பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்399

                    செய்யவாடையுந்தானுந்தீர்த்தவாரிச்,
சங்கதிருமணிவீதிநகரிசூழ்ந்ததடஞ்சாரலிரைவதகசைலநண்ணிப்,
பொங்கதிர்பைம்புயலெழுந்துபொழியுங்கங்குற்போயொருநீள்
                       வடதருவின்பொதும்பர்சேர்ந்தான்.

     (இ-ள்.) வெம் கதிர் உஷ்ணமான கிரணங்களையுடையவனாகியசூரியன்,
போய்-,குடதிசையில் வீழ்ந்த பின்னர் - மேற்குத் திக்கில் விழுந்து மறைந்தபின்பு
[சூரியாஸ்தமனமானபின்பு]-அந்த செங் கதிர்- சிவந்தகிரணங்களையுடையனான
அச்சூரியன் தானே, வீழாமல் மாலையின்வாய் மீண்டும் வந்து எழுந்தது என-
அஸ்தமித்தொழியாமல் மாலைக்காலத்தில் திரும்பவும் வந்து உதித்தது போல, மீது
போர்த்த செய்ய ஆடைஉம் தான்உம்-உடம்பின்மேல்
தரித்தசெந்நிறமானகாஷாயவஸ்திரமும் தானுமாக, (அருச்சுனன்), தீர்த்தம் வாரி
சங்குஅதிரும் அணி வீதி நகரி சூழ்ந்த தட சாரல் இரைவதக சைலம் நண்ணி -
கடல்நீரிலுள்ள சங்குகள் ஒலிக்கும் அழகியவீதிகளையுடைய துவாரகாபுரியைச்
சார்ந்தவிசாலமான சாரல்களையுடைய ரைவதகமென்னும்மலையை அடைந்து,
பொங்கு அதிர் பைம் புயல் எழுந்து பொழியும் கங்குல் போய் - பொலிவு பெற்று
ஆரவாரிக்கிற காளமேகங்கள் மேலெழுந்து மழைபொழிகின்ற இராக்காலத்திலே
போய், ஒரு நீள் வடதருவின் பொதும்பர் சேர்ந்தான்- உணர்ந்ததோர்
ஆலமரத்தினது செறிவை அடைந்தான்;

     செந்நிறவாடைபோர்த்துமேற்றிசையில் தோன்றும் அருச்சுனனுக்கு
மேற்றிசையிலுதித்த சூரியனை உவமைகூறினார். செய்ய ஆடை - காவி
தோய்ந்தஉடை. 'தீர்த்தவாரிச்சங்கதிருமணிவீதி' என்ற தொடர் - வெற்றிச்சங்கு
மங்கலச்சங்கு கொடைச்சங்கு என்ற சங்கவாத்தியங்கள் அந்நகரத்து
வீதிகளில் எங்கும் எப்பொழுதும் முழங்குதலையும், அந்நகரம்
கடல்சூழ்ந்ததாதலாற்கடல்வாழுயிரான சங்குகள் தவழ்ந்து சென்று
அந்நகர்வீதிகளிலுலாவுதலையுங் குறிக்கும்.                       (681)

51.-இரண்டுகவிகள் - மழைக்காலவருணனை.

இந்திரற்குத்திருமதலைமன்றலெண்ணி யாதவர்கோன்வளம்பதி
                              யிலெய்தினானென்று,
அந்தரத்தை நீலத்தால்விதானமாக்கி யண்டமுறவிடிமுரச
                                   மார்ப்பவார்ப்ப,
வந்திரட்டைவரிசிலையாற்பஞ்சவண்ணமகரதோரணநாட்டி
                                  வயங்குமின்னால்,
முந்துறத்தீபமுமெடுத்துத்தாரைமுத்தான் முழுப்பொரிசிந்தின
                                 காலமுகில்களம்மா.

     (இ-ள்.) காலம்முகில்கள்-கார்காலத்து மேகங்களானவை,- இந்திரற்கு
திருமதலைமன்றல் எண்ணி யாதவர் கோன் வளம் பதியில் எய்யினான்என்று-
(தங்களைவாகனமாகக்கொண்டு செலுத்துந் தலைவனான)
இந்திரனுடையசிறந்தகுமாரனானஅருச்சுனன்விவாகத்தைக் குறித்து
யதுகுலத்தார்க்குத்தலைவனானகண்ணபிரானுடையவளப்பம்பொருந்தியநகரத்திற்கு
வந்தானென்னு அறிந்து, (அவ்விவாகத்தின் பொருட்டு), அந்தரத்தை நீலத்தால்
விதானம் ஆக்கி - ஆகாயத்தை நீலநிறமுள்ள பட்டினால் மேற்கட்டி யமைத்து
அலங்கரித்து, இடி முரசம் அண்டம்உற ஆர்ப்ப ஆர்ப்ப - இடிகளாகிய
பேரிகைவாத்தியங்கள் ஆகாயத்தையளாவ மிகுதியாக ஒலிக்க,