பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்373

19.-திருவரங்கஞ் சேர்ந்து, நம்பெருமாளைத் திருவடி தொழுதல்.

*இலங்காபுரிமுன்செற்றவ னிருபோதும்வணங்கத்
துலங்காடரவணைமேலறி துயில்கொண்டவர்பொற்றாள்
பொலங்காவிரியிருபாலும் வரப்பூதலமங்கைக்கு
அலங்காரமளிக்குந்தென் னரங்கத்திடைதொழுதான்.

     (இ-ள்.) இலங்காபுரி முன் செற்றவன் -இலங்கை நகரத்தை முன்பு
அழித்தவனான இராமபிரான், இருபோதுஉம் - (காலைமாலை யென்னும்)
இரண்டுசந்தியாகாலங்களிலும், வணங்க - சேவிக்க, துலங்கு ஆடு அரவு
அணைமேல்அறிதுயில் கொண்டவர் - விளங்குகிற படமெடுத்தாடுந்தன்மையுள்ள
ஆதிசேஷனாகிய சயனத்தின்மேல் யோகநித்திரை செய்தருளுகிற
எம்பெருமானுடைய, பொன்தாள் - அழகிய திருவடிகளை,- பொலம் காவிரி
இருபால்உம் வர - அழகியகாவேரிநதி இரண்டுபக்கங்களிலும் பிரிந்து பெருகிவர,
பூதலம் மங்கைக்கு அலங்காரம் அளிக்கும் - பூமிதேவிக்கு அழகைச் செய்கின்ற,
தென் அரங்கத்திடை - அழகிய ஸ்ரீரங்கத்தில், தொழுதான் - வணங்கினான்;
(எ-று.)இங்குப்பெருமாள் திருநாமம்-ஸ்ரீரங்கநாதன்; பிராட்டி-ஸ்ரீரங்கநாயகி.

     திருவரங்கம் - நூற்றெட்டுத் திருமால்திருப்பதிகளுள் தலைமை பூண்டது;
சோழநாட்டில் உபயகாவேரிமத்தியில் உள்ளது: கோயிலென்றும்,
பெரியகோயிலென்றும் மறுபெயருடையது: பூலோக வைகுண்ட மெனப்படுகிற
மகிமையையுடையது. (ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் யோகியரது உள்ளக்கமலம்
என்னும் இவையனைத்தினும் பிரியமான தென்று திருமால்) திருவுள்ளமுவந்து
எழுந்தருளியிருக்கும் இடமாதல்பற்றி, 'ரங்கம்' என்று அவ்விமானத்துக்குப் பெயர்:
அது, அரங்கமென வந்தது.

     இலங்காபுரியை யழித்தவன் என்றதன் பொருள் - தென்கடலிடையிலுள்ள
அவ்விலங்கைத்தீவைத் தனக்கு இராசதானியாகக் கொண்டு அதனை அரசாண்ட
இராட்சசராசனான இராவணன் முதலிய அரக்கர்களை வேரொடு
அழித்தவனென்பது;இவ்வரலாறு இராமாயணத்திற் பிரசித்தம். அறிதுயில் -
எல்லாவற்றையும்அறிந்துகொண்டே செய்யும் நித்திரை.              (650)

20.-பல தீர்த்தங்களில் நீராடி மதுரை சேர்தல்.

வளவன்பதி முதலாக வயங்கும்பதி தோறுந்
துளவங்கம ழதிசீதள தோயங்கள் படிந்தே

* இச்செய்யுளின் பின், அடியில் வருகிற செய்யுள் சிலபிரதிகளிற் காணப்படுகிறது:-

           "ஆங்கப்பணவத்துட்பொருளரி தாளிணைதொழுது
           பாங்கர்ப்புதுவெயில்வீசுபல்பருமாமணி குயிலா
           வோங்கிக்கிளர்பொலன்மண்டபமொருதன்பெயராலத்
           தூங்கற்கரிநடையிந்திரசுதனொன்றுபடைத்தான்."

     (ஸ்ரீரங்கத்தில் அம்மண்டபம், அருச்சுனமண்டபமென்று வழங்கும்.)