(இ-ள்.) 'மாநதி - சிறந்தநதியாகிய, எங்கள் - எங்களுடைய, அன்னை - தாயே!இங்கு - இங்கே, இழிந்த ஆறு - இறங்கிய காரணம், என்னை - யாதோ?' என்று-,அவள் அடி - அந்தக்கங்காநதியின் பெண்தெய்வத்தின் பாதங்களிலே, அவர் -அந்தவசுக்கள், வணங்கலும் - தொழுதவளவில்,- (அந்தக் கங்காதேவி), தன்னை -தனக்கு, அங்கு - பிரமலோகத்தில், அயன் இடு - பிரமதேவனிட்ட, சாபம் - சாபத்தை,கூறினாள் - சொல்லினாள்: பின்னை - பின்பு, அவர்உம் - அந்தவசுக்களும், அங்கு -அப்போது, தம்பெற்றி - தம்முடைய நிகழ்ச்சியை, பேசுவார் - சொல்பவரானார்கள்; (எ- று.)- வசுக்கள் தம் பெற்றி பேசுவதை மேல் ஆறுகவிகளிற் காண்க. இது, வசுக்கள் வினவவே, கங்காதேவி தன் சாபத்தைத் தெரிவித்தமை கூறியது.அன்னை - அண்மைவிளி: இயல்பு. அயன் - அஜன்: ஸ்வயம்பூ என்றதன்பொருளையுடைய வடசொல்: இனி, அகாரவாச்சியனான திருமாலினிடத்தினின்றுதோன்றியவனென உரைத்தலு முண்டு. (70) 63. | உற்றுறையெங்களு ளொருவன்றன்மனைப் பொற்றொடிக்கழிந்தவள் புன்மைவாய்மையாற் சற்றுமெய்யுணர்வறத் தகாதொன்றெண்ணினான் மற்றெழுவருமவன் வயத்தராயினேம். |
(இ - ள்.) உற்று - (வானத்துப்) பொருந்தி, உறை - வசிக்கின்றவரான, எங்களுள்-,ஒருவன் - ஒருத்தன் [பிரபாசனென்பவன்], தன் மனை - தன்னுடைய மனைவியாகிய,பொன் தொடிக்கு - பொன்னாலாகிய வளைய யணிந்தவள்திறத்தில், அழிந்து -(மனவுறுதி) தப்பி, அவள் புன்மை வாய்மையால் - அவள்கூறிய இழிவை யுடையபேச்சினால், சற்றுஉம் - சிறிதும், மெய்உணர்வுஅற - மெய்யுணர்வென்பதுஇல்லாதுநீங்க, தகாது ஒன்று - தகாததொருசெயலை, எண்ணினான் - (செய்யக்)கருதினான்: மற்று எழுவர்உம்- மற்றைஏழுபேரும், அவன் வயத்தர் ஆயினேம் -(தகாதஇச்செயலைச் செய்தல் வேண்டாஎன்று தடுக்காமல்) அந்தப்பிரபாசனுக்குஉடந்தையராக ஆயினோம்; (எ-று.)- ஆறுகவிகள் - ஒரு தொடர்: வசுக்களின்சாபவரலாறு.
பொற்றொடி -வேற்றுமைத்தொகையன்மொழி. எழுவராவார் - அனலன் அனிலன் ஆபன் சோமன் தரன் துருவன் ப்ரத்யூஷன் என்பவர். (71) 64, | தூநகைமொழிப்படி சோரராகியே வானவர்வணங்குதாள் வசிட்டன்வாழ்மனைத் தேனுவையிரவினிற் சென்றுகைக்கொளா மீனெறிகரந்தென மீளவேகினோம். |
(இ-ள்.) தூ நகை - வெள்ளியசிரிப்பையுடைய (பிரபாசனென்றவசுவினுடைய) மனைவியின், மொழிப்படி - பேச்சின்படி, சோரர் ஆகி - திருடராகி, - வானவர் வணங்கு தாள் வசிட்டன் வாழ் - தேவர்களும் வணங்குகின்ற பாதங்களையுடையனானவசிஷ்டமுனி வன்வாழ்கின்ற, மனை - மனையிலேயுள்ள, தேனுவை - பசுவை,இரவினில் சென்று - இராத்திரியிற்போய், கைக்கொளா - கவர்ந்து |