சென்னி ஏந்தினோம் - எமது மலரை முடித்தற்குஉரிய சென்னியில் தாங்கினேம்; (எ - று.) எமதுசாபத்திற்கு ஒருவிமோசனம் ஏற்படுமாறு திருவருள் புரியவேணுமென்று வசிஷ்டமுனிவன் பாதங்களில் வணங்கினோ மென்றவாறு. உததி - நீரையுடையது: கடல்: வடசொல். (74) 67. | அன்புடைமுனிமுனி வாறிமானுடப் புன்பிறப்பெழுவரும் புரிந்துமீளுதிர் மின்புரைதெரிவைசொல் விழைந்தநீயவண் இன்பமற்றநேகநா ளிருத்தியென்னவே. | (இ - ள்.) அன்புஉடை - கருணையையுடைய, முனி - அவ்வசிட்ட முனிவன்,முனிவு ஆறி - கோபந்தணிந்து, "எழுவர்உம் - (தேனுவைக் கவர்தற்கு உடந்தையாயிருந்த) ஏழுபேரும், புல் மானுடம் பிறப்பு புரிந்து மீளுதிர் - புல்லியமானிடப்பிறவியையெடுத்து (உடனே உமது பதவிக்கு) வந்துவிடுங்கள்: மின் புரை தெரிவை சொல் விழைந்த - மின்னலைப் போன்ற [பேரொளிபடைத்த] மனைவியின் சொல்லை விரும்பிக் கேட்டுக் களவைப் பிரதானனாகஇருந்து செய்த, 'நீ-, அவண் - அந்தப்பூமியில், இன்பம் அற்று - பெண்ணின்பத்தை நீங்கி, அநேகம்நாள் இருத்தி - வெகுகாலம் இருப்பாயாக", என்ன - என்றுகூற, -(எ-று.) - "செல்வமும்...எண்மருமிழந்தனம்...என" என்று அடுத்த கவியோடு தொடரும். தெரிவையின்சொல்லை விழைந்து களவாடிய பிரபாசனுக்கு மானுடனாகித் தெரிவையின்பம்நீங்கி மண்ணுலகிற் பலநாளிருந்து பிறகு தன் பதவியையடையுமாறும், அவனுக்கு உடந்தையாயிருந்த மற்றையெழுவர்க்கும் பூமியில் மானுடப்பிறவி யெடுத்துஉடனே மீளுமாறும் சாபவிடை தந்தனன் வசிட்ட முனிவனென்க. (75) 68. | விண்வருசெல்வமும் விழைவுமேன்மையும் எண்மருமிழந்தன மென்சேய்வேமென மண்வருதையலை வணங்கத்தையலும் பண்வருமொழிசில பகர்ந்துதேற்றினாள். |
(இ - ள்.) (இங்ஙனம் வசிட்டமுனிவன் சபித்ததனால்), எண்மர் உம் - (வசுக்களாகிய நாங்கள்) எட்டுப்பேரும்,- விண் வரு செல்வம்உம் - சுவர்க்கலோகத்துப்பெறுமாறுவருகின்ற ஐசுவரியத்தையும், விழைவு உம்- போகத்தையும், மேன்மைஉம் -சிறப்பையும், இழந்தனம்- இழந்திட்டேம்: என்செய்வேம்- (இனி) என்செய்யமாட்டுவேம்? என - என்று, மண் வரு தையலை வணங்க - பூமியிலிழிகின்றகங்காதேவியை வணங்க, தையல்உம் - அந்தத் தேவியும், பண் வருமொழிசில -இராகத்தையொத்த சிலசொற்களை, பகர்ந்து - சொல்லி, தேற்றினாள்- (அவர்களுடையமனவருத்தத்தைச் சிறிது) ஆறச் செய்தாள்; (எ -று.) - கங்கையாள் தேற்றுவதைமேலிரண்டு செய்யுள்களிற் காண்க. (76) 69. | வலத்துயர்தடம்புய வருணனுங்குரு குலத்தினிலயன்வரங் கொண்டுதோன்றுமால் |
|