பக்கம் எண் :

392பாரதம்ஆதி பருவம்

44.-அருச்சுனன் பிராயணப்பட்டுத் திருமாலிருஞ்சோலை மலையைத்
தரிசித்தல்.

பார்த்தனருச்சுனன்கரியோன்விசயன்பாகசாதனிசவ்வியசாசி
                                   பற்குனன்பா,
ரேத்துதனஞ்சயன்கிரீடிசுவேதவாகனெனுநாமம்படை
              மனையிருக்கத்திருவழுதிவளநாட்டுள்ள,
தீர்த்தமுழுவதுமாடியன்த்தபிரான்யாழோரின்பம்,
வாய்த்தவிதழமுதமொழிப்பேதைதாதைபாற்றென்பாற்றிரு
                  மலையுங்கைதொழுது சிந்தித்தானே.

     (இ-ள்.) பார்த்தன்-, அருச்சுனன்-, கரியோன் - கருநிறமுடையவன்
[கிருஷ்ணன்], விசயன்-, பாகசாதனி - பாகசாஸநி, சவ்வியசாசி - ஸவ்யஸாசீ,
பற்குனன்-பல்குநன்,பார் ஏத்து தனஞ்சயன் - உலகத்தவர் புகழும் தநஞ்சயன்,
கிரீடி -கிரீடி, சுவேதவாகன்-, எனும் நாமம் - என்கிற (பத்துப்) பெயர்களையும்,
படைத்த -பெற்ற, பிரான் - அரசனான அருச்சுனனானவன்,- யாழோர் இன்பம்
வாய்ந்த(அமுதம்) இதழ் அமுதம் மொழிபேதை தாதை மனை இருக்க -
காந்தர்வவிவாகம்பெற்ற அமிருதம்போன்ற அதரத்தையும் அமிருதம்போன்ற
இன்சொற்களையுமுடையஇளம் பெண்ணான சித்திராங்கதை (தனது)
தந்தையின்வீட்டிலேயிருக்க [அவளை அங்குஇருத்தி], திருவழுதி வளம் நாடு
உள்ளதீர்த்தம் முழுவதுஉம் ஆடி- சிறந்தவளப்பமுடைய பாண்டியநாட்டிலுள்ள
புண்ணியதீர்த்தங்களெல்லாவற்றிலும் தான் ஸ்நாநஞ் செய்பவனாய் (ப் புறப்பட்டு),
அன்பால் - அன்போடு, தென்பால் திருமலைஉம் கைதொழுது சிந்தித்தான் -
தென்திசையிலுள்ள அழகர்திருமலையையுங் கைகூப்பி வணங்கித் தியானித்தான்;
(எ-று.)

     இத்தலத்திலுள்ள பெருமாள் திருநாமம் - அழகர். பிராட்டிமார் -
சுந்தரவல்லி,பூதேவி. பாகஸாஸநன் - இந்திரன்; அவனது மகன்,
பாகஸாஸநிஎனத்தத்திதாந்தநாமம். ஸவ்யஸாசீ - வலக்கையினால்
மாத்திரமன்றிஇடக்கையினாலும் அம்புதொடுப்பவன். கிரீடி - பாசுபதம்பெற்றபின்பு
இந்திரலோகத்துக்குச் செல்லும்போது அவ்விந்திரனாற் சுவர்க்கத்தில் இளவரசு
முடிசூட்டப் பெறுபவன். ஸ்வேதவாஹன் - வெண்ணிறமானகுதிரைகளையுடையவன்:
காண்டவதகனஞ்செய்யுமாறு அநுமதி தரும்போது அக்கினிபகவானாற்
கொடுக்கப்படும் நான்குவெள்ளைக்குதிரைகளைப் பூண்ட தேரைப் பெறுதலால்,
இவனுக்கு இப்பெயர்.                                           (675)

45.-அருச்சுனன் அப்பாற்சென்று சேதுதரிசனஞ் செய்தல்.

கன்றியவெங்கரன்முதலோர்களத்தில்வீழக் கவிகுலநாயகனி
                                தயங்கலங்கிவீழ,
ஒன்றுபடமரமேழுமுததியேழு மூடுருவச்சரந்தொடுத்த
                                வொருவில்வீரன்,
துன்றியெழுபதுவெள்ளங்குரங்கின்சேனைசூழ்போதவாய்த்த
                           திருத்துணைவனோடும்,
சென்றவழியின்றளவுந்துளவநாறுஞ் சேதுதரிசனஞ்
                       செய்தான்றிறல்வல்லோனே.

     (இ-ள்.) கன்றிய வெம் கரன் முதலோர் களத்தில் வீழ - கோபித்த கொடிய
கரன்முதலான இராக்கதர்கள் போர்க்களத்தில் இறந்துவிழவும், கவி குலம் நாயகன்
இதயம் கலங்கி வீழ - குரங்குக்