பக்கம் எண் :

386பாரதம்ஆதி பருவம்

மும் மாறுபட்டு, பொழுதுவிடிவுஅளவும்-, மதன் பூசலில்ஏ- மன் மதன்
செய்யும்போரிலே, கருத்து அழிந்து -மனம்வருந்தி, பூ ஆம் வாளி உழுத-
(அந்தமன்மதனுடைய) புஷ்பபாணம் (தன்னுடம்பிலே) இடைவிடாது பாய்தலாலான,
கொடும் புண்வழிஏ-கொடிய புண்ணிருந்த இடத்திலே, ஊசி நுழைந்துஎன-
ஊசிநுழைந்தாற் போல, தென்றல் ஊர ஊர- தென்றற்காற்று மிகவும் உட்புக,
(இங்ஙன்மதனவேதனையினால்), விழி துயிலா விசயன்உம்- (அந்தச்
சித்திராங்கதையைக்கூடிப்பிரிந்த அந்தநாளிரவில்) கண்துயிலாத [உறக்கம்பிடிக்காத]
அருச்சுனனும், அவிபுதருடன் - அந்த அந்தணருடனே, துயில்உணர்ந்து -
கண்விழித்தான்போன்று,விதிஉம் செய்தான் - காலைக்கடனையுஞ் செய்திட்டான்;
(எ-று.)

     வடிவம் வேறாதல் - மேனிநிறம்மாறுதல். மனம்வேறாதல் - மகிழ்ந்திருந்த
தன்மை நீங்கிப் பிரிவுத்துயரையுடையதாதல். பூதேவராதலால், அந்தணரை 'விபுதர்'
என்றார்.                                                      (666)

36-பாண்டியன் அருச்சுனனை நோக்கி 'என்மகளை உனக்கு மணஞ்
செய்விப்பேன்' என்றல்.

பஞ்சவரினடுப்பிறந்தோன்பஞ்சவன்பே ரவையெய்திப்பஞ்சபாண,
வஞ்சகன்செய்வஞ்சனையான்மதிமயங்கி யிருந்துழியம்மதுரை
                                         வேந்தன்,
சஞ்சரிகநறுமலர்த்தார்த்தனஞ்சயனென் றறிந்தெழுந்து
                              தழீஇக்கொண்டாங்கண்,
அஞ்சலினியுனக்குரியள்யான்பயந்த கடற்பிறவாவமுதமென்றான்.

     (இ-ள்.) பஞ்சவரில் நடு பிறந்தோன் - பஞ்ச பாண்டவர்களுள்
(மூன்றாமவனாய்) நடுவிற் பிறந்தவனான அருச்சுனன், பஞ்சவன்பேர் அவை
எய்தி -பாண்டியனுடைய பெரியசபையை அடைந்து, பஞ்ச பாண வஞ்சகன் செய்
வஞ்சனையால் மதி மயங்கி இருந்த உழி- ஐந்து அம்புகளையுடையவனாய்
(அனைவரையும்) மயக்கித் தன்வசப்படுத்துகிறவனான மன்மதன் செய்த மோகத்தால்
அறிவுமயங்கி இருந்தபொழுது, அ மதுரை வேந்தன் - (பாண்டியநாட்டு
ராஜதானியாகிய) மதுரைக்குத் தலைவனான அப்பாண்டியராஜன்,- ஆங்கண் -
அவ்விடத்தில், சஞ்சரிகம் நறு மலர் தார் தனஞ்சயன் என்று அறிந்து எழுந்து
தழீஇக்கொண்டு - (அவனை) வண்டுகள் மொய்க்கிற வாசனை வீசும்
மலர்மாலையையுடைய அருச்சுனனென்று அறிந்து எழுந்து தழுவியுபசரித்து,
'அஞ்சல்- அஞ்ச வேண்டா: யான் பயந்த கடல் பிறவா அமுதம் - யான் பெற்ற
மகளும்பாற்கடலினின்று தோன்றாததோர் அமிருதம் போன்றவளுமான
சித்திராங்கதை, இனிஉனக்கு உரியள் - இனி உனக்கு உரியவள்,' என்றான்- என்று
சொன்னான்; (எ-று.)

     பஞ்சவர்-ஐவர்; ஐந்து என்னும் பொருள்தரும் 'பஞ்ச' என்னும் வடமொழி
யெண்ணுப்பெயரினடியாப்பிறந்த பெயர்: இங்கே, தொகைக்குறிப்பு. மன்மதனது
பஞ்சபாணம் தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர், நீலோற்பலமலர்
என்பன. அவ்வம்புகளை மறைந்துநின்று மனத்திலெய்து அதனையு முட்பட