22.-அருச்சுனனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த சம்பாஷணை. அந்நிலத்தினவரல்லாவந்தணரோ டிவனவனுக்காசிகூற, எந்நிலத்தீரெப்பதியீரெத்திசைக்குப் போகின்றீரென்றுபோற்றிச், சென்னியர்க்கும் வில்லவர்க்குமணிமுடியாங்கனைகழற்காற் செழியன்கேட்பக், கன்னியைக்கண்ணுற்றாடவந்தனமென் றனன்மெய்ம்மைக் கடவுள்போல்வான். |
(இ-ள்.) இவன் - இந்த அருச்சுனனானவன், அ நிலத்தினவர் அல்லா அந்தணரோடு - அப்பாண்டியநாட்டவரல்லாத [தன்னுடன் வந்த வெவ்வேறுநாட்டினரான] அந்தணர்களுடன் (சென்று), அவனுக்கு ஆசி கூற - அந்தப்பாண்டியனுக்கு வாழ்த்துச்சொல்ல,- சென்னியர்க்குஉம் வில்லவர்க்குஉம் மணிமுடி ஆம் கனை கழல் கால் செழியன்-சோழராசர்களுக்கும் சேரரராசர்களுக்கும்(முடிமேற்கொள்ளும்) இரத்தினகீரிடம் போன்ற ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்தபாதங்களையுடைய பாண்டியராசன், போற்றி-(அவ்வருச்சுனனை) வணங்கித் துதித்து,எந்நிலத்தீர் எப்பதியீர் எத்திசைக்கு போகின்றீர் என்று கேட்ப- '(நீவிர்)எத்தேயத்தீர்?' என்று (மரியாதையாக) வினாவ,- மெய்ம்மை கடவுள் போல்வான் - சத்தியத்து உரியஅதிதேவதைபோல்பவனான அருச்சுனன், கன்னியை கண்ணுற்று ஆட வந்தனம்என்றனன் - 'கன்னியைப் பார்த்து ஆடுதற்கு வந்தோம்' என்று சொன்னான்; (எ-று.) வைதிகமுனிவேஷம் பூண்டு சென்றன னாதலால் அந்தவேஷத்திற்கு ஏற்ப க்ஷத்திரியனான பாண்டியனுக்கு ஆசீர்வாதஞ்செய்து அவன் தன்மை வணங்கப்பெற்றன னென்க. சென்னியர் - தலைமை பெற்றவர்; சென்னி- தலை. வில்லவர் - வில்வடிவமெழுதிய கொடியையுடையோர். செழியன் - செழுமையையுடையவன். 'கன்னியைக்கண்ணுற்று ஆடவந்தனம்' என்பது - குமரியெனப்படும் நதியைத் தரிசித்து அதில் நீராடுதற்கு வந்தோம் என்று வெளிப்படைப் பொருள் பாடுவதோடு, உனதுமகளான கன்னிகையைப் பார்த்து அவளோடு லீலை செய்ய வந்தோம் என்று உள்ளுறைபொருளும் படுதல் காண்க. இங்ஙனம் மனத்திலுள்ள கருத்து அமைய உண்மையாகப் பேசுஞ் சொற்சாதுரிய முடைமையால், 'மெய்ம்மைக் கடவுள் போல்வான்' என்றார். சீவகசிந்தாமணியில் சீவகனுக்கும் சுரமஞ்சரிக்கும் நடந்தசம்பாஷணையைக் கூறுமிடத்து "வந்தவரவென்னை யென வாட்கண்மடவாய்கேள், சிந்தைநலிகின்ற திருநீர்க்குமரியாட, அந்திலதனாய பயனென்னைமொழிகென்றாள், முந்திநலிகின்ற முதுமூப்பொழியு மென்றான்" என்றது, இங்கு நோக்கத்தக்கது, மற்றும், கந்தபுராணத்து "ஈண்டு நும்வரைக்குமரியெய்தியினிதாட, வேண்டிவருகின்றனன்" என்றதும்நோக்குக. குமரியென ஓர் நதியா யிருந்தது பிற்காலத்தில் கடல் கொள்ளப்பட்டுக்கன்னியாகுமரி யென்னும் முனையாகியது. (653) 23.-அருச்சுனன் முதலியோர்க்குச் சோலையில் பாண்டியன் விருந்துசெய்தல். வெய்தின்மகபதிமுடியில்வளையெறிந்துமீண்டநாள்விண்ணின் மாதர், கொய்துமலர்தொலையாதகுளிர்தருக்க ளொருகோடிகொண்டு |
|