12.-தென்றிசைநோக்கிவந்து திருவேங்கடமலை சேர்தல்.
பத்திக்குவரம்பாகிய பார்த்தன்பலதீர்த்தம் அத்திக்கினுமெத்திக்கினு மாமென்றவையாடிச் சித்திக்கொருவிதையாகிய தென்னாட்டினையணுகித் தத்திச்சொரியருவித்தட வரவக்கிரிசார்ந்தான். |
(இ-ள்.) பத்திக்கு வரம்பு ஆகிய - பக்திக்கு ஓர் எல்லையாகவுள்ள,
பார்த்தன்-அருச்சுனன், - அ திக்கின்உம் - அந்தக் கீழ்த் திசையிலும், எ
திக்கின்உம் -பலவிடங்களிலுமுள்ள, ஆம் என்றவை- விசேஷமுடையனவாமென்று
சொல்லப்பட்டவையான, பல தீர்த்தம் - அநேக தீர்த்தங்களில், ஆடி - நீராடி,-
(பின்பு),-சித்திக்கு ஒரு விதை ஆகிய -கருதியபயன் கைகூடுதற்கு ஒப்பற்ற
மூலமாயுள்ள, தென்நாட்டினை - தட்சிணபூமியை, அணுகி - அடைந்து, தத்தி
சொரிஅருவி தட அரவக்கிரி-குதித்துப்பாய்கின்ற அருவிகளையுடைய
பெரியதிருவேங்கடமலையை, சார்ந்தான்-;
தென்திசையிலே சோளதேசத்தைக்கடந்து பாண்டியனது *மணலூருபுரத்தில்
வனச்சோலையிலே சித்திராங்கதையைக்கண்டு மணந்து இன்புற்றுச் சேதுவைக்
கண்டுமீண்டு கருக்கொண்டிருந்த அந்தச் சித்திராங்கதையையடைந்து அவள்
கருவுயிர்த்தஆண்மகவை மாமனாரின்விருப்பின்படி அவற்குத்தத்துக்கொடுத்து
அவனுடையமகவில்லாக்குறையை நீக்கி மேலைத்திசையில் தீர்த்தங்களைச்
சேவித்துவிட்டுக்கோகர்ணக்ஷேத்ர மடைந்தான் என்ற இவ்வளவே
பாலபாரதத்திலுள்ளது.பரதகண்டத்திலே தக்ஷிண தேசமாகிய தமிழ்நாடு,
திருவேங்கடம் திருவரங்கம்அத்திகிரி முதலிய பல விஷ்ணுஸ்தலங்களுக்கும்,
சிதம்பரம் காஞ்சீபுரம் முதலியபலசிவஸ் தலங்களுக்கும் இடமாய்,
அடியார்கட்குக்கருதிய பயன் கைகூடுதற்குஉரியதானமாக இருத்தலால், 'சித்திக்
கொரு விதையாகிய தென்னாடு' எனப்பட்டது. தென்னாட்டுக்கும் வடநாட்டுக்கும்
இடையெல்லை திருவேங்கட மென்பது தோன்ற, 'தென்னாட்டினை யணுகி
அரவக்கிரி சார்ந்தான்' என்றார். (அரவம் - பாம்பு; இங்கே, ஆதிசேஷன்)
திருவேங்கடமலை சேஷகிரி யென்று ஒரு பெயர் பெறுதலால், 'அரவக்கிரி'
எனப்பட்டது. பரமபதநாதனது ஆஜ்ஞையின்படி ஆதிசேஷனேமலையுருவ
மானதனாலும், மேரு மலையிலிருந்து ஆதிசேஷனுடனே வாயுவினாற்
கொணரப்பட்டதனாலும், இதற்கு இப்பெயர் வாய்த்தது: இது- திருமாலினது
திவ்வியதேசங்கள் நூற்றெட்டனுள் ஒன்றும், வடநாட்டுத்திருப்பதிகள்
பன்னிரண்டில்முதலதுமாகிய தலம். 'தத்திச் சொரி யருவி' என்ற
அடைமொழியால், அத்திருமலையில் ஆகாசகங்கை, பாபவிநாசம்,
பாண்டவதீர்த்தம், குமாரதாரை,தும்புருதீர்த்தம், கோனேரி, - ஆழ்வார்தீர்த்தம்
முதலிய பல புண்ணியதீர்த்தங்கள்இருத்தல் தோன்றும். (643)
13.-காஞ்சீபுரத்தை யடைதல்.
இச்சைப்படிதன்பேரற மெண்ணான்கும்வளர்க்கும் பச்சைக்கொடிவிடையோனொரு பாகந்திறைகொண்டாள் |
* மணிபூரபுரம் என்று பிரதிபேதம்.