திருநாபி முதலிய பலஉறுப்புகள் தாமரைமலர்போலிருக்கப் பசுஞ்சாமத் திருமேனிநிறம்தாமரையிலை போலுதலால், 'பூங்கமல மலரோடையானையான்' என்றார். இடருற்றுத்தன்னையடைந்தோர்க்கு அவ்விடர் தவிர்த்துக் குளிர்ந்தகருணைசெய்பவ னென்பது, 'ஓடையனையான்' என்றதனால் விளங்கும். (683) 53.- கண்ணன் அருச்சுனனை வந்த காரியம் வினவித் துவாரகை சேர்தல். யதியாகியவணிருந்த தோழன்றன்னை யதுகுலநாயகன்பரிவோடி றைஞ்சவன்பால், அதியானநெடுஞ்சுருதி யாசிகூறி யாகமுறத்தழீஇ மகிழ்வுற் றாலநீழல், மதியார்செஞ்சடைமுடியோனென்னவைகிவந்தவாறுரைப்பநெடு மாலுங்கேட்டுத், துதியாடிக்காலையிலேவருதுமென்றுசொற்றிமைப்பின் மீளவும்போய்த் துவரைசேர்ந்தான். |
(இ-ள்.) யதி ஆகி அவண் இருந்த தோழன் தன்னை - சன்னியாசியாய் அவ்விடத்திலேயிருந்த நண்பனான அருச்சுனனை, யது குலம் நாயகன் - யதுகுலத்துக்குத் தலைவனான கண்ணன், பரிவோடு இறைஞ்ச - அன்போடு வணங்க,(அவ்வருச்சுனன்), அன்பால் - அன்போடு, அதி ஆன நெடுஞ் சுருதி ஆசி கூறி -மிகுதியான பெரிய வேதவாக்கியங்களைக்கொண்டு (கண்ணனுக்கு) ஆசீர்வாதஞ்செய்து, ஆகம்உற தழீஇ மகிழ்உற்று - (தன்மார்பிலே அவன்) மார்பு பொருந்தத்தழுவி மகிழ்ச்சியுற்று, ஆலம் நீழல் மதி ஆர் செம் சடை முடியோன் என்ன வைகி -ஆலமரத்தினது நிழலிலே சந்திரன் பொருந்திய சிவந்த சடையையுடையனானசிவபிரான்போல் வீற்றிருந்து, வந்தஆறு உரைப்ப - (தான்) வந்தகாரியத்தைச் சொல்ல, நெடுமால்உம் - மகாவிஷ்ணுவாகிய கண்ணபிரானும், கேட்டு -(அதனைக்) கேட்டு, துதி ஆடி - கொண்டாடி, காலையில் வருதும் என்றுசொற்று - 'மறுநாளுதயகாலத்தில் வருவோம்' என்று சொல்லி, இமைப்பில் மீளஉம் போய் துவரைசேர்ந்தான் - இமைப்பொழுதிலே திரும்பவும் சென்று துவாரகையை யடைந்தான்; தக்ஷிணாமூர்த்திவடிவமான சிவபெருமான் கைலாசகிரியிற் கல்லாலமரத்தின் கீழ்வீற்றிருத்தலை நூல்கள் கூறும். (684) 54.- மறுநாள்விடியுமுன் அம்மலையில் இந்திரவிழவுக்காகப் பலவேந்தர் சூழப் பலராமன் வருதலும் தோழியருடன் சுபத்திரை வருதலும். ஆதவன்வந்துதிப்பதன்முன்மற்றைநாளி லணிநகர்வாழ்சன மனைத்துமந்தக்குன்றின், மாதவனதேவலினான்மழைக்காலத்து வாசவற்குவிழாவயர்வான் வந்தகாலை, யாதவரிற்போசரின்மற்றுள்ளவேந்தரியாவருஞ்சூழ்வர நறுந்தாரிராமன்வந்தான், சூதடர்பச்சிளங்கொங்கைப்பச்சைமேனிச்சுபத்திரையுந் தோழியர்கள் சூழவந்தாள். |
(இ-ள்.) ஆதவன் வந்து உதிப்பதன் முன் - சூரியன்வந்துதோன்றுவதற்கு முன்னம் [பொழுதுவிடியுமுன்னமே], மற்றை நாளில்-, அணி நகர் வாழ் சனம் அனைத்துஉம் - அழகிய துவாரகையில் வசிக்கின்ற சனங்களெல்லாம், அந்த குன்றில் - அந்த இரை |