(இ-ள்.) அங்கு- அவ்விடத்தில், உயிர்போல்-, இரு மருங்கு உம் - இரண்டுபக்கத்திலும், ஆயம் மட மகளிர்- தோழியராகிய இளம் பெண்கள், இருந்து-,ஆற்றஆற்ற- (தங்கள்செய்யும்சைத்திய உபசாரங்களினால் தாபத்தைத்) தணிக்கத்தணிக்க, (சித்திராங்கதை), கங்குல் எனும் பெருங் கடலை கரை கண்டாள் - இராத்திரிகாலமாகிய பெரியகடலைக் கரைகண்டவளாய் [இரவை அரிதிற் கழித்து], கடல்புறத்தே கதிர்உம் கண்டாள் - கீழ் கடலின். மீதே சூரியனையும் (உதிக்கக்) கண்டாள்:இங்கு-இவ்வாறு, இவள் - இச்சித்திராங்கதை, போய்-, மலர் காவின் -பூஞ்சோலையிலே, எழில் விசயற்கு - அழகிய அருச்சுனனுக்கு, ஈடு அழிந்த -மனவலிமை யழிந்த, இன்னல் எல்லாம் - துன்பம் முழுவதையும், சங்கு எறியும் தடபொருநை துறைவனுக்கு - சங்குகளை வீசுகிற பெரிய பொருநையாற்றின்துறையையுடையவனான அப்பாண்டியராசனுக்கு, செவிலியர் ஆம் தாயர்-(அச்சித்திராங்கதையினது) செவிலித்தாய்மார், சொன்னார்- சொன்னார்கள்; (எ-று.) விரகிகளுக்கு இராப்பொழுது நீட்டித்ததாய்த்தோன்றிக் கழித்தற்கு அரிதாதல்பற்றி, 'கங்குலெனும் பெருங்கடல்' எனப்பட்டது. பெருநை - தாமிரபரணி.கண்டாள் என்ற சொல் இரண்டில்முந்தினது முற்றெச்சம். செவிலியர்-வளர்த்த தாயர். ஆயம் - தோழியர் கூட்டம். (664) 34.-அருச்சுனனது வரவையறிந்து பாண்டியன் மகிழ்தல். ஐந்தருவினீழலின்வாழரியுடனே யோரரியாசனத்தில்வைகிப் புந்தியுறவொருவருமுன்பூணாத மணியாரம்பூண்டகோமான், அந்தவுரைசெவிப்படலுமதிதூரம் விழைவுடன்சென்றாடுதீர்த்தம், வந்ததுநந்தவப்பயனென்றுட்கொண்டான்மகோததியும் வணங்குந்தாளான். |
(இ-ள்.) ஐந் தருவின் - பஞ்சகற்பக தருக்களின், நீழலின் - நிழலில், வாழ் - வாழ்கின்ற, அரியுடனே-இந்திரனுடனே, ஓர் அரி ஆசனத்தில்வைகி - ஒருசிங்காதனத்திலே உடன்வீற்றிருந்து, முன் ஒருவர்உம் பூணாத மணி ஆரம் புந்திஉற பூண்ட - முன்பு ஒருவரும் அணிந்திராத இரத்தினவாரத்தை மனம்மகிழஅணிந்துகொண்ட, கோமான்-தலைவனும், மகா உத்திஉம் வணங்கும் தாளான்-பெருங் கடலும் வணங்கும் பாதங்களை யுடையவனுமான அப்பாண்டியராசன்,- அந்தஉரைசெவி படலும்-(செவிலித்தாயர் சொன்ன) அவ்வார்த்தை (தன்) காதிற்பட்டவுடனே, அதிதூரம் விழைவுடன் சென்று ஆடு தீர்த்தம் வந்தது நம் தவம்பயன்என்று உள்கொண்டான் - வெகுதூரம்விருப்பத்தோடுசென்றுஸ்நானஞ்செய்யுந் தீர்த்த யாத்திரையைக் கருதி (அருச்சுனன் இங்கு) வந்தது நமது தவத்தின்பயனே என்று எண்ணி மகிழ்ந்தான்; (எ-று.) ஐந்தரு-ஸந்தாநம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தநம் என்பன. அதிதூரம், மஹோததி - வடமொழித்தொடர்கள். முருகக்கடவுளின் அமிசமான உக்கிரகுமாரபாண்டியன் அரசாளும் நாளில், தமிழ்நாடுமுழுவதும் பன்னீராண்டு மழைபொழியாது |