வருத்தலால், மன்மதனை 'வஞ்சகன்' என்றார். சஞ்ரீகம் என்ற வடமொழிப்பெயர் - எப்பொழுதுந் திரிவது என்று பொருள்படும். தீர்த்தயாத்திரைக்குவந்த தவவேடமுடையானொருவனுக்கு அரசன் தன்மகளைக் கொடுக்க இசைவனோ என்றும், தந்தையின் உடன்பாடின்றி மகளைத் தன்வசப்படுத்திக்கொண்டமை தெரிந்துஅத்தந்தை என்ன மாறுபாடுகொள்வனோ என்றும் அஞ்சவேண்டா வென்பான், 'அஞ்சல்' என்றான். (667) 37.-இதுவும், அடுத்த கவியும்- ஒருதொடர்: பாண்டியன் அருச்சுனனிடம் ஒருவரம் வேண்டிப் பெறுதல். கேண்மதியோர்மொழிமுன்னங்கேண்மையினங்குலத்தொருவன் கிரீசன்றன்னைத், தாண்மலரன்புறப்பணிந்துதவம்புரிந்தான்மகப்பொ ருட்டாற்றரித்தகொன்றை, நாண்மலரோன்வெளிநின்றந்நரபதிக்குநின்குலத்துநரேசர் யார்க்கும், வாண்மருவுங்கரதலத்தோயோரொருமாமகவென்றுவரமுமீந்தான். |
(இ-ள்.) ஓர் மொழி கேள்மதி -(யான் சொல்லும்) ஒருவார்த்தையைக் கேட்பாயாக:- முன்னம் - முற்காலத்தில், நம் குலத்து ஒருவன்-நமது குலத்துத் தோன்றியிருந்த ஓரரசன், மகப்பொருட்டால்-புத்திரபாக்கியத்தின்பொருட்டு, கிரீசன் தன்னை-சிவபிரானை, கேண்மையின் - உரிமையோடு, அன்பு உற - அன்பு மிக, தாள் மலர் பணிந்து - திருவடித்தாமரைகளில் வணங்கி, தவம் புரிந்தான் - தவஞ் செய்தான்: தரித்த கொன்றை நாள் மலரோன் - அன்று மலர்ந்த [புதிய] கொன்றைமலர்களைத் தரித்தவனான அச்சிவபிரான், வெளி நின்று - வெளிப்பட்டுத் தரிசனந் தந்துநின்று, 'வாள் மருவும் கரதலத்தோய் - வாளாயுதம்பொருந்திய கையையுடையவனே! நின் குலத்து நரேசர் யார்க்குஉம் ஓர் ஒரு மா மகவு - உனதுகுலத்திலரசரெல்லார்க்கும் ஒவ்வொரு சிறந்தகுழந்தையே (தவறாமல்) உண்டாகுக,' என்று-, அ நரபதிக்கு - அந்த அரசனுக்கு, வரம்உம் ஈந்தான் - வரத்தையுங் கொடுத்தான்; (எ-று.) வரம்பெற்ற பாண்டியனதுபெயர் பிரபஞ்சநனென்று வியாசபாரதத்தினால் விளங்குகின்றது. சிவபிரான் சுந்தரபாண்டியனாகி இக்குலத்தைப் பெருமைப்படுத்தி இதனிடத்து அன்புகொண்ட உரிமைபற்றி, 'கேண்மையின்' என்றார். 'எங்குலத்தொருவன்' என்றும் பாடமுண்டு. (668) 38. | அன்றுரைத்தவரத்தின்வழியநேகரவனிபருமகவளித்தா ரொன்றொன்று, ஒன்றுரைக்கமறாதொழிநீயொருமகவும்பெண்மகவா யுதித்ததென்பால், நன்றுரைக்குமொழியாயென்னவ்விபெறுமகவே னக்கேநல்கவேண்டும், என்றுரைத்தான்மன்றல்பெறவிருந்தோனு மாமனுரைக்கிசைந்தானன்றே. |
(இ-ள்.) அன்று உரைத்த வரத்தின் வழி - அந்நாளிற் (சிவபிரான்) சொல்லியருளிய வரத்தின்படியே, அவனிபர் அநேகர் உம் - (எம்குலத்து) அரசரெல்லோரும், மகவு ஒன்று ஒன்று அளித்தால் - பிள்ளைஒவ்வொன்றைப் பெற்றார்கள்; என்பால் - என்னிடத்தில், ஒரு மகவுஉம் - அவ்வொருகுழந்தைதானும், |