இதுமுதல் இச்சருக்கம் முடியு மளவும் பன்னிரண்டுகவிகள்- திரௌபதிமாலையிட்ட சருக்கத்து 73 - ஆம் கவிபோன்ற கலிநிலைத்துறைகள். (710) 80.- அச்செய்தியைக் கண்ணன் பலராமனுக்கு ஒருவாறு தெரிவித்தல். வென்றித்துவரைநகர்காவலர் தம்மைவென்று மன்றற்குழலினினையாளை வலிதினெய்திக் குன்றச்சிறகரரிந்தோன்மகன் கொண்டுபோனான் என்றப்பலற்குக்கடல்வண்ணனியம்பினானோ. |
(இ-ள்.) 'குன்றம் சிறகர் அரிந்தோன் மகன் - மலைகளின் சிறகுகளைத் துணித்திட்டவனான இந்திரனுடைய குமாரனாகிய அருச்சுனன், வென்றி துவரைநகர்காவலர் தம்மை வென்று - வெற்றியையுடைய துவாரகாபுரியைக் காவல்செய்தவர்களான வீரர்களை(ப் போரினாற்) சயித்து, மன்றல் குழலின் இளையாளை - நறுமணமுள்ள கூந்தலையுடைய (நமது) தங்கையை, வலிதின் எய்திகொண்டு போனான் - பலாத்காரமாகவந்துகொண்டுபோயினான்,' என்று-, அ பலற்கு -அந்தப்பலராமனுக்கு, கடல் வண்ணன் இயம்பினான் - கடல் போலுங்கருநிறமுடையனான கண்ணன் செய்திகூறினான்; (எ-று.) பலன் என்ற பெயர் - பலமுடையவ னென்று பொருள்படும். பலபத்ரன், பலதேவன், பலராமன் என்ற பெயர்களும் இதுபற்றியனவே. (711) 81.- உடனே பலராமன் சேனையுடன் அருச்சுனனைத் தொடர்ந்து போகுதல். சேலாம்பிறப்பிற்றிருமாலிது செப்புமுன்னே காலாந்தகனும்வெருவுந்திறற் காளைதன்னை நீலாம்பரனும்யதுவீர நிருபர்யாரும் நாலாம்படையோடெதிர்சூழ்ந்தமர் நாடினாரே. |
(இ-ள்.) சேல் ஆம் பிறப்பின் திருமால் இது செப்பும் முன்ஏ - மத்ஸ்யாவதாரஞ்செய்தவனான கண்ணபிரான் இவ்வார்த்தையைச் சொல்லு முன்னே[சொன்னவுடன் விரைவிலே], நீல அம்பரன் உம் - நீலவஸ்திரத்தை யுடையவனானபலராமனும், யது வீர நிருபர் யார்உம் - (மற்றும்) யதுகுலத்துவீரர்களானஅரசர்களெள்லோரும், நால் உம் ஆம் படையோடு - நால் வகைப்பட்டசேனையுடனே, கால அந்தகன் உம் வெருவும் திறல் காளை தன்னை -பிரளயகாலத்து யமனும் அஞ்சும்படியான வலிமையையுடைய வீரனான அருச்சுனனை,எதிர் சூழ்ந்து அமர் நாடினார் - எதிர்த்துச் சூழ்ந்து போர் செய்யத் தொடங்கினார்கள்;(எ - று.) யாதவவீரருடன் கூடிய பலராமன் அருச்சுனனுடன் பொர வேணுமென்று பெருஞ்சீற்றங்கொள்ள ஸ்ரீக்ருஷ்ணன்வார்த்தையாற் சாந்தநிலையை யடைந்தா னென்றுபாரதங்கள்கூறும். முன்னொருகாலத்திலே பிரமதேவன் கண்துயிலுகையில், சோமகனென்னும் அசுரன் வேதங்களை யெல்லாங் கவர்ந்துகொண்டு கடலினுள் மறைந்துசெல்ல, பிரமன்முதலிய தேவர்களின் வேண்டுகோளினால் |