பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்41

கொண்டு, மீன் நெறிகரந்து என - மீன்சென்றவழி ஒளித்ததுபோல (ச் சென்ற
அடிச்சுவடும் தெரியாதபடி), மீள ஏகினோம் - மீண்டு (எம்மிடத்துக்குச்)
சென்றிட்டோம்; (எ -று.)

     நீரிற் சஞ்சரிக்கும்போது மீன் சென்று மீண்ட இடம் தெரியாமற்போவதனால்,
அவ்வாறுசென்றுமீண்ட தம்நெறிக்கு மீனின் நெறியை உவமை கூறினார். தூநகை
-பண்புத்தொகையன்மொழி. தேநு - வடசொல். வானவர் - வானத்திலுறைபவர்:
தேவர்.வசிட்டன் - இந்திரியத்தை வென்றவன்: தேஜசுள்ளவனென்றுமாம்.
'மீனெறிகவர்ந்தென 'எனவும்பாடம்.                            (72)

65.பசுக்கவர்ந்தனரெனப் பயிலுமாதவம்
முசுக்குலமனையமெய்ம் முனிவர்கூறலும்
சிசுக்களினறிவிலாச் சிந்தைசெய்தவர்
வசுக்களென்றருந்ததி மகிழ்நனெண்ணினான்.

     (இ-ள்.)பயிலும் மாதவம் - பழகுகின்ற பெருந்தவத்தையுடையரான, முசு
குலம்அனைய - முசுவென்னும்வானரசாதியை யொத்த மெய் - உடம்பையுடைய,
முனிவர் -முனிவர்கள், 'பசு கவர்ந்தனர் - பசுவை (யாவரோ) திருடிக்கொண்டு
போய்விட்டார்கள்,' என - என்று, கூறலும் - சொன்னவளவில்,- அருந்ததி
மகிழ்நன்-அருந்ததிக்குக்கணவனான வசிஷ்டமாமுனிவன், 'சிசுக்களின் - சிறு
குழந்தைகள்போல, அறிவுஇலா- ஆராய்ச்சியில்லாமல், சிந்தை செய்தவர் -
(திருடுமாறு) எண்ணியவர், வசுக்கள் - வசுக்களாவர்,' என்று-, எண்ணினான் -
ஞானதிருஷ்டியினாலறிந்தான்;(எ-று.)

     மயிர்வளர்ந்திருத்தலும் உடம்பு ஒட்டியிருத்தலும்பற்றியும், குந்தியிருக்கும்
தன்மைபற்றியும், முசுக்குலம், முனிவர்க்கு உவமை. முனிவர்கள்மீதுள்ள
வெகுளியால் 'முசுக்குலமனைய ' என்றனர். முசு - குரங்கன்சாதிபேதம். இலா -
இல்லாமல்: ஈறுகெட்ட எதிர்மறைக் குறிப்புவினையெச்சம்: இது சிந்தைசெய்தவர்
என்ற விடத்திலுள்ளசெய்தவரென்பதில் செய்என்ற வினையுடன் தொடரும்.
அருந்ததி -வசிஷ்டமுனிவரின்மனைவி.                            (73)

66.உம்பதமிழந்துநீ ருததிமண்ணுளோர்
தம்பதம்பெறுகெனச் சாபங்கூறலும்
எம்பதம்பெறுவதென் றினியெனாவவன்
செம்பதமெமதுபூஞ் சென்னியேந்தினேம்.

     (இ - ள்.) (தனது ஞானதிருஷ்டியினால் வசுக்கள் தேனுவைக் களவாடியதை
யறிந்த வசிட்டமுனிவன்),- 'நீர்-, உம்பதம் - உமது பதவியை
[வசுக்களாயிருப்பதை], இழந்து-, உததி மண் உளோர் தம் - சமுத்திரத்தினாற்
சூழப்பட்ட பூமியிலேயிருப்பவருடைய, பதம் - நிலையை, பெறுக - அடைவீராக,'
என-, சாபம் கூறலும்-,- 'எம்பதம் - எமக்குஉரிய பதவியை
[வசுக்களாயிருப்பதை], பெறுவது - (நாங்கள்)மீண்டும் அடைவது, இனி - இனி
மேல், என்று - எப்போது? ' எனா - என்றுவினவி,அவன் செம் பதம் -
அந்தவசிஷ்ட முனிவனின் அழகிய திருவடிகளை, எமது பூ