்து உம் - அழகிய தனது சிரசின்மீது கொண்டும்,-
செம் மெல்கனி இதழாளொடு - சிவந்த மென்மையான கொவ்வைப்பழம்போன்ற
அதரத்தையுடைய அவளுடனே, சில் நாள் நலம்உற்றான்-சிலநாள் இன்பத்தை
அனுபவித்தான்; (பின்பு), அம் மெல்கொடி அனையாள் உம்- அழகிய
மென்மையானபூங்கொடியைப் போன்ற அவ்வுலூபியும், இராவானை அளித்தாள்-
இராவானென்றபுதல்வனைப்பெற்றாள்;

     இம்மெனல், பொம்மெனல்-ஓசை யநுகரணம். அருச்சுனன் அவளுடைய
பாதத்தைச் சிரமேற்சூடுதல், அவள் ஊடல்கொண்ட காலத்தில் அதனைத்
தணிவித்தற்குஎன்க: ஊடலாவது- ஆடவரும் மகளிரும் இன்பநிலையில்
அவ்வின்பத்தைமிகுவிக்கும்பொருட்டு ஒருவரோடொருவர் சிறிது கொள்ளும்
பிணக்கம்: புலவியென்றுகூறப்படும். இராவாந்-வடமொழிப் பெயர்; அராவானெனப்
பெயர் குறித்தல்வடநூலுக்கு முரணாம். 'இம் மென்றளிமுரல்' என்ற
அடைமொழியால், பாயல் -மலர்ப்பள்ளியாயிற்று.                  (640)

10.-அருச்சுனன், நாகலோகத்தினின்று மீண்டு கிழக்கு நோக்கிச் செல்லுதல்.

நாகாதிபன்மகண்மைந்த னலங்கண்டுமகிழ்ந்து
நாகாதிபன்மகன்மீளவுநதியின்வழிவந்து