பக்கம் எண் :

382பாரதம்ஆதி பருவம்

நீடியதென்றையுறுவர்நீயினியேகெனவுரைப்பநெடுங்கண்ணாள்போ[ய்ச்
சேடியருக்கஞ்ஞான்றுநிகழ்ந்தவெலாமகிழ்ந்துருகிச்செப்பினாளே.

     (இ-ள்.) இருவர்உம் ஒருவர் என கூடி இதயம் கலந்ததன் பின் -
(அக்குமாரனும்குமாரியுமாகிய) இரண்டுபேரும் ஒருவர்போலத் தம்மிற் கூடி
மனங்கலந்த பின்பு, (குமாரன்), குறித்த தூநீர் ஆடிய வந்ததுஉம் - நியமிக்கப்பட்ட
பரிசுத்தமான தீர்த்தயாத்திரைசெய்தற்கு (த் தான்) வந்ததையும், தன்னை அருச்சுனன்
என்பதுஉம்- தான் அருச்சுனன் என்பதையும்,  இள மான் அறியகூறி- இளமையான
மான்போன்ற அச்சித்திராங்கதை அறியும்படி சொல்லி, நீடியது என்று ஐயுறுவர் நீ
இனி ஏகு என உரைப்ப- '(இங்குப்)பொழுது நீட்டித்ததென்று (உன்னைச்சேர்ந்தவர்)
சங்கைகொள்வார்: நீ இனிப்போ' என்று சொல்ல,-நெடுங் கண்ணாள்-
நீண்டகண்களையுடையவளான அவள், போய்-, அஞ்ஞான்றுநிகழ்ந்த எலாம்
சேடியருக்கு மகிழ்ந்து உருகிசெப்பினாள் - அப்பொழுதுநேர்ந்தசெயல்கள்
முழுவதையும் தோழியர்களுக்கு மனமகிழ்ந்து உருகிச்சொன்னாள்;

     இருவரும் ஒருவரெனக் கூடி--"எரிமாமணி மார்பனும் ஏந்திழையும்,
அருமாமணி நாகரி னாயினரே" என்றாற்போலக் கொள்க. தனக்கு நேர்ந்த
இன்பத்தைநினைக்குந்தோறும் மகிழ்ந்தமை தோன்ற, 'மகிழ்ந்துருகி' யென்றார்.
                                                           (661)       

31.-இரண்டு கவிகள்-சித்திராங்கதையின் விரகதாபம் கூறும்.

கவுரியர்கோன்றிருமகளைக்கண்ணனையார் கொண்டுபோய்க்
                                   கன்னிமாடத்து,
அவிருமணிப்பரியங்கத்தையமளியேற்றியபி னனங்கன்போரால்,
நவிருடைமாமயலுழந்துநயனங்கள்பொருந்தாம னாணுறாமல்,
தவிர்கெனவுந்தவிராமற்றன்விரகங் கரையழிந்துதளர்ந்தாண்
                                      மன்னோ.

     (இ-ள்.)கவுரியர் கோன் திரு மகளை - பாண்டியர் தலைவனான
சித்திரவாகனனுடைய அழகியபெண்ணான அவளை, கண் அனையார் -
அவள்கண்போன்றவர்களான தோழியர்கள், கொண்டு போய் - கொண்டு சென்று,
கன்னிமாடத்து - கன்னிமாடத்தில், அவிரும் மணி பரியங்கத்து - விளங்குகிற
இரத்திரனங்கள்பதித்தகட்டிலில், ஐ அமளி - பஞ்சசயனத்தில், ஏற்றிய பின் -
ஏற்றினபின்பு,(அவள்), அனங்கன் போரால்-மன்மதனுடைய போரினால்
[காமவேதனையினால்], நவிர் உடை மா மயல்உழந்து -புன்மையையுடைய மிக்க
மோகத்தை யடைந்து, நயனங்கள் பொருந்தாமல்-கண்கள் இமைமூடித்
துயில்கொள்ளாமலும், நாண் உறாமல் - நாணமில்லாமலும், தவிர்க எனஉம்
தவிராமல்- '(இத்துன்பம்) ஒழிக' என்று (தோழியர் தனிவு) கூறவும் ஒழியாமலும்,
தன் விரகம்கரைஅழிந்து தளர்ந்தாள்- தனதுகாதல் நோயினால் எல்லைகடந்து
வருந்தினாள்;(எ-று.)-மன், ஓ-ஈற்றசை.

     கவுரியர்=கௌரியர்; பாண்டியர்; முதற்போலி. கன்னிமாடம்- அரண்மனை
யந்தப்புரத்தில் கலியாணமாகாத பெண்கள் வசிக்குமிடம். ஐ அமளி-
இலவம்பஞ்சு,செம்பஞ்சு,வெண்பஞ்சு,கம்பளமயிர், அன்னத்தூவி என்னும்
இவ்வைந்துபொருள்களைத் தனித்தனி