கடல் ஆம் - கடல் போன்ற திருமாலாவனோ: வீக்கும் ஆறு - (காப்பாற்றப்பட்ட உயிர்களை) அழிக்குமாறு, அரன் ஆம் - சிவனாவனோ: அவை வீந்த நாள் - அவைஅழிந்த காலத்தில், மீள பூக்கும் - மீண்டும் படைக்கின்ற, மா முதல் (ஆம்)- சிறப்புற்றமுதற்கடவுள் ஆவனோ: அவன் - அந்த முதற்கடவுளின், பொன் அடி - அழகியதிருவடிகள், போற்றி - வாழ்க; (எ - று.) 'எவன்' என்பது- 'அயனாம்' முதலிய நான்கனோடும் இயையும் அம் - அழகியஎனினுமாம். "அவை வீந்த நாளுந்திப்பூக்குமா முதல்" என்றும் பாடமுண்டு. போற்றி -போற்றிய என்ற வியங்கோளின் ஈற்றுயிர்மெய் சென்றது. இதுமுதல் ஆறுகவிகள் - முதற்சீரும் ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும் மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகி வந்த கலிநிலைத்துறைகள். மேல் குருகுலச்சருக்கத்து முதல்முப்பத்திரண்டு கவிகளும், இந்தக் கலிநிலைத்துறையேயாகும். (3) 4.- அறம்முதலியவற்றின் வாழ்த்து. ஏழ்பெருங்கடன்மாநிலமெங்குநல்லறமே சூழ்கவண்டமிழோங்குகதேங்குகசுருதி வீழ்கபைம்புயல்விளங்குகவளங்கெழுமனுநூல் வாழ்கவன்புடையடியவர்மன்னுமாதவமே. |
(இ - ள்.) ஏழ் பெருங் கடல் மா நிலம் எங்குஉம் - ஏழு பெரிய கட்டலாற் சூழப்பட்ட பெரிய பூமி முழுவதும், நல் அறம் ஏ சூழ்க - சிறந்த தருமமே பரவியிருக்கட்டும்: வள் தமிழ் ஓங்குக - வளப்பம் பொருந்திய தமிழ்மொழி யோங்கிநிற்கட்டும்: சுருதி - வேதங்கள், தேங்குக - (எங்கும்) நிறைந்திருக்கட்டும்: பைம்புயல் - கரியமேகம், வீழ்க - (வானத்தினின்று மழைநீரைப்) பொழியட்டும்; வளம் கெழுமனு நூல் - பல விஷயங்களும் நன்கு விளங்குகின்ற மனுதருமசாத்திரம், விளங்குக -(அதனிற் கூறப்பட்டுள்ள தருமங்கள் நடத்தப் பெறுதலால்) விளக்க முறட்டும்:அன்புஉடை - (கடவுளிடத்து) மெய்யன்புடைய, அடியவர் - அடியார்கள், மன்னு -மேற்கொண்டுள்ள, மா தவம் - சிறந்த தவம், வாழ்க - வாழட்டும்; (எ -று.) கடவுள் வாழ்த்துக் கூறிய கவி, இதனால், அறம் முதலியவற்றைச் செழிக்க வாழ்த்துகின்றார். உலகத்துக்கு நல்ல நெறியைப் போதித்தலே காவியத்துக்குப் பயனாதலால், அக்கருத்துத் தோன்ற 'எங்கும் நல்லறமே சூழ்க' என்பது முதலாகக்கூறினா ரென்னலாம். 5.- இதுமுதல் மூன்று கவிகள் - அவையடக்கம். அவையடக்கமாவது - அவையோர்க்குத் தான் அடங்கியிருக்கை: அவையத்தார்க்கு மனவெறுப்புமுதலியனதோன்றாமல் அன்னாரை அடங்குமாறு செய்தலெனினுமாம்: அங்ஙன் அவையடக்கத்தைத் தெரிவிக்கும் பாடல், அவையடக்கமெனப்படும். கன்னபாகமெய்களிப்பதோரளப்பிறொல்கதைமுன் சொன்னபாவலன்றுகளறுசுகன்றிருத்தாதை அன்னபாரதந்தன்னையோரறிவிலேனுரைப்பது என்னபாவமற்றென்னையின்றென்சொலாதுலகே. |
|