பக்கம் எண் :

அருச்சுனன்றீர்த்தயாத்திரைச் சருக்கம்419

மாம். 'பூதங்களைந்திற் குணமைந்தும் பொலிந்த வா போல்' என்றும் பாடம்.
வயின் -வயிறுமாம். மநுநீதி - வடமொழித்தொடர்; மநு - அவ்வரசனாற்
செய்யப்பட்டநூலுக்குக் கருத்தாவாகுபெயர்                    (718)

88.- அபிமந்யுவும் உபபாண்டவர்களும் படைக்கலந்
தேர்தல்.

அம்மாதுலனும்பயந்தோரு மழகின்மிக்க
இம்மாமகாருக்கியற்றும்விதி யேய்ந்தபின்னர்த்
தெம்மாறுவின்மைமுதலாய செயல்கள்யாவும்
கைம்மாறுகொண்டுநனிகைவரு மாறுகண்டார்.

     (இ-ள்.) அழகின் மிக்க இ மா மகாருக்கு - அழகிற்சிறந்தஇந்தப்
பெருமையுடைய (அபிமந்யுமுதலிய) குமாரர்களுக்கு, இயற்றும் விதி ஏய்ந்த
பின்னர் -செய்யவேண்டிய (ஜாதகருமம் நாமகரணம் அந்நப்பிராசநம் சௌளம்
முதலிய)கடமைகள் (சாஸ்திரவிதிப்படிஉரியகாலங்களிற்) செய்து முடிந்தபின்பு, அ
மாதுலன்உம்பயந்தோர்உம் - அந்தமாமனான கண்ணனும்பெற்றதந்தையரான
பாண்டவர்களும்,தெவ் மாறு வின்மை முதல் ஆய செயல்கள் யாஉம் -
பகைவர்கள்அழிதற்குக்காரணமான வில்வித்தை முதலான ஆயுதத்
தொழில்களெல்லாவற்றையும்,கை மாறுகொண்டு நனி கை வரும் ஆறு கண்டார் -
கற்பிப்பவரிடத்தினின்று(கற்பவரிடத்தே) மாறி நன்றாகப்பழகித் தேர்ச்சியடையும்படி
செய்தார்கள்; (எ-று.)

     மாதுலன் - வடசொல்; மாதாவினுடன் பிறந்தவன் - கண்ணன்
அபிமந்யுவுக்குமாதுலனாவன். கை - இடம். கை மாறுகொண்டு -
ஒருவர்க்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு என்றுமாம். இனி, கைம்மாறு
கொண்டு - கையிலே பிரம்புகொண்டுஎன்றுபொருள் கொண்டால், மிக்க
இளமைக்கு ஏற்ப விளையாட்டில்ஊக்கஞ்செல்லாதிருத்தல் வேண்டியும், மாமனும்
தாதையருமாகிற நெருங்கியஉறவுரிமைகாரணமாகப் பராமுகஞ்செய்யா
திருத்தல்வேண்டியும் அச்சுறுத்தற்குக்கையில் மாறுகொண்டு கற்பித்தன
ரென்க.                                                      (719)

89.- அவ்வறுவரில் அபிமந்யு சிறத்தல்.

அரிதிற்பயந்தவறுவோருளு மாண்மைதன்னால்
இருதுக்களின்மேலிளவேனிலின் றோற்றமேய்ப்ப
மருதுக்கிடைபோமதுசூதன் மருகன்வெம்போர்
விருதுக்கொருவனிவனென்ன விளங்கினானே.

     (இ-ள்.) இருதுக்களின்மேல் இளவேனிலின் தோற்றம் ஏய்ப்ப - ஆறுவகை
ருதுக்களுள் மேலான வசந்தருதுவினது தோற்றம்போல,- அரிதின் பயந்த
அறுவோருள்உம் - அருமையாகப்பெற்ற அந்த ஆறுபுதல்வருள்ளும், மருதுக்கு
இடைபோம் மதுசூதனன் மருகன் - (இரட்டை) மருதமரத்தினிடையே தவழ்ந்து
சென்றகண்ணனது மருமகனான அபிமந்யு, ஆண்மை தன்னால் -
ஆண்மைத்திறத்தினால்,வெம் போர் விருதுக்கு இவன் ஒருவன் என்ன
விளங்கினான் - கொடியபோர்வெற்றிக்கு இவனே ஒப்பற்றவ னென்னும்படி
(சிறப்புற்று) விளங்கினான்; (எ-று.)

   மதுஸூதநன் என்ற வடமொழிப்பெயர் - மது என்ற அசுரனைக் கொன்றவ
னென்றுபொருள்படும். மருதுக் கிடை போன கதை:-