பக்கம் எண் :

390பாரதம்ஆதி பருவம்

வேறு.

42.-இருவரும் கூடி இன்ப மனுபவித்தல்.

நோக்கியகண் ணிமையாம னோக்கி நோக்கி நுண்ணியமென்
                              புலவியிலே நொந்து,
தேக்கியசெங் கனியிதழா ரமுதுண்டுண்டு சேர்த்தியகைந்
                       நெகிழாமற் சேர்ந்து சேர்ந்து,
தூக்கியபொற்றுலையினநு ராக மேன்மேற் றொடரவரும்
                 பெரும்போகந் துய்த்தார்முன்னைப்,
பாக்கியம்வந் திருவருக்கும் பலித்த தல்லாற் பாயனலத்
                      திப்படியார் பயன்பெற் றாரே.

     (இ-ள்.) நோக்கிய கண் இமையாமல் நோக்கி நோக்கி-பார்த்த கண்
இமையாதபடி (ஒருவரையொருவர்) இடைவிடாதுபார்த்துப் பார்த்தும், நுண்ணிய
மெல்புலவியிலே நொந்து நொந்து - நுட்பமான மெல்லிய ஊடலிலே
இடையிடையேவருந்திவருந்தியும், தேக்கிய செம் கனி இதழ் ஆர் அமுது
உண்டுஉண்டு -(ரசம்)நிறைந்தசிவந்தபழம்போன்ற அதரத்திற் பொருந்திய
அமிருதத்தைஅடுத்தடுத்துப்பருகியும், சேர்த்திய கை நெகிழாமல்சேர்ந்து
சேர்ந்து - அணைத்த கைநெகிழாதபடி பன்முறை இறுகத்தழுவியும், பொன்
தூக்கிய துலையின் அநுராகம் மேல்மேல் தொடர - பொன்னைநிறுக்கின்ற
தராசுகோல்போல (இருதலையிலுஞ்சமமாக)ஆசை மேலும்மேலும் இடைவிடாது
அமைய, அரும்பெரும்போகம் துய்த்தார் -அருமையான சிறந்த கலவியின்பத்தை
அனுபவித்தார்கள்; முன்னை பாக்கியம் வந்துஇருவருக்குஉம் பலித்தது அல்லால்-
(மிக்கநன்மைக்குஏதுவான) முற்பிறப்பிற் செய்தநல்வினை (இங்ஙனம்) வந்து
இவ்விருவருக்கும் வாய்த்ததேயல்லாமல், பாயல் நலத்துஇப்படி யார் பயன்
பெற்றார் - படுக்கையிலடையுஞ்சிற்றின்பத்தில் இவ்வாறுமேம்பட்ட பயன் பெற்றவர்
வேறு யார் உளர்?

     அடுக்குக்கள் - பன்முறைப்பொருளன. தலைமகனும் தலைமகளும் ஒரு
சயனத்திற்கூடி யிருக்கையில் அவனிடத்துப் புலவி கொள்ளுதற்குக் காரணமான
குற்றம் யாதும் இல்லையாகவும் ஆசை விஞ்சுதலால் நுண்ணியதோர் காரணம்
உள்ளதாக உட்கொண்டு அதனை அவன்மேல் ஏற்றி அவள் புலவிகொள்ளுத
புலவி' என்றார். மென்புலவி - இன்பஞ்செய்தற்கு வேண்டுமளவினதாகக் கொண்டு
அவ்வளவோடு தணியும் புலவி யென்றபடி; "நினைத்திருந்து நோக்கினுங்காயும்
அனைத்தும் நீர், யாருள்ளிநோக்கினீ ரென்று" என்றபடி தனது ஒப்பில்லாத அழகை
நினைந்து தன்னையே நாயகன் இமையாது நோக்கும்போதும் 'நும்மாற்
காதலிக்கப்படாருள் யாரை யொப்பே னென்று என்னை நோக்கினீர்?' என நாயகி
புலவி நுணுக்கங்கொள்ளும் இயல்பு தோன்ற, 'நோக்கியகண் இமையாமல்
நோக்கிநோக்கி' என்றதை யடுத்து 'நுண்ணிய மென்புலவியிலே நொந்துநொந்து'
என்றார்.

     இதுமுதற் பதினாறுகவிகள் - திரௌபதி மாலையிட்ட சருக்கத்தின் 48-ஆம்
கவிபோன்ற எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.             (673)