பக்கம் எண் :

416பாரதம்ஆதி பருவம்

திருமால் ஒருபெருமீனாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனைத்
தேடிப்பிடித்துக் கொன்று, அவன் கவர்ந்துசென்ற வேதங்களை மீட்டுக்கொணர்ந்து,
பிரமனுக்குக் கொடுத்தனன் என்பது, மத்ஸ்யாயவதாரகதை. தனது
நிலையைக்குலைத்தாயினும் துஷ்ட நிக்கிரகசிஷ்டபரிபாலனஞ் செய்யும்
திருவருட்சிறப்புடையா னென்பது, 'சேலாம்பிறப்பிற்றிருமால்' என்றதனால்
விளங்கும்.                                                    (712)

82.- அருச்சுனன் சுபத்திரைக்குத் தேறுதல்கூறி
அனைவரையும் வெல்லுதல்.

அஞ்சேலமரினுமர்தம்மையு மாவிகொள்ளேன்
செஞ்சேலனையவிழியாயெனத் தேற்றியந்த
மஞ்சேயனையதடந்தேரவ ளூரவந்த
வெஞ்சேனைமுற்றும்புறந்தந்திட வென்றுபோனான்.

     (இ-ள்.) 'செம் சேல் அனைய விழியாய் - செம்மையான சேல் மீன்போன்ற
கண்களை யுடையவளே!  அஞ்சேல் - அஞ்சாதே; அமரில் - போரில், நுமர்
தம்மைஉம் ஆவி கொள்ளேன் - நின்சுற்றத்தாரையும் உயிர்கவரேன்,' என
தேற்றி -என்று (சுபத்திரைக்குத்) தேறுதல் கூறி, அந்த மஞ்சுஏ அனைய தட தேர்
அவள் ஊர- (விரைவினாலும் பரப்பினாலும்) மேகத்தையே போன்ற பெரிய
அத்தேரைஅச்சுபத்திரையே செலுத்த, வந்த வெம் சேனைமுற்றுஉம் புறம்தந்திட
வென்றுபோனான் -(தொடர்ந்தெதிர்த்துப் போர்க்கு) வந்தபயங்கரமான அந்த
யாதவசேனைமுழுவதும் (தோற்று) முதுகு கொடுக்கும்படி (அதனைச்) சயித்துச்
சென்றான். (அருச்சுனன்);

     ஒருவரையுங் கொல்லாமலே அனைவரையும் அஞ்சியோடும்படி செய்து
வெல்லும் அருந்திறமை, இங்கு விளங்கும். தனது கணவன் தனது பிறந்தகத்துச்
சுற்றத்தார் என்ற இருதிறத்தாரில் எவர்க்கேனும் தீங்குநேர்ந்திடுமே யென்று
இருதலைக்கொள்ளியினிடைப்பட்ட எறும்புபோல அஞ்சிய தனதுகாதலியினது
வருத்தத்தைத் தவிர்த்தற்கு, 'அஞ்சேல்' என அபயங் கூறினான். 'நுமர் தம்மையும்
ஆவிகொள்ளேன்' என்ற எச்சவும்மையால், எம்மையும் பாதுகாத்துக்கொள்வே
னென்றதைப் புலப்படுத்தினான்.                                    (713)

83.- தருமன்முதலியோர் எதிர்கொள்ள அருச்சுனன்
இந்திரப்பிரத்தஞ் சேர்தல்.

மடைபட்டவாளையகினாறு மருதவேலி
இடைபட்டதங்கள்வளநாடுசென் றெய்தியாங்குத்
தொடைபட்டதிண்டோளறன்காளை துணைவரோடு
நடைபட்டுருகியெதிர்கொள்ள நகரிபுக்கான்.

     (இ-ள்.) மடை பட்ட வாளை - நீர்பாயும் மடையிற் பொருந்திய
வாளைமீன்கள்,அகில் நாறும் - அகிற்கட்டையின் நறுமணம் வீசப் பெற்ற, மருதம்
வேலி இடை -கழனிகளாகிய மருதநிலத்துக்கு இடையிலே, பட்ட - பொருந்திய,
தங்கள் வளம் நாடு -வளப்பம் மிக்க தங்கள்நாட்டை, (நெடுநாளைக்குப்பின்),
சென்று எய்தி -போய்ச்சேர்ந்து, ஆங்கு - அவ்விடத்தில், தொடை பட்ட திண்
தோள் அறன் காளைதுணைவரோடு உருகி நடைப்பட்டு எதிர்