பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்381

     தடம் - மலைப்பக்கம், வரிவண்டு - இசைப்பாட்டையுடைய வண்டுமாம்.
தமிழ்கள் மூன்று - இயல், இசை,  நாடகம் என்பன. பாண்டியர் மீன்வடிவ
மெழுதியதுவசமுடைய ராதலால், 'தம் கொடிக்கயல்' எனப்பட்டது.   (659)

29-அருச்சுனனும் சித்திராங்கதையும் கந்தருவமுறையாற் கூடி
இன்பம்நுகர்தல்.

செந்திருவையனையாளுந்திருமாலையனையானுஞ்சிந்தையொன்றாய்
வந்திருவர்விலோசனமுந்தடையின்றி யுறவாடிமகிழ்ச்சிகூர்ந்து
வெந்துருவமிழந்தமதன்மீளவும்வந் திரதியுடன்மேவுமாபோற்
கந்தருவமுறைமையினாற்கடவுளர்க்குங் கிடையாதகாமந்துய்த்தார்.

     (இ-ள்.) செந் திருவை அனையாள்உம் - அழகிய இலக்குமியையொத்த
சித்திராங்கதையும், திருமாலை அனையான்உம் - புருஷோத்தமனான
விஷ்ணுவையொத்த அருச்சுனனும், (ஆகிய இருவரும்),- சிந்தை ஒன்று
ஆய்வந்து-(தம்) மனம் ஒன்றிவரப்பெற்று, இருவர் விலோசனம்உம் தடைஇன்றி
உறவு ஆடி -அவ்விருவரின் கண்களும் தடையில்லாமல் உறவு ஆடப்பெற்று,
மகிழ்ச்சிகூர்ந்து-மகிழ்ச்சிமிக்கு,- உருவம் வெந்து இழந்த மதன்மீளஉம்வந்து
இரதியுடன் மேவும் ஆபோல் - (தன்னுடைய) சரீரம் (சிவபெருமானுடைய
நெற்றிக்கண்ணினால்)வெந்ததனால்ஒழியப்பெற்றமன்மதன்மீண்டும் (அச்சரீரம்)
வரப்பெற்று இரதிதேவியுடன்சேர்ந்திருக்கும் விதம் போல, கந்தருவ
முறைமையினால் கடவுளர்க்குஉம் கிடையாதகாமம் துய்த்தார் - கந்தருவ
முறைமையினால் (தம்மிற்கூடித்) தேவர்கட்கும்கிடைக்காத காமவின்பநுகர்ச்சியை
நுகரலானார்கள்; (எ-று.)

     கந்தருவமார்க்கத்தாற் கூடிய அருச்சுனனும் சித்திராங்கதையும்,
இன்பநுகர்ச்சிக்கேயுரியதேவர்களினும்மிகஇன்பம் நுகர்ந்தன ரென்பதாம். சிந்தை
யொன்றாய் என்பதனால் - மனவொற்றுமை [மநஸ்ஸங்கதி]யும், இருவர்
விலோசனமும்உறவாடி என்றதனால் - கண்ணிணையின்நோக்கு ஒத்தலும்
[சக்ஷு ஷ்ப்ரீதியும்]கூறப்பட்டன. மணலூரில் அருச்சுனன் சென்றபோது ஆங்குத்
தன் விருப்பின்படிசெல்லும் சித்திரவாகனன்மகளைக்கண்டு காதல் கொண்டவனாய்
அவள்தந்தையைக்கண்டு தன்விருப்பத்தைத்தெரிவிக்க, அவனும் தன்மகளைக்
காதலிப்பவன்அருச்சுனனென்று அறிந்து உவந்து, தன்மகளுக்குப் பிறக்கும்
புத்திரனைத்தனக்குத்தத்த குமாரனாகத்தரும்ஏற்பாட்டுடன்
மணஞ்செய்துகொடுத்தானென்றுவியாசபாரதத்திலுள்ளது. மணலூருபுரத்தில் 
வனமத்தியில்முகூர்த்தகாலத்தில்மணந்துகொண்ட மலயத்துவசபாண்டிய
புத்திரியான சித்திராங்கதையோடு வெகுகாலம்மகிழ்ந்திருந்தானென்றது,
பாலபாரதம். புத்திரனைப் பாண்டியனுக்குத்தத்துக்கொடுத்தது எல்லாவற்றிலும்
ஒருபடிப்பட உள்ளது.                                       (660)

30.-பின்பு சித்திராங்கதை அச்செய்தியைத் தன்தோழியர்க்குச் சொல்லுதல்.

கூடியிருவருமொருவரெனவிதயங் கலந்ததற்பின்குறித்ததூநீர்
ஆடியவந்ததுந்தன்னையருச்சுனனென் பதுமிளமானறியக்கூறி