பக்கம் எண் :

388பாரதம்ஆதி பருவம்

பெண் மகவு ஆய் உதித்தது - பெண்குழந்தையாய்ப் பிறந்தது; நன்று உரைக்கும்
மொழியாய் - நல்லனவாகவே பேசும் பேச்சுக்களை யுடையவனே! ஒன்று உரைக்க
நீமறாதொழி- (யான்) ஒருவேண்டுகோளைச் சொல்ல (அதனை) நீ மறுக்காம
லிருப்பாய்; (அவ்வேண்டுகோள் யாதெனின்),- என் நவ்வி பெறும் மகவு எனக்குஏ
நல்கவேண்டும்- மான்போன்ற எனதுமகள் பெறும் ஒற்றைப்பிள்ளையை எனக்கே
(எனதுசந்ததிவிருத்தியின்பொருட்டு அபிமான புத்திரனாகக்) கொடுக்கவேண்டும்,
என்றுஉரைத்தான்-என்று (சித்திரவாகநபாண்டியன்) சொன்னான்; மன்றல் பெற
இருந்தோன்உம் -(சித்திராங்கதையின்) விவாகத்தைப் பெற இருந்தவனான
அருச்சுனனும், மாமன் உரைக்கு இசைந்தான் - (தனக்கு) மாமனாராகும்
அவ்வரசனுடைய அச்சொல்லுக்கு இணங்கினான்; (எ-று.)- அன்றே - ஈற்றசை;
அப்பொழுதேயெனினுமாம்.அவனிபர் - வடசொல்; பூமியைக்காப்பவர்.  (669)

39.- இதுமுதல் மூன்றுகவிகள்-அருச்சுனனுக்கும், சித்திராங்கதைக்கும்
நடந்தவிவாகத்தைக் கூறும்.

தெண்டிரைகைதொழுகழலோன்றிருமகட்குவதுவையெனச்சேர
                                        சோழர்,
எண்டிசையின்முடிவேந்தரெல்லோருமுனிகணத்தோரெவரு
                                        மீண்ட,
அண்டர்பிரானளித்தசிலையாண்டகையையலங்காரமனைத்து
                                      ஞ்செய்து,
மண்டபமொன்றினிலறுகால்வண்ணமணிப்பலகையின்
                              மேல்வைத்தாரன்றே.

     (இ-ள்.) தெள் திரை கை தொழு கழலோன் - தெளிவான
அலைகளையுடையதான  கடலரசனாற்    கைகூப்பிவணங்கப்பட்டபாதங்
களையுடையவனான பாண்டியராசன், திருமகட்கு வதுவை என - (தனது)
சிறந்தபெண்ணுக்கு விவாகமென்று எங்குஞ் செய்தி தெரிவிக்க,- சேர சோழர் -
சேரநாட்டரசனும் சோழநாட்டரசனும், எண் திசையின் முடிவேந்தர் எல்லோர்உம் -
எட்டுத்திக்குகளிலுமுள்ள கிரீடாதிபதிகளான மற்றும் அரசர்களனைவரும், முனி
(அவ்விவாகத்தின் பொருட்டு மதுரைக்கு வந்துசேர்ந்து) நெருங்க, -அண்டர்பிரான்
அளித்த சிலை ஆண் தகையை - தேவராஜனான இந்திரன் பெற்ற வில்வீரனான
அருச்சுனனை, அலங்காரம் அனைத்து உம் செய்து - எல்லா அலங்காரங்களையுஞ்
செய்து, மண்டபம் ஒன்றினில் - ஒருமண்டபத்தில், அறுகால் வண்ணம் மணி
பலகையின்மேல்- ஆறுகால்களையுடைய அழகிய இரத்தினமயமான பீடத்தின்மேல்,
வைத்தார் - இருக்கச்செய்தார்கள்; (எ-று.)

      'வைத்தார்' என்ற முற்றுக்குஉரிய எழுவாய், 'புரோகிதன் முதலியோர்' என
வருவிக்க. தெண்டிரை - பண்புத்தொகை யன்மொழி. உக்கிரபாண்டியன் கடல்சுவற
வேல்விட்டபோது வற்றிய சமுத்திரராசனான வருணன் தோற்று, அவனை
வணங்கினனென்க அன்றே - ஈற்றசை.                            (670)

40.கோமடந்தைகளிகூரப்புகழ்மடந்தைகளிகூரக்கொற்ற
                                    விந்தை,
மாமடந்தைகளிகூரமணவினையொப்பனைக்குரியமடந்தை