(இ-ள்.) தகைந்த போது - (இவ்வாறு அருச்சுனசன்னியாசி சுபத்திரையைக்) கைப்பிடித்த போது, உயிர்சேடியர் தவிர்க - உயிர்போன்ற தோழியரே! (இத்தன்மையைத்) தவிர்ப்பீராக,' என சில சொல் பகர்ந்து போய் - என்று சில வார்த்தைகளைச் சொல்லி விலகிச் சென்று, ஒரு மாதவி பந்தரில் புகுந்து - (அச்சுபத்திரை விசயனுடனே) குருக்கத்திப்பந்த லொன்றிலேபிரவேசிக்க, (பின்பு), புகுந்தநீர்மையை தேவகி அறியும் ஆ புகன்றார் - நடந்தசெயலை (அவள் தாயான) தேவகிஅறியும்படி சொன்னார்கள்; அகைந்த பல் பெரு கிளைஞரில் ஆர் கொல்ஓ அறிந்தார்- (இங்ஙனம் நிகழ்ந்த அச்செய்கையைத் தேவகியொருத்தி அறிந்தனளே யன்றி)நெருங்கின பல பெரியசுற்றத்தாரில் எவர்தாம் அறிந்தவர்? (எ-று.) புகுந்து - எச்சத்திரிபு. தவிர்க=தவிர்க்க: பிறவினையில்வந்த தன்வினை. இனி, இங்ஙன் கொள்ளாமல், உயிர்ச்சேடியர் தவிர்கெனச் சன்னியாசியை நோக்கிச் சொல்லி,சுபத்திரையுடனே மாதவிப் பந்தரிற் புகுந்து பின்பு தேவகிக்குத் தெரிவித்தாரென்றுஉரை கூறுவதும் உண்டு. 70-ஆம் செய்யுள் முதல் நான்குசெய்யுள்கள்அந்தாதித்தொடையமையவுள்ளன. (702) 72.- அந்நாளிற் கண்ணன் யாதவர் அனைவரையும் வேறுவியாஜத்தால் வேற்றிடத்துக்கு அழைத்துக்கொண்டு செல்லுதல். அறிவுறாவகையலாயுதன் முதல்வடமதுரை செறியும்யாதவர்யாரையுந் தன்னுடன்சேர்த்து மறிகொள்செங்கையன்விழாவயர் வான்பெருந்தீவில் உறியில்வெண்டயிருண்டவன் கொண்டுசென்றுற்றான். |
(இ-ள்.) அறிவு உறா வகை - (இச்செய்தியை) அறியவெண்ணாதபடி, அலாயுதன்முதல் வடமதுரை செறியும் யாதவர் யாரை உம் - பலராமன் முதலாக வடமதுரையில்(முன்பு) இருந்தவர்களான யதுகுலத்துவீரர்களெல்லாரையும், தன்னுடன்சேர்த்து -தன்னோடு கூட்டி, மறி கொள் செம் கையன் விழா அயர்வான் பெருந் தீவில்கொண்டு சென்று உற்றான் - மானை யேந்திய சிவந்த கையையுடையனானசிவபிரானுக்குத் திருவிழாச் செய்யும் பொருட்டு மகாத்வீப மென்ற இடத்துக்குஅழைத்துக்கொண்டுபோய்ச் சேர்ந்தான்: (யாவனெனில்),- உறியில் வெள் தயிர்உண்டவன் -(கோபஸ்திரீகள்) உறியில் வைத்திருந்த வெண்ணிறமான தயிரைஇளமையிற் களவாடி அமுதுசெய்தவனான கண்ணபிரான்; (எ-று.) 'வடமதுரை' என்றது, தென்மதுரையினின்று பிரித்துக்காட்டுதற்கு; இனம் விலக்கவந்த அடைமொழியடுத்த பெயர். த்வாரகையிலுள்ளார் யாவரும் வடமதுரையினின்று வந்தவ ராத லறிக. ஈற்றடி- கண்ணபிரான் ஏமாற்றுந் தன்மையனென்பதைத் தெரிவிக்கும். (703) 73 - அருச்சுன சுபத்திரைகள் பிதாவையும் அண்ணனையும் நினைக்க, இந்திரனும் கிருஷ்ணனும் அங்கு சேர்தல். உற்றகங்குலில்யாவருந் தணந்தவாறுணர்ந்து பெற்றதன்பெரும்பிதாவினை முன்னினன்பெரியோன் |
|