பக்கம் எண் :

38பாரதம்ஆதி பருவம்

மாதலால், அவனை 'கலையெனுமிகற்புரவிவீரன்' என்றார். குதிரை யென்ற
சிறப்புப்பொருளையுடைய புரவி என்ற சொல் - ஊர்தியென்னும் பொதுப்
பொருளைத்தந்தது. இச்செய்யுளில், முதலெழுத்து வேறுபட்டிருக்க இரண்டு
முதலிய சிலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறுபட்டது திரிபு
என்னுஞ்சொல்லணி. இரண்டாமடியில் மருங்கலை அலையினை மறிக்குமாறுபோல்
என்றும் பாடம்.மாறுபோல் என்று பதம்பிரித்தால், இரண்டாமடி
முற்றுமோனையாம். மாறுவிதமென்னும் பொருளதாதலை
"விளங்கக்கேட்டமாறுகொல்" (புறம் - 50) என்றவிடத்துங் காண்க.       (65)

58.திருத்தகுமவயவந் திகழ்ந்துதோன்றவே
கருத்துடனவைக்கணோர் கண்புதைக்கவும்
மருத்தினைமனனுற மகிழ்ந்துகாதல்கூர்
உருத்தகுமுரிமையோ டொருவனோக்கினான்.

     (இ - ள்.) திரு தகும் அவயவம் - அழகுவிளங்குகின்ற உள் அவயவம்,
(அப்போது), திகழ்ந்து தோன்ற - விளக்கித் தோன்றியதனால், அவைக்கணோர் -
சபையிலிருந்தவரான தேவர்கள்யாவரும், கருத்துடன் - நல்லெண்ணத்துடன், கண்
புதைக்கஉம் - (தம்) கண்ணைமூடிக்கொள்ளாநிற்கவும்,- மருத்தினை
மனன்உறமகிழ்ந்து- (கங்கையாளின் ஆடையைவிலகுமாறுசெய்த) வாயுதேவனை
மனப்பூர்வமாகக்கொண்டாடி, காதல் கூர்உரு - ஆசைமிகுதற்குக் காரணமான
அந்தஅவயவத்தை, தகும் உரிமையோடு - பார்த்தல் தகுமென்ற உரிமையோடு,
ஒருவன்-,நோக்கினான்-; (எ-று.) நோக்கிய ஒருவன் இன்னா னென்பது அடுத்த
செய்யுளில்விளங்கும்.                                           (66)

59.நோக்கியவருணனை நுவலுநான்மறை
ஆக்கியமுனியுருத் தழன்றுபார்மகள்
பாக்கியமென்னவுற் பவிக்கநீயெனத்
தாக்கியவுருமெனச் சபித்தகாலையே.

     (இ-ள்.) நோக்கிய - (ஆடைவிலகியதும் கங்காதேவியின் உள்
அவயவத்தைப்)பார்த்த, வருணனை - நீர்க்கடவுளை,- நுவலும் - (மூன்று
வருணத்தவரும்) ஓதுதற்குஉரிய, நால் மறை ஆக்கிய முனி -
நான்குவேதங்களையும் (பரம்பொருளினிடம் கற்று) வெளியாக்கிய முனிவனாகிய
பிரமதேவன், உருத்து அழன்று - மிகக் கோபித்து, 'நீ-,பார்மகள் பாக்கியம்
என்ன - பூமிதேவிசெய்த நல்வினைப்பயன் என்று (கண்டவர்)கருதுமாறு,
உற்பவிக்க - (பூமியிற் சிறப்புடன்) தோன்றுவாய்,' என - என்று, - தாக்கியஉரும்
என - (மேல்) மோதிய இடிபோல (பெருவருத்தமுண்டாகும்படி), சபித்த காலை-
சபித்தபோது,-(எ - று.)- "வானிடைநதியையும் தந்தை யேவினான்" என்க.

     இட்சுவாகு வமிசத்தவனான மஹாபிஷக் என்ற அரசனே தான் செய்த
தவவேள்விகளால் சத்தியலோகத்தைச் சேர்ந்திருந்தானாக, அவனே கங்கையின்
அவயவத்தைக் கண்டதனாற் சபிக்கப்பட்டா னென்று வியாசபாரதத்து உள்ளது:
பாலபாரதத்திலும் அங்ஙனமேயுள்ளது.                              (67)