மார்கள், பூமடந்தையனையாளைப்பூட்டியவெண்டரளமணிப்பூண்களாலே, நாமடந்தைநிகராக்கிநாயகன்றன்வலப்பாகநண்ணுவித்தார். |
(இ-ள்.) கோ மடந்தை களி கூர - ராஜலக்ஷ்மி களிப்பு மிகவும், புகழ் மடந்தைகளிகூர - கீர்த்திலக்ஷ்மி களிப்புமிகவும், கொற்றம் விந்தை மா மடந்தை களி கூர -வெற்றியையுடைய வீரலக்ஷ்மியாகிய சிறந்தபெண் களிப்பு மிகவும், மணம் வினைஒப்பனைக்கு உரிய மடந்தைமார்கள்-கலியாணத்துக்குஏற்ற அலங்காரங்களைச் செய்தற்கு உரியவர்களான மாதர்கள், பூமடந்தை அனையாளை-(செந்நிறமுடைய) லக்ஷ்மிபோன்றவளான அச்சித்திராங்கதையை, பூட்டிய வெள் தரளம்மணிபூண்களால்- (அவளுக்குத்தாங்கள்) அணிவித்த வெண்ணிறமான முத்துக்களாலும் வேறு இரத்தினங்களினாலுமாகிய ஆபரணங்களினால், நாமடந்தை நிகர் ஆக்கி - சரசுவதிக்குச் சமானமாம்படி யலங்கரித்து, நாயகன் தன்வலம்பாகம் நண்ணுவித்தார்- கணவனான அருச்சுனனுடைய வலப்பக்கத்தில் இருக்கவைத்தார்கள்; (எ-று.) வெண்ணிறமான ஆடையாபரணங்களைத் தரித்த வெண்ணிறமுள்ள சரஸ்வதிபோலாம்படி, சித்திராங்கதையை, பூட்டிய வெண்தரளமணிப்பூண்களாற் செய்தன ரென்க. உத்தமவிலக்கணம் நிறைந்தவளான இவள் தன்னை மணஞ்செய்துகொண்டவனுக்கு அரசும் புகழும் வெற்றிவீரமும் சிறக்கும்படியான பாக்கியத்தை யுடையளாதலால், இவளை அருச்சுனனது பக்கத்தில் விவாகத்தின் பொருட்டு இருத்துகையில் கோமடந்தையும் புகழ்மடந்தையும் விந்தைமடந்தையும் களிகூரலாயின ரென்க. 41. | இந்திரனுஞ் சசியுமென விறையோனு முமையுமென வெம்பிரானும், செந்திருவு மெனக்காம தேவுமிர தியுமெனவெஞ் சிலைவலோனும், சந்தணிபூண் முலையாளும் சதுர்மறையோர் சடங்கியற்றத்தழல்சான்றாகத், துந்துபியின் குலமுழங்கச் சுரிசங்கின் குழாந்தழங்கத் துலங்க வேட்டார். |
(இ-ள்.) துந்துபியின் குலம் முழங்க - பேரிகையின் கூட்டங்கள் ஒலிக்கவும், சுரிசங்கின் குழாம் தழங்க - வளைவுள்ள சங்கின் கூட்டம் ஒலிக்கவும்,- இந்திரன்உம்சசிஉம் என - இந்திரனும் இந்திராணியும் போலவும், இறையோன்உம் உமைஉம் என- சிவபெருமானும் பார்வதியும்போலவும், எம்பிரான்உம் செந்திருஉம் என -திருமாலும் அழகிய இலக்குமியும்போலவும், காமதேஉம் இரதிஉம் என - மன்மதனும்இரதீதேவியும்போலவும், வெம் சிலை வலோன்உம் சந்து அணி பூண் முலையாள்உம்- கொடிய வில் தொழிலில் வல்லவனான அருச்சுனனும் சந்தனத்தையணிந்துஆபரணங்களைப்பூண்ட முலையை யுடையவளான சித்திராங்கதையும்,சதுர்மறையோர் சடங்கு இயற்ற - நான்குவேதங்களில் வல்லவர்களான அந்தணர்கள்(நூன்முறைப்படி) விவாகச்சடங்கைச்செய்விக்க, தழல் சான்றுஆக -அக்கினிசாட்சியாக, துலங்க - விளக்கமுற [சிறப்பாக], வேட்டார் - விவாகஞ்செய்துகொண்டார்கள். |