பக்கம் எண் :

398பாரதம்ஆதி பருவம்

பற்றியிழுக்கவும் பசுவின்காதுபோலக் குழைந்துகாட்டியதால், இது
கோகர்ணமெனப்படும்; கோகர்ணம் - பசுவின் காது.                (679)

49.-அருச்சுனன் துவாரகைசார்ந்து சந்நியாசிவேஷங் கொள்ளல்.

ஆகன்னமுறச்செம்பொன்வரைவில்வாங்கி யவுணர்புறங்கட்
                          டழித்தோனடியில்வீழ்ந்து,
கோகன்னவளம்பதியிற்றன்பின்வந்த குலமுனிவர்தமையிருத்திக்
                                   கோட்டுக்கோட்டு,
நாகன்னப்பெடையுடனேயாடுங்கஞ்சநறைவாவிவண்டுவரை
                                    நண்ணியாங்கண்,
பாகன்னமொழிக்கனிவாய்முத்தமூரற்பாவைநலம்பெறமுக்கோற்
                                      பகவனானான்.

     (இ-ள்.) ஆகன்னம் உற - காதளவும்பொருந்த, செம் பொன் வரை வில்
வாங்கி-சிவந்த பொன்மயமான மேருமலையாகிய வில்லை வளைத்து
(ஆதிசேஷனாகிய நாணியை இழுத்து விஷ்ணுவாகிய அம்பைத் தொடுத்து),
அவுணர்புரம் கட்டு அழித்தோன் - அசுரர்கள்வசித்த திரிபுரத்தை முற்றும்
அழித்தவனான சிவபிரானது. அடியில் - திருவடிகளில், வீழ்ந்து - விழுந்து
[சாஷ்டாங்கமாகநமஸ்கரித்து], (அருச்சுனன்), கோகன்னம் வளம் பதியில் -
வளப்பமுடைய அந்தக் கோகர்ணமென்ற திருப்பதியிலே, தன் பின் வந்த குலம்
முனிவர் தமை இருத்தி - தன்னைத்தொடர்ந்துவந்த சிறந்தமுனிவர்களை
இருக்கச்செய்து,- கோடு- நீர்க்கரைகளிலுள்ள, கோடு நாகு - சங்கின்
பேடைகள், அன்னம் பெடையுடனே ஆடும்-அன்னப் பேடைகளுடனே
விளையாடப்பெற்ற, கஞ்சம் நறை வாவி - தாமரை மலர்களின்
நறுமணத்தையுடைய தடாகங்கள் பொருந்திய, வள்துவரை - வளப்பமுள்ள
துவாரகாபுரியை, நண்ணி - சார்ந்து, ஆங்கண்- அவ்விடத்தில், பாகு அன்ன
மொழிகனி வாய் முத்தம் மூரல் பாவை நலம் பெற - கருப்பஞ்சாற்றின்
பாகைப்போன்ற[இனிய] சொற்களையும் கொவ்வைப்பழம் போலச் சிவந்த வாயை
போலஅழகியவளான சுபத்திரையினது இன்பத்தைப் பெற, (விரும்பி
அதைக்குறித்து),முக்கோல் பகவன் ஆனான் - திரி தண்டத்தையுடைய
சன்னியாசியாயினான்; (எ-று.)

     கோகர்ணத்துச் சிவபிரான் திருநாமம் - மகாபலேசுவரர். அம்பிகை -
பெரியநாயகியம்மை. ஆகன்னம்=ஆகர்ணம்:வடசொற்றொடர் விகாரப் பட்டது.
நீர்வாழ்வனவான சங்கும் அன்னமும் உடன் விளையாடு மென்க. கஞ்ஜம்-வடசொல்;
நீரில்தோன்றுவது; (கம்-நீர்.) கோகர்ணத்திலிருந்து பிரபாசகட்டத்தை அடைந்து
அருச்சுனன் உடன்வந்தோரை அங்குவிட்டு, சுபத்திரையைப் பெறத் துறவிவேடம்
பூண்டு க்ருஷ்ணபகவானை நினைக்க, அப்பிரான்வந்து இவ்வருச்சுனனை
ரைவதககிரியிலிருத்தித் துவாரகை சேர்ந்தா னென்று பாலபாரதத்தி லுள்ளது. (680)

50.-அருச்சுனன் ரைவதககிரியில் ஓர் ஆலமரத்தினடியிற்
சேர்தல்.

வெங்கதிர்போய்க்குடதிசையில்வீழ்ந்தபின்னர் வீழாமன்மாலை
                              யின்வாய்மீண்டுமந்தச்,
செங்கதிர்வந்தெழுந்ததெனமீதுபோர்த்த